சங்ககாலத்தில் கட்டிலும், சேக்கையும் (மெத்தையும்)...!

சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.

மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.

அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.

உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.

நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
அரண்மனைப் படுக்கையறை (அந்தப்புரம்) அமைப்பு அதில் இருந்த கட்டிலின் வேலைப்பாடு, விரித்திருந்த சேக்கையின் (மெத்தை) மென்மை, ஆகியவற்றை அறியும்போது நமது வியப்பு மேலும் கூடுகிறது.
▪︎ படுக்கை அறை:

படுக்கை அறையில் யவனர்களால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட பாவை விளக்கின் கையில் ஏந்திய தகளியில் (அகலில்) மகளிர் நெய்விட்டு, பருத்த திரியைப் பொருத்திக் கொளுத்தி எரியச் செய்தனர்.
அம்மகளிர் அகல்களில் நெய் குறையும் போது நெய் ஊற்றியும், ஒளி மங்கும்போது திரியைத் தூண்டியும் விளக்குகளைத் தொடர்ந்து எரியச் செய்தனர்.

இப்பகுதி மட்டுமின்றி இது போன்றே ஏனைய பகுதிகளிலும் இருள் நீங்க விளக்குகள் எரிந்த வண்ணம் இருந்தன.
அப்படுக்கையறைப் பகுதி மன்னன் #பாண்டியன் அன்றிப் பிற ஆண்கள் அணுக இயலா நிலையில் இருந்தது.

• கட்டில் அமைப்பு:

கீழே காணும் பாடலடிகள் #பாண்டில் எனப்படும் கட்டில்களை நுண்ணிய தொழில் நுட்பத்துடன் #தச்சுத்தொழில் வல்லார் அமைத்திருந்தனர் என்பதைப் புலப்படுத்தும்.
நாற்பது வயது நிரம்பிய, போரில் விழுப்புண்பெற்று இறந்த யானையின்,

தாமே விழுந்த தந்தங்களைக் கனமும் செம்மையும் ஒப்பச் செதுக்கி,

அவற்றில் கூர் உளி கொண்டு இலைகள் போன்று செதுக்கியும்,

சூல் முற்றிய மகளிரின் முலை போன்ற குடங்களை அமைத்தும், உள்ளிப் பூண்டு போன்று...
... கட்டில் கால்களின் அடிகளை அமைத்தும் #வட்டக்கட்டில், #கச்சுக்கட்டில் என்றவாறெல்லாம் அழைக்கப்பெற்ற எழில்மிகு கட்டில்களை அமைத்தனர்.

இன்றும் கட்டில்களின் கால்கள், இருக்கைகளின் கால்கள் ஆகியவற்றில் இடைஇடையே பருத்த குடங்குளைக் கடைந்தும் காலின் அடிப்பாகம்...
... உள்ளிப்பூண்டின் பருத்தபாகம் மேல் அடிப்பாகமுமாக இருப்பது போன்று அமையுமாறு செய்யப்படுதல் நினையத் தகும்.

அழகுணர்விலும், மரபுவழித் தொடர்வதை அறிகையில் மகிழ்ச்சி அடைகிறோம்.
பருத்த குடங்கள் போன்றும் உள்ளிப் பூண்டின் உரு போன்றும் வடிவமைக்கக் கடைசல் எந்திரங்கள் போன்ற இக்காலத்திய தொழில்நுட்பக் கருவிகள் சங்க காலத்தில் இல்லை.

எனவே அக்காலத்தில் இந்த எழில்மிகு வடிவங்களைக் கைவினை நுட்பம் கொண்டே அமைத்திருப்பர் என்பதே நம் ஊகம்.
அக்காலத்தில் தச்சர்களின் இதுபோன்ற நுட்பம் நம்மைப் பெருமிதம் அடையச் செய்கிறது.

இங்ஙனம் தச்சுத் தொழில்நுட்பம் மிகுந்த கட்டில்கள் மேலும் அணி செய்யப்பெற்றன.

அக்கட்டில்களில் அழகாகத் தொகுக்கப்பட்ட முத்து மாலைகள் சாளரங்கள் போன்று தொங்கவிடப்பட்டிருந்தன.
புலிவடிவம் பொருந்திய பூத்தொழிலை உடைய தகடுகளால் மேற்புறம் வேயப்பட்டிருந்தது.

பல்வகை நிறங்கள் ஊட்டப் பெற்ற மயிர்களை உள்ளடக்கியதால், சிங்கம் வேட்டையாடுவது போன்றும், பல்வகை மலர்கள் மலர்ந்தது போன்றும் ஓவியம் தீட்டப்பெற்ற போர்வைகளால் போர்த்தப்பட்டிருந்தன.
▪︎ மென்மை மிகு மெத்தைகள்:

அணி செய்யப்பெற்ற கட்டில்களில் மென்மை மிகு மெத்தைகள் விரிக்கப்பட்டன.

இம்மென்மையை எவ்வெவ்வாறெல்லாம், எவ்வெப்பொருள்கள் கொண்டு உருவாக்கினர் என்பதைச்
பின்வரும் சங்கப்பாடல்கள் வழி அறியக்கூடும்.
அன்னப்பறவைகள் புணரும்போது உதிர்ந்த சிறகுகளை இணைத்து அழகுபட விரித்து,

அதன்மேல் தலையணை சாயணைகளை வைத்து, நன்கு கழுவப்பட்டுக் கஞ்சியிட்ட துகிலின்மீது மலரிதழ்கள் வைத்து மணமூட்டி சேக்கைகள் அமைக்கப்பட்டிருந்தனவாம்.
அன்னத்தின் சிறகுகளைக் கொண்டு மென்மைமிகு சேக்கைகள் அமைக்கப்பட்டன என்பதைச் சங்கப் பாடல்கள் பலவற்றில் காணலாம்.
சேவலும் பெட்டையுமாய் அன்னங்கள் புணர்கின்ற போது அவை எய்தும் இன்ப உணர்ச்சி மிகுதியால் வயிற்றுப் பகுதியினின்றும் தாமே உதிரும் மென்மையான தூவியை, நீலப்பட்டுத் துணியை இரட்டையாய் மடித்துத் தைத்து, அதனுள் திணித்து அமைக்கப்பட்ட மென்மையான மெத்தைகள்.
இதன் பொருள், அழகிய அன்னத்தின் மெல்லிய சிறகினாலான அகன்ற மெத்தை என்பதாம்.

'நுரை முகந் தன்ன மென்பூஞ் சேக்கை' (அகம்-93:13)

நுரையை முகந்து வைத்தாற் போன்ற மெல்லிய பூக்களாலான மெத்தை மேற்கண்ட அகநானூற்று அடி இன்றைய நுரை மெத்தையை (Foam bed) நினைவூட்டும்.
இவ்விடத்து,

'ஐந்து மூன் றடுத்த செல்வத் தமளி' (சீவக சிந்தாமணி: 838)

என்ற சீவக சிந்தாமணி அடியும் எண்ணத்தகும்.

சிறுபூளை, செம்பஞ்சு, வெண்பஞ்சு, சேணம், அன்னத்தூவி ஆகிய மென்மையான இவ்வைந்தையும் கொண்டு அமைக்கப்பட்டது #சேக்கை.
இதுபோன்ற மெத்தைகள் அரண்மனைகளிலும் செல்வர்கள் இல்லங்களிலும் பயன்படுத்தப்பட்டன.

மற்றையோர் உறங்கும் படுக்கை பற்றியும் சில குறிப்புகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன.

அக்காலத்தில் மான் தோலைப் படுக்கையில் விரித்து அதன் மேல் உறங்கியமையைப் பின்வரும் பாடல் அடி உணர்த்துகிறது.
'மான்தோல் பள்ளி மகவொடு முடங்கி' (பெரும்.89)

மான் தோலாலாகிய படுக்கையில் தன் பிள்ளையோடு உறங்கினாள் தாய் என்பது இதன் பொருள்.

வரகுக் கற்றையாலே வேயப்பட்ட குடிசையில் கழிகளைத் தலையணையாகக் கொண்ட படுக்கையில் தோலை விரித்துத் தங்கும் இடையர்களுடைய படுக்கையை இது சுட்டுகிறது.
'கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பின் அதளோன் துஞ்சும்' (பெரும்ப.150-151)

#இடையன் தான் உறங்கப் பயன்படுத்திய படுக்கை உடலில் உறுத்தாமை வேண்டித் தோற் பாயல் விரித்துப்படுத்தான்.

இவ்வாறு தோற் பாயலின் உறங்கியமையின் #இடையர்கள் அதளர் எனப்பட்டனர்.
(அதள் - தோல்) கட்டில்களில் காணப்பட்ட கலை நுணுக்கம், நுரைபோன்ற மென்மையான மெத்தை, உடலை உறுத்தாமல் இருக்கத் தோல்விரித்த படுக்கை ஆகியவை, சங்ககால நாகரிக மேம்பாட்டை உணர்த்துவன எனக்கொளல் மிகையன்று.

- நன்று.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தஞ்சை ஆ.மாதவன்

தஞ்சை ஆ.மாதவன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @ThanjaiMadhavan

Apr 24
சங்ககாலத்தில் கண்ணாடி தொழில்நுட்பம்...!

#கண்ணாடி இரு வகையது. ஒன்று ஒளி ஊடுருவும் தன்மையது, மற்றொன்றோ ஒளியை எதிரொளிப்பது. பின்னதை முகம் பார்க்கும் கண்ணாடி என்பர்.

இவ்விருவகைக் கண்ணாடிகளுமே சங்ககால மாந்தர் அறிந்தவை, பயன்படுத்தியவை என்பனவற்றைச் சங்கப் பாடல்கள்வழி அறிகிறோம்.
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.

ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.

தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
Read 16 tweets
Apr 21
சங்க காலத்தில் #பொற்றொழில்!

உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

பண்டைக் காலம் முதலே அறியப்பட்ட உலோகம் #பொன்.
இவ்வுலோகம் #பொன் என்றும் #பொலம் என்றும் இரு சொற்களால் சங்க இலக்கியங்களில் பயிலப்படுகிறது.

"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியோடு பெயரும்" (அகம் 149:9,10)

▪︎ கறி - மிளகு

#யவனர் செய்த அழகு மிகு மரக்கலங்கள் #பொன் கொணர்ந்து இறக்கி, #மிளகு ஏற்றிச் செல்லும்.
'ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன' (அகம்- 364:4)

(சிவந்த பொன்னினால் ஆகிய அணிகலன்களைத் தொங்க விட்டாற் போல)

மேற்கண்ட அடிகளில் #பொன் என்னும் சொல் ஆட்சி பெற்றுள்ளது.

பொதுவாக #இரும்பு போன்ற உலோகங்களையும் #பொன் என்ற சொல்லால் குறிப்பிடுவதைச் சங்கப் பாடல்களில் காணலாம்.
Read 20 tweets
Apr 17
பழந்தமிழர்களின் #கட்டுமானவியல் தொழில்நுட்பம்!

சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.
#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.
க) மனை அமைப்பு:

#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.
Read 10 tweets
Apr 13
வைகைப் பெருவழி!

ஆற்றங்கரை வழியாகச்சென்ற வைகைப் பெருவழியை வைகைவெளியில் கிடைத்த தொல்லியல் சான்றுகள், சமணத்தடயங்கள் மூலமாகக் கண்டுகொள்ள முயல்வோம்.

முசிறி, தொண்டி, கொற்கை, அழகன்குளம், பூம்புகார், அரிக்கமேடு, கோடிக்கரை முதலிய துறைமுகங்களிலிருந்து மதுரைக்குப் பெருவழிகள் சென்றுள்ளன.
வட இந்தியாவிலிருந்து மதுரை வழியாகக் கன்னியாகுமரி வரை வரும் தட்சிணப் பெருவழியும்,

பாலக்காட்டுக் கணவாயிலிருந்து கிழக்கு நோக்கி வந்து மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் பெருவழியும்,

கொங்கு நாட்டிலிருந்து அயிரை மலை, பழநி வழியாக மதுரைக்குச் செல்லும் கொங்குப் பெருவழியும்,
கொடைக்கானல் மலை நாட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் மலைநாட்டுப் பெருவழியும்,

சோழ நாட்டிலிருந்து பொன்னமராவதி, திருமயம் வழியாகவும், கிழக்குக் கடற்கரையை ஒட்டி மணல்மேல்குடி வழியாகப் பாண்டிய நாட்டிற்குள் நுழையும் பெருவழியும்,
Read 7 tweets
Apr 12
பண்டைய பெருவழிகளும், வைகைப் பெருவழியும்...!

வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.

அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.

முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.

தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Read 28 tweets
Apr 11
A Thread on Standards of Moral Conduct...!

Early Tamil society had evolved some conception of true love and norms of moral conduct. The lapses and the protests they provoked reveal the ideals held in view.

The virtues of immaculate love and true partnership in life between...
...the husband and wife find their echo in several verses of #Narrinai. One of these states that even poison offered by a real lover would not be rejected: (Stanza 355).

In passing it may be mentioned that below lines bear a tinge of similarity with the precept in Kural-586.
Love of a high order which promotes unbounded courage and unselfish sacrifice was known and appreciated.
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(