ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்,
“இவ்வுலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு, “என்ன மூன்று விதமான
மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை! ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்றார் கருடன்.
"அப்படியானால்
அவர்களைக் கூறு" என்றார் மகாவிஷ்ணு.
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.” என்றார் கருடன்.
"சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார் மகாவிஷ்ணு.
"#முதலில் பறவையும் அதன் குஞ்சுகளும் எப்படியென்றால் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துவிட்டு அதன் குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போகிறது. அது சென்று வருவதற்குள் பாம்புகளும் மற்ற பறவைகளும் தனது உணவாக அந்த குஞ்சுகளையே உண்டு விடுகிறது, காணாமல் போன குஞ்சுகளுக்காக பறவை பெரிதாக கவலை
படுவதில்லை, இருப்பதற்கு உணவு ஊட்டும். அதுபோல் குஞ்சுகளுக்கும் தன் வாயில் ஊட்டப்படும் உணவு தான் தெரியும், தன் தாய் யார், தகப்பன் யார் போனது வருமா வராதா எதுவும் தெரியாது, நாளானவுடன் பறக்க முயற்சி செய்து கீழே விழுந்து மடியும், மீந்து போன பறவை வாழும் வரை வாழும், அவ்வளவு தான். இந்த
வகை மனிதர்கள் இது போலத்தான் ஏழ்மையுடன் போராட்டம், வேலை செய்வார்கள், கிடைத்ததை உண்பார்கள், இல்லையா பட்டினி கிடப்பார்கள், அவர்களுக்கு உன்னைப் பற்றியே கூட தெரியாது. வாழ்வார்கள், வாழும் வரை அவ்வளவ தான்.
#இரண்டாவது பசுவும் கன்றும் எப்படியென்றால், பசு ஓரிடத்தில் கட்டப்பட்டிருக்கும்,
அதன் கன்று ஓரிடத்தில் கட்டப் பட்டிருக்கும். கன்று, பசுவைப் பார்த்து சப்தமிடும், பசு கன்றினைப் பார்த்து சப்தமிடும், கன்றுக்கு தெரியும், தாயின் மடியிலிருக்கும் பால் அருந்தினால் தான் பசி அடங்கும் என்று. ஆனாலும் அதன் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு முழம் கயிறு அதனை அதன் தாயிடம் செல்ல
விடாமல் தடுக்கிறது, கன்று இழுத்து இழுத்துப் பார்த்து ஏங்கித் தவிக்கும். அது போல் ஒரு சாராருக்கு உன்னைத் தெரியும், உன் வழி தெரியும், உன்னால் தான் மனித வாழ்வே நிரந்திர சுகம் பெறும் என்பதும் தெரியும், ஆனாலும் உன்னிடம் வர
முடியாமல் பாசம் என்ற ஒரு முழ கயிற்றில் மாட்டிக்கொண்டு உன்னை
பார்த்து பார்த்து ஏங்கி தவிக்கும்.
#மூன்றாவது கணவனும் மனைவியும் எப்படியென்றால் முன் பின் அறியாத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவன், அவளிடம் முகம் கொடுத்து கூட பேசமாட்டான், அவளைப் பிடிக்காமல் ஒதுங்கி ஒதுங்கி போவான், ஆனால்
அவளோ, அவனைப் பார்த்த நாளிலிருந்து அவன் நினைவால் இருந்து
அவனுக்கு பிடித்த வகையில் உடையுடுத்தி, அவனுக்கு பிடித்த வகையில் உணவு சமைத்து, அவனுக்கு பிடித்த வகையில் தன்னை அலங்கரித்து கொண்டு தான் அவனுக்காகவே பிறந்தவள் என்பதை
அவனுக்கு உணர்த்தி அவனை தன் பக்கம் ஈர்ப்பாள், முதலில் வெறுத்த அவன் ஓராண்டுக்குள் அவள் அன்பில் கரைந்து அவள் செல்லும் இடம்
எல்லாம் செல்கிறான், அவளை பிரிய மறுக்கிறான். அது போல ஒரு சாரார் உன்னை கண்டதில்லை, ஒரு நாள் யாராவது ஒருவர் மூலமாக உணர்த்தப் பட்டு உன்னை காண முற்படும் வேளையில், உனக்கு பிடித்த உடை, உணவு, அலங்காரம் என்று தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். முதலில் சோதிக்கும் நீ எங்களின் தூய்மையான அன்பில்
கரைந்து எங்களோடு வருகிறாய், எங்களோடு உறவாடுகிறாய், உன்னோடு எங்களை ஐக்கியப்பட அனுமதிக்கிறாய். நாங்களும் ஆனந்தமாக உன்னோடு கலந்து விடுகிறோம். ஆக மூன்று விதமான மனிதர்கள் தான் உலகில் உள்ளனர்”என்றார் கருடன். மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை வாழ்த்தினார்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 28
#பகவான்ரமணர் இன்று ஶ்ரீ ரமண பகவானின் ஆராதனை தினம். அவரை தியானிப்போம். ரமணர் ஆத்ம விசாரம் சொன்னார். ஆனால் ‘ரமண பெரிய புராணம்’ என்ற அவரின் பக்தர்களின் சரிதத்தை படித்தால், ரமணர் நமக்கு தான் நிறைய அனுக்கிரகம் செய்திதுப்பது புலப்படும். சின்னக் குழந்தையிலேயே அவருக்கு பளிச்சென்று ஞானம்! Image
அதற்கு முன் அவர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள் முன் நின்றுகொண்டு கண்ணில் நீர் வழிய உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறியிருக்கார். அவருக்குத் தாபம் இருந்ததால், அருணாசலேஸ்வரர்
கூப்பிட்டார். ஓடிவந்து அப்பா என்று அருணாசலேஸ்வரரை கட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு, ஞானசூரியனா உட்காந்து கொண்டார். அவரிடம் வந்தவர்களுக்கெல்லாம், அவர் அந்தந்த ஜீவனுடைய தகுதிக்கு ஏற்ப வழிநடத்தினார். நிறைய பேர், அவரை சரணாகதி பண்ணி சத்கதியை அடைந்தார்கள். ஒரு லக்ஷ்மிங்கிற பசுமாடு,
Read 11 tweets
Apr 28
#மகாபெரியவா மகா பெரியவா க்ஷேத்ர யாத்திரை பண்ணிக் கொண்டு இருந்த காலகட்டம் அது. வழியில திருவாரூர் பக்கத்துல ஒரு ஊர்ல முகாமிட்டிருந்தார் பெரியவா. அங்கே அவரை தரிசிக்க பக்தர் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார். மகான் முன்னால் வந்து நின்னவர், தன் இரண்டு மகன்களை மகாபெரியவளிடம் Image
ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார். வாத்ஸல்யத்தோட குழந்தைகளை ஆசிர்வதித்த பெரியவா, "உங்களுக்கு ஏதாவது ஸ்லோகம் தெரியுமோ" என்று கேட்டார். அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த மாதிரி இரண்டு குழந்தைகளும் தெரியுமே என்று கோரசாக கூறினர். பெரியவா குறிப்பிட்ட ஒரு துதியோட பேரைச் சொல்லி, அது
தெரியுமா என்று கேள்வியை முடிப்பதற்குள் இருவரும் மளமளவென்று சொல்ல ஆரம்பித்தனர். ஸ்லோகத்தைச் சொல்லி வரும்போது இரண்டு பேரில் சின்னவன் திணறாமல், யோசிக்காமல் கடகடவென்று சொன்னான். பெரியவன் கொஞ்சம் யோசித்து, தடுமாறி சொன்னான். அவர்கள் சொல்லி முடிக்கற வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த
Read 11 tweets
Apr 28
#MahaPeriyava
Periyava visited the house of a very rich and distinguished man in a village in Tanjore district, all of a sudden. It was a surprise visit and so arrangements had not been made to welcome Him. Periyava did not wait for the members of the family to escort Him around Image
the house, but walked through the courtyard, the hall, the corridor and looked around everywhere. Hearing of Periyava’s visit, the head of the family came rushing back home. One room in the house had been locked. Periyava told the gentleman to unlock the door and show him the
room. The gentleman hesitated to do so and stood there, looking confused. Periyava would not give up. He sat down outside the locked room. He had no option but to open the locked room. Inside the locked room was their cook, who had been imprisoned on charges of theft. As soon as
Read 6 tweets
Apr 28
#கந்தகோட்டம் #உத்சவமூர்த்தி
கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிற்ப சாஸ்திர வல்லுநரிடம் உத்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். அவரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் ImageImage
மினு மினுவென மின்னியது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் நிர்வாகிகள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் வெளித் துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்கள் என்றால் ImageImage
சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர். தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவு தான் மின்சாரம் தாக்கியவர் போல தூரப் போய் விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கி வைத்து Image
Read 11 tweets
Apr 28
#மாமனிதர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவனும் Image
வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர். அப்போது ஒரு மாணவன், நான் குதிரை வண்டிக்காரனாவேன் என்று கூறினான். சுற்றியிருந்த மாணவர்கள் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை
கூறினான். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய், நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம் என்று காஎட்டார். “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும்
Read 14 tweets
Apr 27
அம்மா என்கிற ஸ்தானம் ரொம்ப உயர்ந்தது. ஒருவர் சன்யாசி ஆகிவிட்டால், உலகத்தில் உள்ள எல்லாரும் அவரை நமஸ்காரம் செய்யணும், அவருடைய அப்பா உட்பட. ஆனால் ஒரு சன்யாசி தன் அம்மாவைப் பார்த்தால், அந்த சன்யாசி அம்மாவை நமஸ்காரம் செய்யணும் என்கிற நியதி உள்ளது. ஒரு சன்யாசி, தன் அம்மா அப்பா இரண்டு Image
பேரும் காலமாகி விட்டார்கள் என்று கேள்விப்பட்டால் கட்டின துணியோட ஸ்நானம் செய்யணும் என்பது சாஸ்திரம். மற்ற உறவுக்காரர்கள் யாருக்காகவும் ஒரு தலை முழுகல் கூட கிடையாது. ஒரு நாள் மகா பெரியவா, வாக்யார்த்தம் செய்துகொண்டு இருக்கும்போது ஒருவர் தந்தி எடுத்து கொண்டு வருகிறார். “கும்பகோணத்துல
இருந்து தந்தியா?” என்று பெரியவா கேட்கிறார். அவர் ஆமாம் என்று சொல்கிறார். மஹாலட்சுமி அம்மா முக்தி அடைந்து விட்டார். பெரியவா எழுந்து கொண்டு பக்கத்தில் இருந்த ஓர் அருவியில் போயி ஸ்நானம் செய்கிறார். அதற்குள் விஷயம் பரவி 100 பேர்கள் சேர்ந்து போய் அந்த புண்யவதிக்காக அந்த அருவியில்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(