படத்துல மூணு பேரு ,அது தவிர 4-5 துணைகதாபாத்திரங்கள்னு எல்லாரையும் எவ்வுளோ நல்லா மனசுல பதிய வைக்க முடியுமோ அந்த வேலைய பொறுமையா முதல் பாதில பண்றாங்க. character establishment முடிஞ்சதும் entertainment தான் இடைவேளை வரைக்குமே. - 1/n
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா, மாறன், கிங்ஸ்லே, பிரபு என எல்லோருமே நிறைவான நடிப்பு. பின்னனி இசை பாடல்களும் படத்துக்கு பெரிய பலம். நானும் ரௌடி தான், குஷி படத்துல இருந்து மறுஆக்கம் செய்யபட்ட காட்சிகள் சும்மா ஏதோ Spoof போல வராம கதைக்கு தேவையான இடத்துல அரங்கமே அதிர வருகிறது. -2/n
மூணு பேரோட பின்னனி கதைல விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா அளவுக்கு சமந்தாவுக்கு கதை இல்லையெனினும் தன் நடிப்பில் அதை சமன் செய்து விடுகிறார். பப்லியாக நடித்து சமந்தா ஸ்கோர் செய்தால் சவாலான காட்சிகளில் தன் பாணியில் வித்தியாசமாக நடித்து விசேவும் ஸ்கோர் செய்கிறார். -3/n
படத்தின் வசனங்களும் சரியான இடங்களில் நெகிழவும் சிரிக்கவும் வைத்தன. பாடல்கள் படமாக்கபட்ட விதத்தில் two two பாடல் இசையில் இருந்த துள்ளல் காட்சிகளில் இல்லை. மற்ற பாடல்கள் அனைத்துமே நன்று.
விஜய் சேதுபதி அதிர்ஷ்டமற்றவனு சொல்றதுக்கு வர படத்தின் ஆரம்ப காட்சிகள், விசே நயன்தாராவை -4/n
இந்தியா முழுக்க டிரைவ் கூட்டி போகும் அந்த காட்சி வசனங்கள், overbridgeல விசே சமந்தா பேசிகொள்ளும் காட்சி, சமந்தா நயன்தாரா இடையே ஏற்படும் புரிதல்னு படத்துல நான் ரசித்த காட்சிகள் நிறைய. ராம்போ சிறுவயது காட்சிக்கெல்லாம் ஒரு டோன், கண்மனியோட இருக்கும் பகல் நேர காட்சிகளுக்கு - 5/n
ஒரு டோன், கதிஜாவோட இரவு நேர காட்சிகளுக்கு ஒரு டோன்னுனு ஒரு ரொமேன்டிக் காமெடிக்கு அச்சத்தலான ஒளிப்பதிவு.
இடைவேளை முடிஞ்சதும் கதையை வைத்துகொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் திரைகதை தடுமாறியது. சுற்றி சுற்றி ஒரே மாதிரியான காட்சிகள் வந்தது சற்று சலிப்பை ஏற்படுத்தியது. -6/n
ஆங்காங்கே ரசிக்கும்படி சின்ன சின்ன காட்சிகள் வந்தாலும் முதல் பாதியில் இருந்த உணர்வு இடைவேளைக்கு பிறகு இல்லை. முதல் பாதியில் வித்தியசமாக தெரிந்த விஜய் சேதுபதியின் குடும்பத்தை பற்றிய விஷயங்களே இரண்டாம் பாதியில் ஒவர்டோஸாகி படத்தின் பலவீனமாக தெரிந்தது. அதில் இருந்த செயற்கைதனமே - 7/n
அதற்கு முக்கிய காரணம். கதிஜாவின் தந்தை மரணத்தின் பிறகு வரும் காட்சி, ரேம்போவின் அம்மா உடல்நிலை சரியில்லாதபோது கதிஜா கண்மனியிடம் பேசும் காட்சி என எமோஷனலாக நகர்ந்திருக்க வேண்டிய இடங்களில் வித்தியசமாக காமெடி செய்கிறேன் என்று நன்றாக ஒடி கொண்டிருந்த படகில் விக்னேஷ் சிவனே -8/n
இரண்டு ஓட்டை போட்டு விடுகிறார்.
இடைவேளைக்கு பிறகு வந்த சில காட்சிகளெல்லாம் பார்த்துட்டு, ரேம்போவை துரத்தி விட்டுட்டு கண்மனியும் கதிஜாவும் காதலிக்க போறாங்கனு நினைச்சேன். ஆனா அப்படியெல்லாம் படத்தை முடிச்சு இந்த சமூகம் ஏத்துக்க படத்துலயே கண்மனி சொல்ற மாதிரி ஒண்ணு நாம சில - 9/n
வருஷங்கள் முன்னாடி போய் யோசிக்கனும் இல்ல பல வருஷங்கள் பின்னாடி பிறந்து இருக்கனும் (போற போக்குல பூமர் அங்கிள்ஸ்க்கு ஒரு குட்டு).
புரிதல்-இணைதல்-பிரிதல்னு விண்ணைதான்டி வருவாயா உட்பட அனைத்து காதல் படங்களின் அதே டெம்ப்ளேட் தான் இங்கயும். என்ன ஒரு பெண்ணுக்கு பதில் இரண்டு பெண்.- 10/n
I love you tooகு பதில் I love you two. KGFக்கும் இந்த படத்திற்கும் கூட ஒரு ஒற்றுமை இருக்கு. கதநாயகன் பண்ற அநியாயத்தை எல்லாம் நியாயபடுத்த இவங்க use பண்ண ஆயுதம் அம்மா சென்டிமென்ட்.
ஓரு ஆணின் வாழ்க்கையில் இரண்டு பெண் வந்தால் காதல், திருமணம், காமம்னு எதுவுமே இல்லாமல் அவர்கள் - 11/n
இருவரையும் ஓரே அளவு ஒருவனால் நேசிக்க முடியம்னு சொல்ல வந்திருக்காங்க எனக்கு தெரிஞ்சு. ஆண் பெண் காதல் காமம்லாம் தாண்டி சில உயிர்களுக்கு நடுவுல ஏற்படுற அன்பை பேசிருக்கலாம். ஆனா சில வசனங்களும் காட்சிகளும் அதுக்கு முரணா அமைஞ்சதால சொல்லனும்னு நினைச்ச விஷயமே அர்த்தமற்று போயிடுது. -12/n
ஒரு ஆண் இரண்டு பெண்ணை காதலிக்கிறான்ற ஒரு வரிக்கு அதற்கான காரணங்களும் அதற்கான முடிவும் சரியாக இருந்தது போலவே எனக்கு தோன்றியது. ஒரு ஆணாக விக்னேஷ் சிவனின் fantasyகள் இரண்டாம் பாதியில் ஆங்காங்கே எட்டி பார்த்தாலும் எந்த இடத்திலும் நெளியவோ முகம் சுளிக்கவோ வைக்கவில்லை. - 13/n
"கப்பு அப்பறம் கொடு எனக்கு இப்போ கம்பெனி கொடு" போன்ற வசனங்கள் கமர்ஷியல் படங்களில் வரும்போது கண்டுகொள்ளாமல் இருக்கும் கலாச்சார காவலர்கள் மற்றும் சோஷயில் மீடியா (வில் மட்டும்) பெண்ணியவாதிகள் ஒரு ரொமான்டிக் காமெடிக்கு குறுக்க மறுக்க உருண்டு கொண்டிருப்பது ஏனென்று புரியவில்லை. - 14/n
எனக்கு இந்த Paragraphலாம் எழுதாத படம் நல்லா இருக்கா நல்லா இல்லையா அதை மட்டும் சொல்லு என்பவர்களுக்காக - முதல் பாதி பொறுமையா போனாலும் ரொம்பவே நல்லாருக்கு. இரண்டாம் பாதி நம்ம பொறுமைய சோதிக்குது. நகைசுவை, சென்டிமென்ட், நல்ல நடிப்பு, - 15/n
காட்சி அமைப்பு, இசை, முதல் பாதிக்காக உங்களுக்கு Romance-Comedy Genre படங்கள் புடிக்கும்னா கண்டிப்பா பார்க்கலாம். இதை பார்த்து motivate ஆகவும் கூடாது கோப படவும் ஒன்னுமில்லை entertainer ஆக ரசித்து கடக்கலாம் என்பதே என் கருத்து.
My Rating: 6.5/10
Verdict: Above Average
-16/n
IMO Vignesh Shivan is better in writing comedies than Nelson. However only if these two directors take their own films seriously and put little more effort in their screenplay then they can shine in Tamil Cinema. - 17/n
படத்துல விசே தன் கைல எழுதும்போது தான் யோசிச்சேன். நாயகிகள் இருவருக்கும் கண்மனி, கதிஜானு Kவில் பேர் வைத்துவிட்டு நாயகனுக்கு மட்டும் ரேம்போனு Rல் பேர் வைத்திருப்பது ஏன்? ஒரு ரைமிங்கே இல்ல, நாயகனுக்கும் Kலயே பேர் வச்சிருக்கலாம் like Karthick Maybe. - 18/n
15. #KamalifromNadukaveri
Sincere attempt of feel good film with a good message. Casting and performance were good. But cliched scenes and weak screenplay in second half were let downs. more like a educational movie. High school students and their parents can watch.
14. #Teddy New attempt for tamil cinema. Decent songs and good acting. lack of creativity and weak script were major cons. Decent fantasy comedy entertainer. one time watchable.
#சக்ரா தெரியாம கூட இந்த படம் பார்க்க தியேட்டர் பக்கம் போயிட்டீங்கனா முதல் பாதி முடிஞ்சதும் ஒடி வந்துருங்க. 1/n
கதாநாயகிக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தது, வில்லன் யார் என்பதில் ஒரு சின்ன சர்ப்ரைஸ் வைத்தது, விறுவிறுப்பான காட்சிகள் (திரைகதை அல்ல) போன்றவற்றால் முதல் பாதி முடிந்தவுடன் படம் பரவாலயே என தோன்றியது. #சக்ரா - 2/n
படத்துல கதாநாயகி, வில்லன், கதாநாயகன் உட்பட அடிக்கும் கலரில் லிப்ஸ்டிக் போட்டு வருவது கண்களை உறுத்தியது. எந்த கதாபாத்திரத்துடனும் எமோஷனலாக கனெக்ட் ஆகும் படி காட்சிகள் வைக்காதது அரம்பத்தில் இருந்தே படத்தின் பெரிய பலவீனம். #சக்ரா - 3/n