தமிழ்நாட்டில் உள்ளது போல்
சமூகநீதிப் ”புரிதலை”
ஈழத்தில் எதிர்பாராதீர்கள்!
வெறும் உணர்ச்சியால் கூவாதீர்கள்!
ஈழத்தின் அடித்தட்டு மக்களை
நொந்து கொள்ளாதீர்கள்!🙏
அங்கு இனி மேல் தான்..
இயக்கம் தோன்றி, விதைக்கப்பட வேணும்!
தமிழினம் ஒன்றுபட்டுப் பயணிக்க
இந்தப் புரிதல் மிகத் தேவையானது!
*ஈழத்தின் அடித்தட்டு மக்கள் வேறு!
*ஈழத்தின் மேல்தட்டு அரசியல் வேறு!
இந்தக் கள உண்மையைப்
புரிந்து கொள்ளா விட்டால்
ஒருவர் மீது ஒருவர், கோவம் தான் மிஞ்சும்:)
போலிப் பெருமையே
மத நெறியாக வாழ்கின்ற ஒரு சமூகத்தில்
சமூகநீதி விதை, இயக்கமே இல்லாது
சிறுகச் சிறுகத் தான் விதைக்க முடியும்!🙏
தமிழ்நாட்டிலும் சமூகநீதி
உச்சத்தைத் தொட்டு விட வில்லை!:)
ஆனால், சமூகநீதிப் பாதகம் எழுந்தால்
எதிர்ப்புக் குரலாவது ஒலிக்கும்!
ஈழத்தில், அது கூட இல்லை என்பதே களம்!
தன் சமூகத்தை
தானே மதிப்பீடு (விமர்சனம்) செய்யும்
மனப்பான்மை, ஈழத்தில் இன்னும் இல்லை!
போலிப் பெருமைகளே காரணம்!
தன் மக்களுக்கான சமூகநீதியை
விதைக்கும் அரசியல் இயக்கம்/தலைவர்கள்
ஈழத்தில் இன்னும் ஆழமாக எழவில்லை!
தமிழ்நாட்டில் திமுக/அதிமுக
புதுச்சேரித் தேர்தலிலும் போட்டியிடும்
ஆனால் ஈழத்திலோ
*யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் கட்சி
*அம்பாறையில் போட்டி கூடப் போடாது!😂
ஆனால் எல்லோருமே தமிழர் தான்!
ஈழத்தில், 50 லட்சம் தமிழர்களே!
சென்னை மக்கள் தொகை விடவும் குறைவு!
ஆனால், ஒரே தமிழினத்துக்குள்ளேயே
1000 பிரிவினைகள் & வேறுபாடுகள்!:(
*வடக்கு வேறு
*கிழக்கு வேறு
*மலையகம் வேறு
*இசுலாமியர் வேறு
*கிறித்துவர் வேறு
*சைவர்கள் வேறு
*புலம்பெயர் வேறு வேறு:)
இதான் ஈழச் சமூகக் களச் சோகம்!
தமிழ்நாட்டிலிருந்து, ஈழத்தை அணுகும் முன்
புரிதலை வளர்த்துக் கொள்ளுங்கள்!🙏
அத்தனைக்கும் ஆழ்-காரணம்:
மக்கள் சமூகத்தில், இயக்கம் தோன்றி
”சமூகநீதிப் புரிதல்” இலாது போனதே!:(
விரும்புகிறீர்களோ இல்லையோ..
ஈழம்+தமிழ்நாடு = இரட்டை மாட்டு வண்டி
*தமிழ்நாட்டில் சமூகநீதி பூட்டி
*ஈழத்தில் சமூகநீதி பூட்டாமல் போனால்
தொன்மம் + தொடர்ச்சி
தமிழினப் பயணம் தடைபடும்!:(
ஈழம்.. ஈழம்
என்று வெறுமனே உணர்ச்சியில் கூவாது
ஈழச் ”சமூகக் களம்” காணப் பழகுவோம்!🙏
ஈழத்தில், பெரும்பான்மைச் சிங்கள அடிப்படைவாதத்தை முறியடிக்க,
சிறுபான்மை இனங்கள், தேர்தல் அரசியலில் சிற்சில சமரசங்களோடு
போட்டியிடாமல், நெகிழ்வாக விலகி நிற்பது இயற்கையே!
வாக்குகள் சிதறாமல் தடுக்கும் உத்தி!
அப்படிச் செய்தால் தான், அதிகாரத்தில் ஓர் இருக்கையாவது (ஆசனம்) கிட்டும்!🙏
ஆனால், ஈழச் சிக்கல் என்னவென்றால்..
மக்களிடையே உறவை வளர்த்துக் கொள்ளாது
அது தமிழ் இசுலாமியப் பகுதி
அது தமிழ் மலையகப் பகுதி
என்றெல்லாம் பல தமிழ்க் கட்சிகள்
உள்ளுக்குள் வேற்றுமை பாராட்டி
அந்தந்த மக்களிடம் விலகியே நிற்கும் சோகம்!
இதனால், விரிசல் பெருகி
மக்களுறவே இல்லாமல் போகிறது:(
சிறுபான்மை ஈழத் தமிழ் மக்களை,
மதம்/சாதி பார்த்து
இன்னும் சிறுபான்மை ஆக்காமல்
யாராயினும், தமிழ் பேசும் மக்களென்றால்
அங்கு ”மக்களுறவு” வளர்த்துக் கொள்ளல்
ஈழத் தமிழ்க் கட்சிகளின் கடமை!
சிறுசிறு வேறுபாடுகள் இருக்கலாம்;
ஆனால், அடிப்படைப் பொதுத் திட்டமாக
இணைந்து செயலாற்ற வேண்டும்!
அது தமிழ் இசுலாமியப் பகுதி தானே?
அங்கு ஏன், நாம் போய்
மக்களுறவு வளர்த்துக் கொள்ள வேண்டும்?
தமிழ் இந்துக்கள்/சைவர்கள் பகுதியே
நமக்குப் போதும்! எ. வாளா இருத்தல் பிழை!
இப்படி இருந்தால், அடித்தட்டுக் களத்தில்
ஈழத் தமிழ் மக்கள் பிரிந்தே நிற்பர்!:(
A Divided House cannot Stand!
தேர்தலில், அந்தந்தப் பகுதி மக்களின்
கட்சிகளோடு கூட்டணி வைத்து
வாக்குகள் சிதறாமல்
அதிகாரத்தில் ஆசனம் பெற்றுக் கொள்ளலாம்!
ஆனால், அடிப்படை மக்களுறவையே
விட்டு விலகிவிடக் கூடாது!
மதம்/ஜாதி கருதி
எங்கட ஆட்களோடு மட்டுமே மக்களுறவு..
என்பது நாளடைவில்,
ஈழத் தமிழினத்தையே பிளந்து விடும்!:(
நல்ல அரசியல் தலைவர்களே
இதையெல்லாம் ஈழத்தில்
சாத்தியப்படுத்த முடியும்!
வாக்குகள் சிதறாமல் இருக்கவே
கூட்டணி முறையை
அறிஞர் அண்ணா எனும் நல்ல தலைவர்
உருவாக்கி வெற்றி கண்டார்!
அதே சமயம், சிறுபான்மை ஆயினும்
"மக்களுறவு"... அவர் கைவிடவே இல்லை!
ஈழத்துக்கும், இதுவே தமிழின விடிவு தரும்!
ஈழத்துக்காக, தன் வாழ்வையே தொலைத்த
பேரறிவாளனின் விடுதலையை..
ஈழ அரசியல் தலைவர்கள் பலரும்
வரவேற்காதது, மாபெரும் அறப் பிழையே!:(
அதுவும்.. இந்தியாவில் இருந்து கொண்டே
கண்டு கொள்ளாமல் இருப்பதெல்லாம்
”மக்களுறவை” வளர்க்கும் செயலே அல்ல!
மக்களைச் சென்றடைதலே
நல்ல அரசியல் தலைமைக்கு அழகு!
ஈழத்துக்காக..
வாழ்வில் பலவும் இழந்து நின்றாலும்
ஈழம், நம்மை
ஒரு பொருட்டாகக் கூட மதிக்காது!..
என்ற தோற்றத்தை
ஈழ அரசியல் தலைவர்கள்
மக்கள் மத்தியில்
விதைத்து விடக் கூடாது!🙏
இனியேனும் விழித்துக் கொண்டு
ஈழ அன்பன், பேரறிவாளனை
வாழ்த்தி வரவேற்பதே ஈழக் கடமை!
Better Late Than Never!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
1 சோழ மண்டலம்
2 ஜெயங்கொண்டசோழ மண்டலம்
3 பார்கவ மண்டலம்
4 கொங்கு மண்டலம்
5 பாண்டிய மண்டலம்
6 கங்க பாடி
7 தடிகை பாடி
8 நுளம்ப பாடி
9 மரைய பாடி
10 ஈழ மண்டலம்
11 நடுவில் மண்டலம்