#கொளஞ்சியப்பர்_திருக்கோவில் விருத்தாசலத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. “குரங்குலாவும் குன்றுரை மணவாள” என்று அருணாகிரிநாதர் அருளியவாறு மணவாளரான கந்த பெருமான் எழுந்தருளிய காரணத்தால் இவ்வூர் மணவாளநல்லூர் என்றாகியது.
திருக்கோவில் அமைந்துள்ள இடம்
முன்னொரு காலத்தில் அடர்ந்த காடாக இருந்த இடம். பசு மாடு ஒன்று அடர்ந்த காட்டில் நிறைந்து இருந்த கொளஞ்சிச் செடிகளின் நடுவே தன் கால்களால் சீய்ந்து பலிபீட உருவில் இருந்த கற்சிலையின் மேல் தானாக பால் சொறிவதை அவ்வூர் மக்கள் கண்டு சுவாமியை எடுத்து வழிபட தொடங்கினர். திருமுதுகுன்றத்து
ஈசனாகிய பரம் பொருள் பக்தனோடு விளையாட எண்ணி தனது மைந்தன் முருகனிடம் “சுந்தரன் மதியாது செல்வதால் அவரை எமது இடத்திற்கு வருவிக்கச் செய்” என ஈசன் பிராது கொடுத்த இடம் மணவாளாநல்லூர் எல்லை. அதன்படி விருத்தாசலம் நகருக்கு மேற்கு திசையில் “முருகன் தான் பலிபீடஉருவில்” அமைந்துள்ளார் என உறுதி
செய்யப்பட்டு, கொளஞ்சி செடிகளின் ஊடேயும், பசுவின் கொளம்பின் மூலமாகவும் வெளிப்பட்ட அவருக்கு அருள்மிகு கொளஞ்சியப்பர் எனும் திருநாமத்தை சூட்டி வழி பட்டு வந்துள்ளார்கள். மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் #பிராது எனும் வழக்கு பதிவு
செய்யும் முறை. இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, 3 வாரங்களுக்குள்ளோ, 3 மாதங்களுக்குள்ளோ, 3
வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கிறார். வெளியூர்களில் இருந்தும் பலரும் இங்கு வந்து இந்த பிராது பிரார்த்தனையை வைக்கின்றனர். #பிராது_கட்டுதலின்_முறை
மக்கள்
காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை
நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக் கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர்
எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.
இங்கு மேற்கொள்ளப்படும் இன்னொரு வேண்டுதல் #சூறைவிடுதல் - விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோவிலில் வேண்டிக்
கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து, மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள். இது சூறைவிடுதல் எனப்படுகிறது. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.
இங்கு
பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுள் உருவமின்றி அருவுருவ நிலையில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் திருத்தலமாகவும் விளங்குவதால் இத்தலம் பிரசித்து பெற்ற பிரார்த்தனை திருத்தலமாக திகழ்கிறது.
நடைதிறப்பு : காலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி :
அருள்மிகு கொளஞ்சியப்பர் கோவில், மணவாளநல்லூர்-606001, விருதாச்சலம், கடலூர் மாவட்டம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஏன்மாறினோம்? #யாரைகுற்றம்சொல்வது?
நம் சமூகத்தில் இன்று திருமணமான பெண்கள் பெரும்பாலும் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள்.
நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் நம் அடையாளமாக இருந்தது. வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதிய ஆண்களும் பெண்களும் பாழ் நெற்றியுடன்
இருப்பதை நாகரீகம் என்று கருதும் காலமாகிவிட்டது. பாரம்பரிய பண்டிகைகளை நம் குடும்ப வழக்கப்படி கொண்டாடுவது அரிதாகி வருகிறது. இன்றைய தலைமுறை கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டார்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் சுற்றுலா
போல செல்கிறார்கள். பெரும்பாலானோர் ஒன்று தேவைப்படும் போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர். நம் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு
#வைத்தீஸ்வரன்கோவில் இந்த ஆலயத்தில் உள்ள வைத்தியநாதரை வணங்கி வழிபட, தீராத நோய் தீரும். இத்தலம் செவ்வாய் பகவானின் தோல் நோய் தீர்த்த தலமாகும். இங்கு வழங்கப்படும் திருச்சாந்துருண்டை பிரசாதம் பல நோய்களை குணமாக்கும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது சங்கரன்கோவில். இங்கு தரப்படும் புற்றுமண் பிரசாதம் சகல சரும நோய்களையும் குணமாக்கும். நாகதோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல முன்னேற்றம் ஏற்படுவது கண்கூடு.
#திருச்செந்தூர் ஆதிசங்கரரின் காசநோயை முருகன் தீர்த்த தலம். இங்கு பன்னீர்
இலையில் தரப்படும் திருநீற்றை நெற்றியில் பூசியும் வாயில் இட்டு கொள்வதும் நோயை தீர்க்கும்.
#ஸ்ரீமுஷ்ணம் விருத்தாச்சலத்தில் அருகில் உள்ளது இங்குள்ள பூவராகசுவாமி கோவிலில் கொடுக்கப்படும் முஷ்தாபி சூரணம் தீராத நோய் தீர்க்கும் அருமருந்தாகும்.
அரசு விழாவில் முதலில் பேசிய திமுக தலைவரின் பேச்சிற்கும், இறுதியாகப் பேசிய பாரதத்தின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பேச்சிற்கும் எவ்வளவு வித்தியாசம்! இந்த தேசத்தின் ஒவ்வொரு பகுதியும் தேசத்தின் ரத்த நாளங்கள். இதில் எந்தப் பகுதிக்கும் வித்தியாசம் இல்லாமல் உரமாக வளர்ச்சி பகிர்ந்து
அளிக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளின் சிறப்பியல்புகள் சிதையாமல் வளர்ச்சி முன்னெடுக்கப் படுகிறது. அதையே பிரதமர் தனதுரையில் தெளிவாகக் கோடிட்டு காட்டினார். முதலில் பேசிய திமுக தலைவர், (தமிழக முதலமைச்சர் போல பேசவில்லையே, எனவே!) அரசியல் மேடை போல, குற்றச்சாட்டு வைத்து பேசியது
முதிர்ச்சியற்ற முடக்குவாதம். ₹31500 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை தமிழகத்திற்கு அர்ப்பணிக்க வந்திருக்கும் பாரதப் பிரதமரையோ, மத்திய பாஜக அரசையோ பாராட்டி பத்திரம் வாசிக்கச் சொல்லவில்லை. பொதுவாக நன்றி சொல்லி, இன்னமும் இன்னின்ன தேவைகள் இருக்கின்றன, தொடர்ந்து பிரதமர் உதவ முன்னுரிமை
#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும்,
மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து
போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம்
#MahaPeriyava
It was the peak of summer. The village Periyava was camping at that time suffered from scarcity of water. It was a tremendous task to gather and store drinking water. We had to walk two miles to fetch water for Periyava's bath and anushtanam. The attendants were
given one bucket of water each for their bath. Sri Maha Periyava was performing His anushtanam seated under a tree a little away from the building where SriMatham camped. A beggar and his family of several children went from house to house and returned disappointed, not getting
what they asked for. The attendants watched this. Was the village so poor that it could not give a fistful of grain to the needy? Not at all! The people in the village were quite prosperous and could afford to give away even a bit of silver in charity. But then this family was
#மகாபெரியவா
ஸ்ரீமடத்தில் பெரியவா முன்னிலையில் தினமும் காலையில் பஞ்சாங்க படனம் நடைபெறும். நாள்தோறும் திதி-வார-நக்ஷத்ர- யோக கரணங்களை அறிந்து கொண்டாலே மகத்தான புண்ணியம் என்பது சாஸ்திர வாக்கியம். ஒரு அமாவாசை திதியன்று செவ்வாய் கிழமையும் கேட்டை நட்சத்திரமும் கூடியிருந்தன. இன்னைக்கு
கேட்டை, மூட்டை, செவ்வாய்க் கிழமை எல்லாம் சேர்ந்திருக்கு, அதை ஒரு தோஷம் என்பார்கள், பரிகாரம் செய்யணும் என்றார்கள்.
பெரியவா, "குட்டி சாஸ்திரிகளுக்குச் சொல்லியனுப்பு. லோக க்ஷேமத்துக்காக ஹோமங்கள் செய்யச் சொல்லு" என்றார்.
பரிகார ஹோமம் நடந்துகொண்டு இருந்தபோது பெரியவா அங்கே வந்து
பெரியவா பார்த்தார்கள். “கேட்டை, மூட்டை, செவ்வாய்க்கிழமை என்றால் என்ன அர்த்தம்? கேட்டை என்பது நட்சத்திரம், செவ்வாய் என்பது கிழமை, மூட்டை என்றால் என்ன?" என்று கேட்டார்கள். எவருக்கும் பதில் சொல்லத் தெரியவில்லை. பெரியவாளே சொன்னார்கள்.
"அது மூட்டை இல்லை மூட்டம். மூட்டம் என்றால்