#JanaGanaMana (2022)(தமிழ் తెలుగు മലയാളം ಕನ್ನಡ)(Crime/Drama)(Netflix)(IMDB : 8.5)
பாக்குற எல்லா படத்துக்கும் ரிவ்யூ எழுத தோணும், ஆனா ஒரு சில படங்கள் தோணுறதோட விடாமா உட்காந்து எழுத வைக்கும். அந்த மாதிரியான படம் தான் இந்த ஜன கன மன 💥🔥.
என்ன ரைட்டிங்! என்ன டைரக்சன்! 👌🏼👏🏼.
ஒரு கல்லூரி பேராசிரியரின் கொடூரமான கொலை மாணவர்களின் அமைதியின்மையைத் தூண்ட, அவ்வழக்கினை ஒரு காவல் அதிகாரி விசாரிக்க தொடங்க, மறுபுறம் அவ்வழக்கிற்கு நீதி கேட்டு வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களம்.
முதலில் படத்தின் எழுத்து வடிவத்தை பாராட்டியே
ஆக வேண்டும். #SharisMohammed இன் கதை, திரைக்கதை வடிவம் அவ்வளவு நேர்த்தியாக அழுத்தமாக சொன்னவிதம் நிச்சயம் பாராட்டுக்குரியது.
நாம் காணும், உண்மை என நம்பும் செய்திக்குப்பின் உள்ள அரசியல் நோக்கத்தைப் பற்றி அழுத்தமாக சொன்னதும்.
2016ஆம் ஆண்டு நடந்த நுங்கப்பாகம் சுவாதி கொலை வழக்கு தான் நினைவிற்கு வந்தது. இன்றுவரை அதன்பின் ஒழிந்திருக்கும் அரசியல் பற்றி நாம் அறியாதது, நம் முட்டாள்தனத்தினை நினைவு கூர்கிறது.
உச்ச நடிகர்களின் குப்பை படங்களுக்கு ஃபயர் விட்டு, அதற்காக சண்டைக்கட்டித் திரியும் நாம் இது போன்ற நல்ல படங்களை கண்டுக்காமல் போனது கேவலமான செயலாக தான் எண்ணத் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளிவந்தும் நாம் கண்டுகொள்ளாமல் போனது மேலும் வருத்திற்குரியது.
மேலும் படம் வந்த காலமும் படத்தை பற்றி நாம் அறியாமல் போனதிற்கு ஒரு காரணமாக இருக்கலாம், சற்று பொறுத்து தாமதமாக விட்டிருந்தால் திரையரங்கிலே கொண்டாடிருக்க கூடிய ஒரு படம் தான்.
#AravindSwaminathan வாழ்க்கைப் பற்றி விரிவாக சொல்லாததும், படத்தின் இறுதிக் காட்சியில் அவர் சொல்லும் வசனமும்
இரண்டாம் பாகத்திற்கான லீடாக வைத்துள்ளதாக நினைத்தேன். அது போலவே படத்தின் இரண்டாம் பாகம் 2024 ஆம் ஆண்டு வெளிவர உள்ளதாக Wikipedia வில் குறிப்பிட்டு உள்ளனர்.
மொத்தத்தில் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம் தான் இந்த #JanaGanaMana
படத்தின் இணைப்பு வேண்டும் என்பவர்கள் எனது பயோவில் உள்ள டெலிகிராம் சேனலின் இணைப்பில் இணைந்து, சேனலின் பின் லிஸ்ட்டில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
" Can You fall in Love With Someone You Haven't Met? "
" நீங்கள் சந்திக்காத ஒருவரை காதலிக்க முடியுமா? "
ஆம் முடியும் என்கிறது இந்த Lunch Box, அதெப்டின்னு கேக்குறீங்களா!?
வாங்க கதைக்குள்ள போவோம்.
தன்னோட கணவனுக்கு லஞ்ச் செஞ்சு டப்பவாலா கிட்ட கொடுத்து அனுப்புற ஒரு நடுத்தர வயது குடும்ப பெண் தான் இலா (நிம்ரத் கர்).
(அதென்னடா டப்பவாலானு யோசிக்கிறீங்களா வட நாட்ல ஆஃபீஸ் போற ஆண்களுக்கு வீட்ல இருந்து சாப்பாடு கலெக்ட் பண்ணி ஆஃபீஸ்ல கொண்டு போய் சேக்குறவங்க
தான் டப்பாவாலா.)
இன்னொரு பக்கம் மனைவியை இழந்த 60 வயது மிக்க ஒரு பெரிய ஆள் தான் சாஜன் ஃபெர்னாண்டஸ் (இர்ஃபான் கான்).
ஒரு நாள் நம்ம இலா செஞ்சு அனுப்புற லஞ்ச் பாக்ஸ் காலியா வீட்டுக்கு வந்ததை நெனைச்சு சந்தோஷப்பட்றாங்க. வீட்டுக்கு வந்த கணவன் கிட்ட சந்தோசமா அதை கேட்க்கும் போது தான்
கேரளால இருக்க "கட்டாடி TMT ஸ்டீல் கம்பெனி" யோட ஓனர் தான் ஜான் கட்டாடி (மோகன்லால்), அவரோட மனைவி அன்னம்மா கட்டாடி (மீனா), அவரோட பையன் ஈஷோ ஜான் கட்டாடி (பிரித்வி ராஜ்). இவங்க ஒரு சந்தோசமான குடும்பமா இருக்காங்க.
ஜான் கட்டாடியோட நெருங்கிய நண்பர் தான் குரியன் மலியேக்கள் (லாலு அலெக்ஸ்) இவரு ஒரு விளம்பர கம்பெனி நடத்திட்டு வர்றாரு, இவரோட மனைவி எல்சி குரியன் (கனிகா), இவரோட பொண்ணு அன்னா (கல்யாணி பிரியதர்ஷன்). இவங்களும் ஒரு சந்தோசமான குடும்பமா தான் வாழ்ந்து வர்றாங்க.
குரியன் தன்னோட பொண்ணுக்கு
கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லிட்டே இருக்காரு, அதுக்கு அவரு பொண்ணு அன்னா எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லி மறுத்துட்டே இருக்காங்க.
இவங்க ரெண்டு குடும்பமும் இவங்க ஃபேமிலி டாக்டர் பையனோட கல்யாணத்துக்கு போறாங்க. அங்க வச்சி அன்னாவ பாத்ததும் ஜான் கட்டாடி மனைவி அன்னாக்கு
படத்தோட ரிவ்யூ போற முன்னாடி படம் பாக்கதவங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். இது ஒரு டைம் லூப் திரைப்படம் என்பதால், டைம் லூப் என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்துக்கொண்டு அதன் பிறகு படம் பாருங்கள். டைம் லூப் பற்றிய புரிதல்
இல்லாமல் படத்திற்கு சென்று விட்டு, வந்த காட்சியே வருகிறது நல்லாவே இல்லை என்று ஒரு நல்ல படத்தை பற்றி தவறான விமர்சனம் செய்திட வேண்டாம் 🙏🏼.
#Maanaadu
நண்பரோட காதலை சேர்த்து வைப்பதற்காக துபாயில் இருந்து இந்தியா வருகிறார் #STR , காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில்
எதிர்பாராமல் நடக்கும் ஒரு விபத்தால் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, இறந்தும் விடுகிறார்கள். அங்கிருந்து துவங்குகிறது நாயகன் #STR க்கு டைம் லூப் ♾️. அது ஏன் நடக்கிறது? இவர்கள் சந்தித்த பிரச்சனை என்ன? நாயகனுக்கு ஏன் டைம் லூப் உருவாகிறது? இறுதியில் அந்த டைம் லூப்பில் இருந்து எப்படி
எல்லோரும் அரைச்சு ஓஞ்ச மா(ரிவ்யூ)வ தான் நா இன்னைக்கு அரைக்கப் போறேன், ஏன்னா நா இப்போ தான் பாத்து முடிச்சேன் அதான் 😌.
சின்ன பசங்க விளாட்ற விளையாட்ட பெரியவங்களோட, பிரைஸ் மணி வச்சி, கொஞ்சம் சீரியஸா
விளையாண்டா எப்டி இருக்கும்?! அதான் இந்த #SquidGame .
பணத்தேவை இருக்குற கொஞ்சம் நடுத்தர மக்களா பாத்து டார்கெட் பண்ணி இந்த கேம் குள்ள இழுக்குறாங்க. அப்படி அவங்கள இந்த கேம் குள்ள இழுக்க அதுக்கு ஒரு சின்ன கேம வச்சி அதுல ஜெய்ச்சா இவளோ பணம் தர்றேன்னு சொல்லி ஆரம்பிக்கிறாங்க.
அவங்களும் பணத்தேவைக்காக ஒத்துக்கிட்டு விளாட்றாங்க, அதுல ஜெய்ச்சி முடிச்சோன இந்த மாதிரி நெறைய விளையாட்டு இருக்கு அதுல நீங்க கலந்துக்கிட்டு ஜெயிச்சா இந்த மாதிரி நெறைய காசு சம்பாதிக்கலாம்ன்னு சொல்றாங்க. ஒத்துக்க மறுத்தோன ஒரு கார்ட் கைல கொடுத்து நீங்க மனசு மாறுனா இந்த நம்பர்க்கு கால்