காளையார் கோவில் தேர் பவனியின் போது நடந்த நிகழ்வு!!!!
ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள *சொர்ண காளீஸ்வரர் கோயில்.*
இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு
தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.
இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து *தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.*
எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.
தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.
தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.
தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு *தைப்பூசத் திருநாளில்* முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.
தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி
தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.
இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.
ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது *தேர் அசைய மறுத்து விட்டது.*
அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது. தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.
இதன்பின் அவரை அழைத்தனர்.
பெரிய மருது, *தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்* என்றார். அதற்கு சிற்பி
*உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு
இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.*
சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த *சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார்.
தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.*
மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.
பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.
தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த *சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.*
பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.
*அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது.
அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.*
*மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது
இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.*
ஏராளமான *கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.*
வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.
எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். *
மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.*
*சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.*
*அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி*
சாதாரண பிரஜைக்காக சொன்ன சொல்லை காத்து *காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த மாமன்னர் மருது பாண்டியர்கள்*
*இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..*
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#நுபுர்_சர்மாவின் மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும்.
ஆனால் #இந்தியா நீ ஜெர்க் ரியாக்ஷன் எதுவும் கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம்.
ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு #இந்தியாகொடுத்தஅழுத்தமான,ஆழமானபதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும்
என்னை எல்லோரும் ரிஷி என்றே அழைக்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக் கிடைக்வில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன்” என்றார்.
“உத்தவரே! நான் வேறொரு விசயமாக உங்களோடு பேச இருந்தேன் அதற்குள் மகரிஷி பட்டம் பேச்சில் குறுக்கிட்டு விட்டது. என தூபம் போட்டார்.
மேலும் கிருஷ்ணர்
நான் அவசரமாக பிருந்தாவனத்தில் இருக்கும் ராதைக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும். நீங்கள் செய்தியைக் கொடுத்துவிட்டு வர இயலுமா?”
சாயங்காலம் ஐந்து மணி பெரியவாள் ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்கள் வஸ்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார்.பரபரப்புடன் கைகைளை நீட்டி,காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.
என்ன அவசரம்" என்றார்கள் பெரியவாள்.
பெரிய சடைப்பூரான் இருக்கு,வஸ்திரத்திலே...."
பெரியவா,கண்ணனிடம் வஸ்திரத்தைக் கொடுத்தார்.
"பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே.. ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....
துருபிடித்த துருக்கி
அய்யோ என ஐரோப்பிய நாடுகள் .......
ஆத்தா என ஆப்பிரிக்க நாடுகள்
பரிதாப நிலையில் பாகிஸ்தான்
பதற்றத்தில் பங்காளதேஷ்
நேர்மையற்ற நேபாளம்
மண்டியிட்ட மலேசியா
இக்கட்டில் இலங்கை
இனி ஆயில் விற்க முடியாத சூழ்நிலையில் அரேபிய தேசங்கள் .....
இப்படி உலகமே தறிகெட்ட நிலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு பணம் இல்லை என்று சொன்ன நாடு இன்று மாபெரும் சக்தியாக ராஜராஜனின் பட்டத்து யானையை போன்று பவனிவரும்
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள்,
என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன்.
நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை.