புராணங்கள் என்பது ஒரு கலாச்சாரத்தின் மிக பெரிய பங்கு. ஒவ்வொரு கலாச்சாரத்தின் புராணங்களை படிப்பதின் மூலமும் அந்த மக்களின் அக்கால வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், அவர்களது பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஏன் புராணங்கள்? ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இந்த உலகம் எப்படி வந்தது இந்த உலகத்தில் இருக்கும் உயிரினங்கள் மற்றும் பொருட்களின் தோற்றம் எப்படி வந்தது என்பதை விளக்க உருவானதே புராணம். நிலவில் தெரியும் உருவம் ஒரு பாட்டி. அவள் அங்கே வடை சுடுகிறாள் என்பது ஒரு குட்டி புராணம்.
அது நிலவின் நிழலை விளக்க வந்த புராணம். இதன் மூலம் தமிழர்கள் வயதான பெண்ணை பாட்டி என்பார்கள் அவளது வேலை வடை சுடுவது. வடை அவர்கள் உண்ணும் உணவு. சுடுவது என்றால் எண்ணையில் பொறிப்பது. அப்படியானால் அவர்கள் உணவில் எண்ணெய் பயன்பாடு இருக்கிறது என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும்
உலகின் புராணங்களை (Mythology) 26 ஆக தொகுக்கிறார்கள்.
கொஞ்ச முன்னாடி சொன்ன மாதிரி புராணங்கள் தான் மதத்தின் ஆரம்பம். இது ஏன் நடக்குது அது ஏன் நடக்குது என்று மனிதனுக்கு தெரியதப்போ அதுக்கு எல்லாம் ஒரு கதை சொல்லி மனதை சாந்தப்படுத்தி கொண்டான். சிலந்தி எப்படி வந்தது? அது ஏன் வலை பின்னுகிறது என்பதற்கு பதில் தெரியவில்லை.
உடனே ஒரு கதை Arachne என்பவள் கடவுள் Athena வை சிறப்பாக துணி நெய்யமுடியும் என்ற அகந்தை கொண்டு இருந்தாளாம். அதனால் Athena அவளை போட்டிக்கு அழைத்தாளாம். Arachne தோற்று போய்விட்டாள். தண்டனையாக Athena, Arachne வை சிலந்தியாக மாற்றிவிட்டாளாம்.
அதனால் தான் சிலந்தி வலை பின்னிக்கொண்டே இருக்கிறதாம். சிலந்தியின் Scientific name Araneae இந்த கதையில் இருந்து வந்தது தான்.
இப்படி ஏன் எதற்கு எப்படி என்று தெரியாத காலத்தில் எல்லா ஊரிலும் பாட்டி கதைகள் அதாவது புராணங்கள் இருந்தன.
Gordian Knot அப்படின்ற ஒரு phrase அ நீங்க கேள்வி பட்டு இருப்பீங்க. அதாவது தீர்க்க முடியாத சிக்கலான பிரச்சனை Gordian Knot எனப்படும்.
உதாரண வாக்கியங்கள்:
"In recent years, governments have tried to cut the Gordian knot by imposing cuts in state support"
"We must try to solve the problem even if it is really a Gordian knot."
இந்த Gordian Knot என்கிற பதம் எப்படி வந்தது? எப்படி எல்லா வார்த்தைகளுக்கும் ஒரு கிரேக்க கதை தான் ஆரம்பமோ அதே போல இதற்கும் ஒரு கிரேக்க கதை தான் ஆரம்பம்.
நாம் பிறக்கும் போது நமக்கு ஒரு identity நமது பெற்றோர்களால், இந்த சமூகத்தால் கொடுக்கப்படுகிறது. அல்லது நாம் வளரும் சூழலை பொறுத்து ஒரு identity யை நாம் தேர்வு செய்து கொள்கிறோம்.
இந்த identity இல்லாமல் மனிதனால் வாழ முடியாது என்றும் இந்த identity யை அடிப்படையாக வைத்துதான் அவனது குணம், emotion, id, ego, self எல்லாம் இருக்கிறது என்றும் உளவியல் சொல்கிறது. எவ்வித அடையாளமும் எனக்கு இல்லை என்று யாரும் இருக்க முடியாது.
பிறப்பால் வரும் அடையாளங்களை தவிர்த்தாலும் நமது ideology மூலம் நமக்கு ஒரு identity கிடைக்கிறது. அடையாளமே இல்லாத ஒருவர் இங்கு இல்லை. நிற்க, எல்லாரிடமும் இருக்கும் எதோ ஒரு identity யை வைத்து தான் இங்கு குழு அரசியல் செயல்படுகிறது.
ஹீரோக்கள் ரெண்டு வகைப்படுவர் ஒன்று false hero அதாவது all-male stereotype களுடன் 6 packs, கட்டுமஸ்தான உடம்பு, உணர்ச்சிகளை வெளிக்காட்டாத திறன், அடிதடி மூலம் தடைகளை வெல்வது போன்றவை false hero. மற்றொன்று Primal heroes!
Primal heroes க்கு சாதாரண மனிதனுக்கு உண்டான எல்லா weakness உம் இருக்கும் strengths உம் இருக்கும். ஒரு சாதாரண மனிதன் எதோ ஒரு கணத்தில் ஒரு பொறியினால் உந்தப்பட்டு ஹீரோ ஆகிறான். இந்த Primal hero பல படிநிலைகளை தாண்டி ஹீரோ ஸ்தானத்திற்கு வருகிறான்.
initiation, spiritual growth, emotional maturity, மற்றும் சிறிது supernatural உதவி. புராணங்கள் false hero வை விட Primal hero வை தான் பிரதானப்படுத்துகிறது. அதில் பெரும்பாலான Primal hero க்கள் ஒரு divine being க்கும் ஒரு மனிதருக்கும் பிறந்த பிள்ளையாக இருக்கிறார்கள்.
பெரும்பாலும் சினிமாவில் ஒரு கதாபாத்திரத்தை விளக்க கிளிஷேக்களை பயன்படுத்துவதுண்டு eg. முஸ்லீம் என்றால் கைலி, குல்லா, தாடி பாதிரியார் என்றால் 24 மணி நேரமும் வெள்ளை அங்கி கையில் lifco dictionary இப்படி.
இதற்கு காரணம் ஒருவேளை சினிமா என்பது 2 1/2 மணி நேரம் தான் அதற்குள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். ஒரு நாவல் அல்லது web series என்றால் இம்மாதிரி கிளிஷேக்கள் இல்லாமல் ஒரு character development ஐ பல பக்கங்களிலோ அல்லது ஒரு சீசன் முழுவதுமோ சிறிது சிறிதாக வசனங்கள் மூலமாக,
சூழ்நிலைகள் அதற்கு இவர்களது reaction மூலமாக audience க்கு கடத்த முடியும். ஆனா சினிமாவில் நேரமின்மை காரணமாக அடங்காத திமிர் பிடித்த heroine modern dress இல் சுற்றி கொண்டு இருப்பதாகவும் பின்னர் திமிர் குறைந்து நல்ல பெண்ணாக மாறியதும் அதை change over காட்டுவதற்காக