#ஶ்ரீராமானுஜர் ஒருநாள் ராமானுஜர் திருப்பதி மலை அடிவாரத்தில் சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பெண்மணி தலையில் மோர்ப் பானையைச் சுமந்து கொண்டு மோர் விற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தாள். மோர்க்காரப் பெண்மணிக்கு இவர்கள் பாடம்
படிப்பது தெரியவில்லை. ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி, ஐயா சாமி, நல்ல மோரு ஒரு தடவை குடிச்சீங்கன்னா தெம்பா இருக்கும். உஷ்ணமெல்லாம் ஓடிப்போயிடும் என்று சொன்னபடி மோர்ப்பானையை இறக்கி வைத்தாள். ஏற்கனவே பசியிலும், அசதியிலும் இருந்த சீடர்களுக்கு, மோர்ப் பானையைப் பார்த்ததும்
ஆளாளுக்கு எனக்கு, எனக்கு என்று வாங்கிக் குடித்தனர். சிறிது நேரத்தில் பானை காலி. பிறகு மோர்க்காரி சீடர்களையும், ராமானுஜரையும் பார்த்தாள். அப்போது அவள் மனதில் இவர்களைப் போல நாமும் பக்தியில் திளைக்க வேண்டும் என்று எண்ணம் உண்டாயிற்று. திடீரென்று அப்படி பக்தி உணர்வு எழுந்தது ஏன்?
மகான்களின் பார்வை விசேஷம் அப்படிப்பட்டது. அப்போது ராமானுஜர் அவளிடம், நீ எங்களுக்குக் கொடுத்த மோரின் விலை என்ன என்று கேட்டார். முதலில் காசு ஆசை இருந்த அவள் மனது இப்போது வேறுவிதமாக மாறி இருந்தது. ராமானுஜரை பக்தியுடன் பார்த்து, காசெல்லாம் வேணாம் சாமி. அதை வைச்சிட்டு நான் என்ன பண்ணப்
போறேன் என்றாள். அப்படீன்னா காசுக்குப் பதிலா பொருள் ஏதாவது வேணுமா என்று கேட்டார் சீடர் ஒருவர். ராமானுஜரை நமஸ்கரித்த அந்தப் பெண், எனக்கு காசும் வேணாம், பொருளும் வேணாம். பெருமாளை அடையணும், மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க, சந்தோஷமா போயிடுவேன் என்றாள். ராமானுஜர்
வியப்புடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்ற ஆசை எப்படித் தோன்றியது? இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கவலைப்படாதேம்மா உன் நல்ல குணத்திற்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும், போய் வா என்றார். ஆனால்
அந்தப் பெண்மணி விடவில்லை. உங்க வாக்கு பலிக்கட்டும் சாமி. அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு வழியைக் காட்டுங்க. போய்ச் சேர்றேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். பிறகு அவளிடம் நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ, இங்கு கூடியிருக்கும்
சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கிறானே ஒருவன், ஏழுமலைக்குச் சொந்தக்காரன், அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி நகருவதாக இல்லை. அவள், சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய்
எத்தனையோ தடவை மோட்சம் வேணும். மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறாரே என்றாள் கவலையுடன். அப்படி இல்லம்மா, அவருக்கு என்ன வேலை இருக்கோ, அதை குறையா வெச்சுக்காதே. நீ விடாமல் கேட்டுக் கொண்டே இரு, நிச்சயம் ஒரு நாள் மோட்சம் கொடுப்பார் என்றார் ராமானுஜர்.
இல்லீங்க சாமி, ஒங்களைத்தான் நம்பறேன் என்றாள். இவள் ஏதோ தீர்மானத்துடன் இருக்கிறான் போலிருக்கிறதே என்று யோசித்தார் ராமானுஜர். பிறகு அந்தப் பெண்மணி சாமி எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி
கேட்பாரு என்றாள் தெளிவாக. இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். சீடர்களுக்கு வியப்பு தாங்கவில்லை. குருநாதர் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்தனர். ராமானுஜர் மேலே அண்ணாந்து பார்த்து ஏழுமலையானை மனதால் இருகரம்
கூப்பி வணங்கி முகவரி எழுதும் இடத்தில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார். ஓலையை வாங்கிய அடுத்த விநாடியே, அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள். மலை ஏறி பெருமாள் சன்னதிக்குச் சென்று
அங்குள்ள அர்ச்சகர்களிடம் சிபாரிசு கடிதத்தைக் கொடுத்தாள். அர்ச்சகர்கள் குழப்பத்துடன் இது என்ன ஓலை என்று கேட்டனர். மோர்க்காரப் பெண்மணி முழு விவரத்தையும் கூறினாள். அர்ச்சகர்கள் ராமானுஜர் கொடுத்த ஓலை என்றதும் மறுப்பேதும் சொல்லாமல் பெருமாளின் காலடியில் சமர்ப்பித்தனர். ராமானுஜரின்
சிபாரிசை ஏற்றுக் கொண்ட பெருமாள் வானில் இருந்து புஷ்பக விமானத்தை விஷ்ணு தூதர்களுடன் அனுப்பி மோர்க்காரியை வைகுண்டத்திற்கு அழைத்து வரச் செய்தார். உடையவர் உடையவர் என்று கொண்டாடுவதன் சூட்சமத்தை உணர்த்துகிற சம்பவம் இது. விசிஷ்டாத்துவைதத்தின் சாரம் இது. ஆச்சார்ய பக்தியின் மகிமையை
விளக்கும் எளிய உதாரணம்.
ஶ்ரீ உடையவர் திருவடிகளே சரணம்
ஶ்ரீ எதிராஜர் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
பெரியவாள் முகாம் செய்திருந்த சிறிய கிராமத்தில், மொத்தம் பதினைந்து வீடுகளே இருந்தன. ஓர் ஆரம்பப் பள்ளியில் பெரியவாள் தங்குவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய தினம் முகாம் செய்திருந்த கிராமம் சற்றுப் பெரியது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. எல்லாவித
உபயோகங்களுக்கும் ஒரு குளம் தான் கதி! அதில் தண்ணீர் அசுத்தமாக இருந்தது குடிதண்ணீருக்கே அந்தத் தண்ணிதான் என்று மனம் வருந்தி முறையிட்டார்கள் கிராம மக்கள் பெரியவாளிடம். அன்றைய தினம் அந்தக் குளத்தில் தான் பெரியவா ஸ்நானம் செய்தார்கள். அன்று மாலையே புறப்பட்டு, சிறிய கிராமத்துக்கு
வந்தாகிவிட்டது. மறுநாள் காலை வழக்கம் போல பெரிய கிராமத்து மக்கள் அதே குளத்துக்குப் போனார்கள். இன்ப அதிர்ச்சி. ஒரு குப்பை இல்லை, பாசி இல்லை, சேறு இல்லை! தண்ணீர் நிர்மலமாகப் பளிங்கு போலிருந்தது. பெரியவங்க வந்து குளிச்சது, நம்ம பாக்கியம் என்று மகிழ்ந்தனர் மக்கள்.
சுவாமிகளுக்கு
#சாதுர்மாஸ்யம் இந்த பேர் நம் காதுகளில் நிறைய தடவை விழுந்திருக்கும். சந்நியாசிகள், மடாதிபதிகள் சாதுர்மாஸ்யம் அனுஷ்டிக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். சாதுர்மாஸ்யம் என்றால் என்ன? ஒவ்வோர் ஆண்டும் ஆடி சுக்ல தசமியிலிருந்து கார்த்திகை சுக்ல பௌர்ணமி வரை 4
மாத காலம் சாதுர்மாஸ்ய புண்ணிய சுபகாலம் எனப்படும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி கார்த்திகை ஆகிய 4 மாதங்கள் இதில் அடங்கும். (ஸ்ராவண ஏகாதசி துவாதசி முதல், கார்த்திகை ஏகாதசி துவாதசி வரை என்றும் கணக்கு) ஆவணி மாதத்தில் ஏகாதசியில் விஷ்ணு பகவான் சயனித்துக் கொள்கிறார். இதற்கு சயன ஏகாதசி என்று
பெயர். கார்த்திகை மாத ஏகாதசியில் விஷ்ணு பகவான் விழித்துக் கொள்கிறார். இதற்கு உத்ஸான ஏகாதசி என்று பெயர். பொதுவாக அந்தக் காலத்திலே மழை காலமாக இருக்கும். ஆகவே ஒரே இடத்தில், தங்கி, சத்சங்கங்கள், பஜனைகள், வேதாந்த காலட்சேபங்கள் முதலியவைகளை பெரியோர்கள், ரிஷிகள் எல்லோரும் செய்வார்கள்.
ஆஞ்சநேயரின் பரம பக்தர் ஒருவருக்கு சொக்கட்டான் விளையாட ஆசை. தன்னுடன் சேர்ந்து விளையாட ஆஞ்சநேயரே வரவேண்டும் என விரும்பினார். எனவே, மனமுருகி ஆஞ்சநேயரைப் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ஆஞ்சநேயரும் பக்தரது விருப்பத்தை பூர்த்தி செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்
நான் விளையாட்டில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனவே, தோற்றால் நீ வருத்தப்படக் கூடாது என்றார். பக்தரும் சம்மதித்தார். இருவரும் விளையாட ஆரம்பித்தனர். பக்தர், ஒவ்வொரு முறையும் #ஜெய்அனுமான் என்றபடியே காய்களை உருட்டினார். ஆஞ்சநேயர் #ஜெய்ஸ்ரீராம் என்றபடி காய்களை உருட்டினார். ஒவ்வொரு
முறையும் பக்தனே வெற்றி பெற்றான். சரி அடுத்த முறை ஜெயிக்கலாம் என்று ஆஞ்சநேயர் மீண்டும் மீண்டும் விளையாட வெற்றி பக்தனின் பக்கமே! உடனே ஆஞ்சநேயர் ராமரை நினைத்து, ஸ்வாமி, தங்கள் நாமத்தை உச்சரித்தும் எனக்கு தோல்வியா? என்று ராமரிடம் பிரார்த்தித்தார். அவர் முன் தோன்றிய ராமன், "ஆஞ்சநேயா
#மஹாபெரியவா
ஒரு அனுஷத்தில் நடந்த சம்பவம். டிசம்பர் 15,2015 தினமலர், சி. வெங்கடேஸ்வரன்
ஒரு பாட்டி மகாபெரியவரின் பரம பக்தை. அந்தக்கால வழக்கப்படி அவருக்கு எட்டு வயதிலேயே திருமணமாகி கணவரை இழந்து விட்டிருந்தார். கணவர் வழியில் நிறைய சொத்து கிடைத்தது அவருக்கு. குழந்தை இல்லை. சொத்து
நிறைய இருந்தால் சொந்த பந்தங்கள் விடுவார்களா என்ன, அவற்றை அடைய துடித்தார்கள். ஆனால் பாட்டி எப்படியோ அதைக் காப்பாற்றிக் கொண்டார். ஒருமுறை, மகாபெரியவரிடம் வந்து, இந்த சொத்து முழுக்க காமாட்சிக்கு தான். ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டினார். பெரியவர் அதை வேண்டாம் என எவ்வளவோ மறுத்தார்.
ஆனால், பணத்துக்கு துளியும் முக்கியத்துவம் கொடுக்காத அவர், பெரியவரை வற்புறுத்தி சொத்துக்களை காமாட்சிக்கு என கொடுத்து விட்டார். இதனால், மடத்தின் சார்பில் அந்த மூதாட்டிக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டது. ஒரு முறை அனுஷத்திற்கு மறுநாள், நிறைய பக்தர்கள் பெரியவரைத் தரிசிக்க வந்தார்கள்.
#நெய்_குள_தரிசனம் #திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் வருடத்தில் மூன்று முறை மட்டுமே கிடைக்கும் அதில் ஒன்று வைகாசி மாதம் பெளர்ணமி அன்று. கருவறைக்கு முன்பாக 15அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில் சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர். அத்துடன் புளி சாதம் தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும். சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம் போல் அமைத்து அங்கே இரண்டரை டின் தூய நெய்யைக் கொண்டு நிரப்புவர். அதன் பின்னர்
கருவறையின் திரையை விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவம் நெய் குளத்தில் பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது. இதுதான் நெய்க்குள தரிசனம் திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.
‘கோ’ என்றாலே பூமி என்றும் ஒரு அர்த்தம். க்ருஷ்ணர் பூர்ணாவதாரம். அம்சாவதாரம் என்பதாக பகவான் தன்னுடைய ஓரொரு அம்ச கலையை மட்டும் வெளிப்படுத்தியும் அவதாரங்கள் நிகழ்த்தியதுண்டு. பாகவதத்தில் சொல்லியிருக்கிற கணக்குப்படி பகவானுக்கு இருபத்து நாலு அவதாரங்கள். அந்த இருபத்து நாலில் நம்
எல்லோருக்கும் தெரிந்த தசாவதாரங்கள் போக பாக்கியிருக்கிற பதினாலு பேரும் அம்சாவதாரங்கள். அப்படி பகவானின் அம்ச அவதாரங்களாக இருந்தவர்களில் ப்ருது என்கிற சக்ரவர்த்தியும் ஒருத்தர். அவர்தான் லோகத்தில் நாடு, நகரம் என்ற அமைப்புகளை முறைப்படி ஏற்படுத்தியவர். அவர் பூமாதாவையே கோமாதா ரூபத்தில்
கண்டு அந்த பசுத்தாயிடமிருந்து அவரவர்களும் தங்கள் தங்களுக்கு இஷ்டமான ஸம்பத்துக்களை தங்கள் தங்கள் ஸ்வதர்மம் என்ற கன்றைக் கொண்டு கறந்து கொள்ளச் செய்தார் என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது. கோ ரூபத்தில் பகவானுக்கு எத்தனை ப்ரீதி என்பதற்காகச் சொன்னேன். கோவுக்கும் அவரிடத்தில் அதேபோல