.தற்போது சென்னையில் உள்ள வாலாஜா ரோடும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளும் #முகமது#அலிகான் தானமாக கொடுத்தது. அவரது பெயராலேயே இன்றும் வாலாஜா என்று வழங்கப்படுகிறது.
2. திருச்சி செய்ன்ட் ஜோஸப் கல்லூரி, பிஷப் கல்லூரி, #ஆற்காடு#நவாபுகளால் தானமாக கொடுக்கப்பட்டது.
ஒரு அமெரிக்க பத்திரிகையாளர் ஒரு இந்திய பார்ப்பனரை பேட்டி கண்டார்.
பத்திரிகையாளர் =
உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களை (எஸ்.சி. எஸ்.டி. ஓ.பி.சி.) துன்புறுத்துகிறீர்கள், அவர்கள் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது.
இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராக, பிராமணியத்திற்கு எதிராக அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை?
பார்ப்பனரின் பதில் : -
அவர்கள் (பார்ப்பனர் அல்லாதார்) ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் தங்கள் குழந்தைக்கு பெயரிட முடியாது.
அவர்கள் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் இல்லாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.
பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற
'பறவையை கண்டான் விமானம் படைத்தான்' என்ற பாடலில் 'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்?' என்று கண்ணதாசன் எழுதியதை அனுமதிக்க முடியாது என்றனராம் தணிக்கைத் துறையினர்.
தணிக்கைத் துறையினர் திருத்தச் சொன்ன வரியை வாசித்த கண்ணதாசன்,
'நான் சரியாகத்தானே எழுதி யிருக்கிறேன்' என்றார்.
'இல்லை! மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல.' என, தணிக்கைத் துறையினர் மறுத்தனர்.
கண்ணதாசன் சிரித்தபடியே, 'கடவுளா மதத்தை உருவாக்கினார்? கடவுள் பெயரைச் சொல்லி, மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும்... அதைத்தானே நான் எழுதியிருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறார்.
1.பொதுக்கிணற்றில் நீர் எடுக்க தடை 2. சுடுகாட்டில் தம் பிணம் எரிக்கத் தடை 3. குளங்களில் குளிக்க தடை 4. தெருக்களை பயன்படுத்த தடை 5. மேற்சட்டை, வேட்டி, சால்வை அணிய தடை 6. மீசைவிடத்தடை
7. தாவணி, தங்க ஆபரணங்கள் போடத்தடை 8. செருப்பு அணிய தடை 9. குடுமி, கடுக்கண் போட தடை 10. ரயில் பயணிக்க தடை 11. பேருந்துகளில் இருக்க தடை 12. பாடசாலையில் படிக்க தடை 13. கோவில் பயன்படுத்த தடை 14. பொது நிறுவனங்களில் உட்புக தடை 15. மருத்துவ வசதி தடை 16. வேற்று உழைப்பு வழிமுறை தடை.
1967-இல் திமுக பதவியேற்றதும் சில மாதங்களில் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறது.
அப்போது தமிழக அரசின் சார்பில் ஒரு கவர் கொடுத்துவிடப்பட்டது.
அதை பிரதமரிடம் கொடுத்ததும் அதை படிக்கிறார்.
கடிதத்தை படித்ததும் அதை மேஜையில் வைக்கிறார் பிரதமர்.
கடிதத்தை கொடுத்தவர் அந்த கடிதத்தைப்பற்றிய தங்கள் கருத்து என்ன என்கிறார்.
சிரித்துக்கொண்டே பிரதமர் சொல்கிறார் : இது சுயமரியாதை திருமண சட்டம் இயற்றியதை குறித்து எழுதியுள்ளது, அதை பிற மாநிலங்களிலும் செயல்படுத்த சொல்கிறது என்கிறார்.