விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
இது முற்றிலுமான ஆன்மீக ரீதியான உண்மையும் கூட. சிவ பக்தர்களுக்கு இந்த உண்மை தெரிந்ததுதானே!
சரி, அன்றாடம் நாம் இட்டுக்கொள்ளும் இந்த திருநீரை மேலும் பல மடங்கு சக்தி வாய்ந்த திருநீர் உங்கள் வீட்டு பூஜை அறையில் விபூதியை எப்படி வைக்க வேண்டும்?
எப்படி வைத்தால் அந்த விபூதியில் சிவனின் அம்சம் மேலும் அதிகரிக்கும்
சிவபெருமானுக்கே உரியது வில்வமரம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதே மரத்தில் இருப்பது தான் வில்வக் காய்.
அந்த வில்வக்காயை எடுத்து இரண்டாக உடைத்து, அதன் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி விட்டு,
வில்வக்காய் ஓட்டை திருவோடு போல தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் உள்ளே இரண்டு மூன்று வில்வ இலைகளை போட்டுக்கொள்ள வேண்டும்.
வில்வ காயின் ஓடு, அதன் உள்ளே முதலில் வில்வ இலைகள், அதன் மேலே சுத்தமான திருநீறு நிரப்பி விடுங்கள்.
முடிந்தால் அதற்கு மேலேயும் இரண்டு வில்வ இலைகளைப் போட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அவ்வளவு தான்.
தினம் தோறும் வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது இந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ள வேண்டும்.
சிவனை மனதார வேண்டிக்கொண்டு, நீங்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று இந்த திருநீறு பூசிக் கொண்டு போனாலே போதும்.
வரக்கூடிய தடைகளும் தடங்கல்களும் கண்ணுக்கு தெரியாமல் காணாமல் போகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
இந்தப் பிரசாதம் உங்களுக்கு சிவபெருமானின் கையில் இருந்து பெறப்பட்ட பிரசாதத்திற்கு சமம் என்று சொன்னாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே கிடையாது.
அந்த அளவிற்கு மகிமை வாய்ந்து, இந்த வில்வ காயின் ஓட்டில் இருக்கும் இந்த திருநீறு. தினமும் இந்த திருநீரை நெற்றியில் இட்டுக்கொண்டால் தீய சக்திகள் அண்டாது. துர்தேவதைகள் விலகி ஓடும். உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள். நிச்சயமாக நல்லது மட்டுமே நடக்கும்....!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை #சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்! #சைவ_சமயம்
நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.
வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை.
பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிற ராஜியங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய், இல்லை என்ற வார்த்தை எங்கும் இல்லாதபடி சர்வ வளங்களும் கொட்டிகிடக்கும் அளவுக்கு ஆட்சி செய்தாள் பாண்டிமாதேவி, அங்கயற்கண்ணி, ஆலவாய்க்கு அரசி, அமுத நாயகி, தடாதகைபிராட்டி, அரசியார் மீனாட்சி தேவி
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை காலை உச்சிவேளை மாலை அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் பஞ்ச ஆரண்ய தலங்கள்