ஜாதகப்படி யாருக்கெல்லாம் 'குலதெய்வ தோஷம், குலதெய்வ சாபம்" இருக்கும் என்பதையும் இந்த சாபத்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் எந்த மாதிரியான பிரச்சனைகள் கஷ்டங்கள் தர்ம சங்கடங்கள் ஏற்படும் என்பதையும் இந்த பதிவில் நாம் மிகத் தெளிவாக பார்க்கலாம்.
ஜாதகத்தில் சுக்கிர பகவான் தான் குலதெய்வ சாபத்தை குலதெய்வ தோஷத்தை வெளிப்படுத்தக்கூடிய கிரகமாகும்.
அதாவது யாருடைய ஜாதகத்தில் எல்லாம் லக்னத்தில் இருந்து (1,7,9) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிர பகவான் இருக்கின்றாரோ அவர்களுக்கு குல தெய்வ சாபம் உண்டு.
அதாவது ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் சரி அவர்களுடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து (1,7,9) இந்த மூன்று பாவங்களில் ஏதேனும் ஒரு பாவத்தில் சுக்கிர பகவான் இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக குலதெய்வ சாபம் குலதெய்வ தோஷம் இருக்கின்றது என்று அர்த்தம்.
இன்று நாம் போற்றிப் புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை, அதற்கு யார் காரணம் என்ற வரலாற்றை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர்.
அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்
திருப்புகழ் ஆகும்.
திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன.
அதாவது கிடைத்துள்ளன.
இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும்.
இவற்றுள் 1088 க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து இருக்கிறார்கள்.
திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசை நூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை.
அத்தகைய திருப்புகழ் நமக்கு கிடைக்க தனிப்பட்ட ஒரு அரசு அலுவலரின் தன்னலமற்றது தொண்டினாலும், ஆர்வத்தாலுமே காரணமாக அமைந்தது.
திருவண்ணாமலை இடைக்காட்டு சித்தர் ஜீவ சமாதி பற்றிய சிறப்பு பதிவு...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும்.
இடைக்காடர் சித்தர் 600 ஆண்டுகள் இங்கு வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.
திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.
பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது.
கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.
பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !
ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி,
இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.
ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம்,
ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும்,