1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார்
2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை
4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
5) சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்
6) உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
7) சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
8) சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
9) சொல்லின் செல்வன் - அனுமன்
10) தமிழ் தென்றல் - திரு.வி.க.
11) வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
12) கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
13) தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
14) ஆசு கவி - காளமேகப் புலவர்.
15) எழுத்துக்கு - இளம்பூரணார்.
16) சொல்லுக்கு - சேனாவரையார்.
17) உரையாசிரியர் - இளம்பூரணார்.
18) உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
19) தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.
20) புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
21) ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
22) மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
23) கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
24) தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
25) தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்
26) தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
27) இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
28) முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
29) சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்
30) தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
31) தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
32) தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
33) புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
34) தமிழ் தாத்தா - உ.வே.சா
35) தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
36) தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
37) உவமைக் கவிஞர் - சுரதா
38) தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
39) தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
40) குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன்.
41) கவி யோகி - சுத்தானந்த பாரதி.
42) தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
43) தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம்.
💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது
💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது
💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
💥சங்க இலக்கியம் 26350 அடிகளை கொண்டவை
💥மொத்தம் சங்க பாடல்களின் எண்ணிக்கை - 2381
💥சங்க இலக்கியத்தில் காணப்படும் புலவர்களின் எண்ணிக்கை - 473
💥சங்க இலக்கியத்தில் உள்ள பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை - 30