🦋அகல்விழி🍁 Profile picture
உங்க எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவள் நான்🔥🦋 என் எண்ணங்களின் கோர்வை எழுத்தாய் 👉💜ல் #அகல்_ஒளி 🚫No DM.
Jun 29, 2022 8 tweets 2 min read
#Tnpsc

#GROUP4

#நாலடியார்

1)பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் முதன்மையான பாடப்படும் நூல்

“நாலடியார்”

2. தமிழ் மொழிகளில் திருக்குறளோடு ஒப்பிட்ட பாடப்படும் நூல்

“நாலடியார்”

3. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே ஒரு தொகை நூல்

“நாலடியார்” 4. முப்பெரும் அற நூல்களில் ஒன்றாக திகழும் நூல்

நாலடியார்”

5. முப்பெரும் நூல்கள் யாவை

திருக்குறள்

நாலடியார்

பழமொழி நானூறு

6. துறவறத்தையும், நிலையாமையும் அதிகமாக வலியுறுத்தி பாடப்பட்ட நூல்

நாலடியார்”

7. திருக்குறளை போன்று வகை தொகை கொண்டு வடிவமைக்கப்பட்ட நூல்

நாலடியார்”
Jun 29, 2022 4 tweets 1 min read
#Tnpsc

#GROUP4

#சங்கஇலக்கிய தகவல்கள்

💥தமிழுக்கே உரிய இலக்கியங்கள் சங்க இலக்கியம்.

💥கி. மு.3 நூற்றாண்டு முதல் கி. பி.3 நூற்றாண்டு இடைப்பட்ட காலம் சங்க காலம். 💥 சங்க இலக்கியம் -செவ்வியல் இலக்கியம், உயர்தனி இலக்கியம், சான்றோர் செய்யுள், வீர இலக்கியம், மக்கள் இலக்கியம், திணை இலக்கியம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது

💥சங்க இலக்கியம் பதினெண்மேல் கணக்கு நூல் எனவும் அழைக்கப்படுகிறது

💥எட்டுத் தொகையும், பத்துபாட்டும் மேல்கணக்கு நூல்கள் ஆகும்
Jun 29, 2022 16 tweets 3 min read
#Tnpsc

#GROUP4

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்:

1) தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி, ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்க- பாரதியார் 2) பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்

3) சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை

4) காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
Jun 28, 2022 30 tweets 2 min read
#TNPSC

#Group4

#TnpscGuider

🍁புலவர்களும் அவர்கள் பிறந்த ஊர்களும் ✍️

1.இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் எது?  

மருதூர் 2. திருவள்ளுவர் பிறந்த ஊர் எது?  

மயிலாப்பூர்