எப்போது எல்லாம் நீ பிரச்சனை என்று சிந்தித்து கொண்டு இருக்கிறாய் என்று நீயே உன்னுள் பொருந்தி இருந்து நன்றாக சிந்தித்துப்பார்
நீ பிரச்சனை என்று சிந்திக்க உனக்கு எந்த வித தடையும் இல்லை தானே
சிந்திக்கும் இடம், அப்போது இருக்கும் உன் உடல்நிலை , உன்னை சுற்றி இருக்கும் சூழல் போன்ற அத்தனையும் உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் தராத போது தானே பிரச்சனை என்று இதையெல்லாம் கடந்து எதையோ சிந்திக்க கூட முடிகிறது ..
அப்போது
இப்போது உன்னை நான் எப்படி வைத்திருக்கின்றேன் என்று யோசி,
உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாது தானே வைத்திருக்கின்றேன் !!
அதுவே
உன் உடலில் ஏதோ ஒரு கோளாறு ( பசி / தாகம் / வலி .. ),
இருக்கும் இடத்தில் ஏதோவொரு இடையூறு,
சுற்றி இருக்கும் சூழலில் ( நாற்றம் / வெப்பம் / பூச்சி / புகை / சொந்தம் .....)
இது போல எத்தனையோ இருக்க அவையேதும் இப்போது உனக்கு எந்த விதமான பிரச்சனையும் தராது இருப்பதால் தானே ..
நீ வருமா என்று தெரியாத ?? நடக்குமா என்று யூகிக்கமுடியாத ?? மாறுமா என்று ஏங்கக்கூடிய ?? எல்லாவற்றையும் சிந்திக்க முடிகிறது,
நடக்காத ?? வராத ?? பாதிக்காத ?? போன்றவை எல்லாம் உன்னை தாக்கிவிட்டது போல யோசித்து வருந்த !! பயப்பட !! கூட முடிகிறது என்றால் ..
உன்னை நான் பிரச்னையில்லாது வைத்திருப்பதால் தானே ..
அப்போது உன்னை ஏதாவது ஒவ்வொரு நொடியும் உன்னை வெளியே இருந்து ஏதாவது பதித்துக்கொண்டே இருந்தால்,
உன்னால் பிரச்சனை என்று இப்போது இந்த கணம் இல்லாததை சிந்திக்க கூட முடியுமா ??
நான் உன்னை பிரச்னையில்லாது வைத்திருப்பதை அனுபவி ..
அப்படியே வருவதாக ஏதோ யூகித்தாலும் கூட ..
இப்போது இந்த நொடி உன்னை பிரச்னை இல்லாமல், நீ வேண்டாமலே கூட நான் உன்னை வைத்திருக்கிறேன் என்றால் ..
அப்போது அந்த பிரச்சனை என்று நீ யூகிக்கும் சமயம் உன்னை விட்டு விலகி விடுவேனா !!
எப்போதும் இருக்கேன் டா ..
உன்னை பிரச்னை இல்லது வைத்திருப்பதை அனுபவி ..
வைத்திருப்பவன் இந்த பிரபஞ்சத்தையே இயக்கியாளும் பெருந்தலைவன் என்று உணரு.
போடா சந்தோஷமா இப்போது உனக்கு கொடுத்து இருப்பதை அனுபவி ..
உன்னை என்னுளே கொண்டு உனக்காவும் ஆடிக்கொண்டே இருக்கிறேன் ..
திருச்சிற்றம்பலம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....
விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை #சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்! #சைவ_சமயம்
நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.
வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை.
பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிற ராஜியங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய், இல்லை என்ற வார்த்தை எங்கும் இல்லாதபடி சர்வ வளங்களும் கொட்டிகிடக்கும் அளவுக்கு ஆட்சி செய்தாள் பாண்டிமாதேவி, அங்கயற்கண்ணி, ஆலவாய்க்கு அரசி, அமுத நாயகி, தடாதகைபிராட்டி, அரசியார் மீனாட்சி தேவி