#துலாமை_நேர்_நிறுத்திய#அமர்நீதி_நாயனார் #சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு,
பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
அவர், திருநல்லூர் எனும் தலத்திற்கு சென்று அங்குள்ள ஈசனை வழிபடுவார். ஈசனின் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பார். திருவிழா வந்துவிட்டால், அன்னதானம் வழங்குவார். அடியவர்களுக்கு ஆடைகள் வழங்குவதற்காக திருநல்லூரில் மடம் ஒன்றை நிறுவினார்.
அதன்மூலம் அடியவர் களுக்கு நாள்தோறும் அமுதளித்தும், ஆடைகள் தானம் செய்தும் தொன்டுகள் புரிந்து வந்தார்!
நாளடைவில் குடும்பத்துடன் திருநல்லூரிலேயே குடியேறினார். அமர்நீதி நாயனாரின் அன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார் ஈசன்! அதற்காக ஒரு நாடகத்தையும் நடத்தினார்.
பிரம்மச்சாரி போல் சிவனடியாராக திருநல்லூர் திருத்தலத்திற்கு வந்தார் சிவனார். அவரை வணங்கினார் அமர்நீதி நாயனார். ‘சுவாமி! இதுவரை இது போன்றதொரு தோற்றமுடைய அடியவரை நான் கண்டதில்லை. உங்களை கண்டதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி’ என்றார் அமர்நீதி நாயனார்.
அடியவர் உருவில் வந்த இறைவனோ, ‘அன்பனே! உன்னுடைய வள்ளல் தன்மையை அறிவேன். உன்னைப் பார்க்கவும் உடைகள் வாங்கவுமே வந்தேன் என்றார்.
சுவாமி இத்திருமடத்தில் சிறந்த அந்தணர்களால் அமுது செய்யப்படுகிறது. அதனை தாங்கள் உண்டு பசியாற வேண்டும்’ என்று வேண்டினார் அமர்நீதி நாயனார் அப்படியே ஆகட்டும்
நான் போய் காவிரியில் நீராடி வருகிறேன். ஒருவேளை மழை வந்து விட்டால் என்னிடம் உள்ள கோவணம் நனைந்து விடும். இதனை நான் வந்த பின் கொடுப்பாயாக. கோவணத்தின் பெருமை உனக்கு தெரியும்தானே. பத்திரமாக வைத்திரு என்று சொல்லிவிட்டு, தண்டில் முடிந்திருந்த இரண்டில் ஒரு கோவணத்தை அவிழ்த்துக் கொடுத்தார்
அமர்நீதி நாயனார் பெற்றுக் கொண்டார் கங்கையை தலையில் சூடியிருக்கும் இறைவன், காவிரியில் நீராடும் பொருட்டு அங்கிருந்து சென்றார். அந்த வேளையில் அடியவர் கொடுத்த கோவணத்தை தனியொரு இடத்தில் வைத்தார் அமர்நீதி நாயனார். அந்த கோவணத்தை அங்கிருந்து மறைத்து விட்டார் ஈசன்!
சிறிது நேரம்கழித்து அடியவர், திருமடம் நோக்கி வந்தார் அப்போது அவர் முழுவதுமாக மழையில் நனைந்ததுபோல் காணப்பட்டார் அவரது உடைகளும் தண்டில் வைத்திருந்த மற்றொரு கோவணமும் நீரில் நனைந்திருந்தது மழையின் காரணமாக கோவணம் நனைந்து விட்டது. எனவே உன்னிடம் கொடுத்த கோவணத்தை எடுத்து வா என்றுகூறினார்
அமர்நீதி நாயனார், தனியறைக்குள் சென்று வைத்த இடத்தில் கோவணத்தைத் தேடினார். இருந்தால் தானே கிடைப்பதற்கு. திருமடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரித்தார், ஆனால் கோவணம் கிடைக்கவில்லை. பதறித் துடித்தார் அமர்நீதி நாயனார். பிறகு, அடியவர் ஈரத்துடன் நிற்கிறாரே என்று எண்ணி,
தன்னிடம் இருந்ததில் சிறந்த கோவணத்தை எடுத்துக் கொண்டு அடியவரை நோக்கிச் சென்றார்.
‘ஐயனே! தாங்கள் தந்த கோவணம் எப்படியோ காணாமல் போய்விட்டது. மன்னிக்க வேண்டும். வேறு ஒரு நல்ல கோவணம் கொண்டு வந்திருக்கிறேன். ஈரக் கோவணத்தை களைந்து விட்டு, இதனை உடுத்திக் கொள்ளுங்கள்.
என்னுடைய பிழையைப் பொறுத்தருளுங்கள்’ என வேண்டினார்.அவ்வளவுதான். அடியவர் வெகுண்டார். ஆவேசத்துடன் திட்டித் தீர்த்தார். கலங்கிப் போன அமர்நீதி நாயனார், ‘அறியாமல் நடந்துவிட்டது. அதற்கு பதில், உயர்ந்த பட்டாடைகளும், நவமணிகளும், பொன்னும், பொருளும் தருகிறேன்’ என்றார்.
இதைக் கேட்டு இன்னும் கோபமானார் அடியவர். ‘பொன்னும், நவமணிகளையும் வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். எனக்கு ஒரு பயனும் இல்லை. கோவணத்திற்கு நிகரான கோவணம் தந்தால் போதும். இதோ என்னிடம் ஈரமாக உள்ள இந்த கோவணத்தை தராசில் ஒரு பக்கத்தில் வைத்து, அதற்கு நிகராக கோவணத்தை தா!’ என்றார்
ஒருவழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்ட அமர்நீதி நாயனார், தராசின் ஒரு பக்கத்தில் அடியவரின் கோவணத்தை வைத்தார். இன்னொரு தட்டில் தன்னிடம் உள்ள கோவணத்தை தராசு தட்டில் வைத்தார். ஆனால் தராசு சமமாவதற்கு பதிலாக, அடியவரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றது.
அடியவரின் தட்டு கீழ்நோக்கிச் சென்றது. திகைத்துப் போன அமர்நீதியார், அடியவர்களுக்கு கொடுக்க வைத்திருந்த எல்லாக் கோவணங்களையும் ஒவ்வொன்றாக தட்டில் வைத்து நிரப்பினார். ஆனாலும் அடியவர் தட்டு அமிழ்ந்தே இருந்தது.
சுவாமி! என்னிடம் இருந்த கோவணத்தை எல்லாம் வைத்தும் தட்டு சமமாகவில்லை. ஆகவே பட்டாடைகளை வைக்க அனுமதி தர வேண்டும்’ என்றார் அமர்நீதி நாயனார்.
அதற்கு சம்மதித்தார் அடியவர். உயர்ந்த பட்டாடைகளையும் தராசு தட்டில் வைத்தார். அப்போதும் தராசு சமமாகவில்லை.
நவரத்தினங்கள், பொன்னும் பொருளும் வைத்தும் யாதொரு பயனும் இல்லாமல் போய்விட்டது. வைப்பதற்கு இனி ஒன்றும் இல்லை என்ற நிலை வந்து விட்டது.உடலும் மனமும் தளர்ந்தார் அமர்நீதி நாயனார். ‘இருந்த அனைத்தையும் வைத்தும் தராசு சமமாகவில்லை
என் மனைவி மற்றும் பிள்ளையுடன், என்னையும் இந்த தராசு தட்டில் ஏற அனுமதிக்க வேண்டும்’ என்று வேண்டினார். அதன்படி, மனைவியும் பிள்ளையும் தராசுத் தட்டில் ஏறியதும், ‘இதுவரை நான் செய்த அடியவர் அன்பில், சிறிதும் தவறாதிருந்தது உண்மையானால்,
இந்தத் துலாம் சமமாக நிற்கட்டும்’ என்று கூறி பஞ்சாட்சரம் ஓதினார். தட்டின் மீது ஏறினார். தராசுத் தட்டு சமமானது.
அப்போது அங்கே ரிஷபாரூடராக காட்சி தந்தார் சிவனார். அமர்நீதியார் குடும்ப சகிதமாக நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.
சிவனார் அவர்களை ஆட்கொண்டு அழைத்துச் சென்றார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரானார் அமர்நீதி நாயனார்.
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....
எப்போது எல்லாம் நீ பிரச்சனை என்று சிந்தித்து கொண்டு இருக்கிறாய் என்று நீயே உன்னுள் பொருந்தி இருந்து நன்றாக சிந்தித்துப்பார்
நீ பிரச்சனை என்று சிந்திக்க உனக்கு எந்த வித தடையும் இல்லை தானே
சிந்திக்கும் இடம், அப்போது இருக்கும் உன் உடல்நிலை , உன்னை சுற்றி இருக்கும் சூழல் போன்ற அத்தனையும் உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் தராத போது தானே பிரச்சனை என்று இதையெல்லாம் கடந்து எதையோ சிந்திக்க கூட முடிகிறது ..
அப்போது
இப்போது உன்னை நான் எப்படி வைத்திருக்கின்றேன் என்று யோசி,
உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாது தானே வைத்திருக்கின்றேன் !!
அதுவே
உன் உடலில் ஏதோ ஒரு கோளாறு ( பசி / தாகம் / வலி .. ),
இருக்கும் இடத்தில் ஏதோவொரு இடையூறு,
சுற்றி இருக்கும் சூழலில் ( நாற்றம் / வெப்பம் / பூச்சி / புகை / சொந்தம் .....)
விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை #சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்! #சைவ_சமயம்
நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு