ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள
ஐந்து சிவ லிங்க ஆலயங்கள்
பஞ்ச லிங்க ஷேத்ர ஆலயங்கள்.
ஐந்து சிவாலயங்களை உள்ளடக்கியது அந்த ஐந்து ஷேத்ரத்தில் உள்ள ஆலயங்கள்.
அந்த ஆலயங்களைக் கட்டியவர்கள் இந்திரன், சந்திரன், சூரியன், மஹா விஷ்ணு மற்றும் குமாரசுவாமி என்கிறார்கள்.
அந்த ஐந்து சிவாலயங்களிலும் உள்ள சிவ லிங்கங்கள் ஒரே ஒரு சிவ லிங்கத்தில் இருந்து வெளிவந்த ஐந்து சிவ லிங்கங்கள் என்று புராணக் கதையைக் கூறுகிறார்கள்.
அந்த ஐந்து ஆலயங்களும் வந்த பல கதைகள் இவை. தாரகாசுரன் என்ற அசுரன் சிவ பக்தன்.
அவன் தனது தொண்டையில் சிவ பெருமானிடம் இருந்து பெற்ற ஒரு சிவ லிங்கத்தை அடக்கி வைத்து இருந்ததினால் அவனை எவராலும் வெல்லவோ அடக்கவோ முடியாமல் இருந்தது.
ஆகவே அவனை அழிக்க அவதாரம் எடுத்த முருகப் பெருமான்
தாரகாசுரனை யுத்தத்தில் வென்று அவன் தொண்டையை நோக்கி ஆயுதத்தை வீச அவன் தொண்டையில் மறைத்து வைத்திருந்த சிவ லிங்கம் வெளியில் விழுந்தது.
விழுந்த வேகத்தில் அது ஐந்து துண்டுகளாகச் சிதறி பல்வேறு இடங்களில் விழ அவை பஞ்ச லிங்க ஷேத்திரங்கள் ஆயின.
அவை அமராவதி, தஷராமம், பீமாவரம் , பலகோல் மற்றும் சமல்கோட்டா என்ற ஐந்து இடங்கள் ஆகும்.
அவற்றில் மிகப் பெரியது சுமார் பதினைந்து அடி உயரமான சிவ லிங்கம் .
அது அமராவதியில் உள்ள அமரேஸ்வரி ஆலயத்தில் உள்ளது.
இன்னொரு கதை என்ன எனில் கோதாவரி நதிக்கரையில் இருந்த ஜமதக்கனி, அத்ரி , கௌதம , பாரத்வாஜ ,கௌசிக , வசிஷ்ட மற்றும் காஷ்யப போன்ற ஏழு முனிவர்கள் ஒரு சிவ லிங்கத்தை வணங்கி வந்தனர்.
தினமும் சிவனை பூஜிக்கும் தன்னால் அந்த முனிவர்களுக்கு தொல்லை இருக்ககூடாது
என நினைத்த சூரிய பகவானே அந்த சிவலிங்கத்தில் இருந்து ஐந்து சிவ லிங்கங்களை படைத்து ஐந்து இடங்களில் வைத்து தான் வணங்கி வந்தாராம்.
அவையே அந்த ஐந்து ஷேதிரத்திலும் உள்ள பஞ்ச லிங்கங்கள்.
இன்னொரு கதை என்ன எனில் திருபுர சம்ஹாரத்தில் மூன்று அசுரர்களை அழித்த சிவன் கௌசிக முனிவரின்
பிள்ளையான உபமன்யு தான் தினமும் வணங்கும் சிவனாருக்கு அபிஷேகம் செய்ய தனக்கு தடங்கல் இன்றி தொடர்ந்து பால் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டபோது
ஒரு சிவ லிங்கத்தை ஐந்து துண்டுகளாக்கி ஐந்து இடங்களில் பிரதிஷ்டை செய்து அந்த ஷேத்திரங்களில் இருந்த குளத்தில் பாலாற்றை
ஓட வைத்தாராம்.
வாழ்வில் ஒரு முறையாவது இந்த பஞ்ச லிங்க ஆலயங்களை தரிசனம் செய்ய ஈசனிடம் விண்ணப்பம் வைப்போம்.
அகத்தியர் சித்தர் பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
அகத்தியர் - ஓரு அதிசயம்! அபூர்வம்! ஆச்சர்யம்!
காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா.
அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது,
அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால்,
அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.
அபூர்வமான இந்தப் படத்தில் நிறைய ஆச்சரியமான விஷயங்கள் உள்ளது.
1. அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ‘தேவதாரு மரம்’.
2. அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம், போன்ற அனைத்தும் ‘திருத்தோடகன்’ என்னும் பொற்கொல்லரால்,
இரணியன் தன் மடியில் கிடத்தி,
வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை,
`#தட்சிண_அஹோபிலம்’
என்று போற்றுவர்.
வெண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும் ஸ்ரீ நரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன்,
அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று, மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை இந்த நரசிம்மருக்கு,
சிறப்புத் திருமஞ்சனத்தோடு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஸ்ரீ நரசிம்மரைச் சாந்தப்படுத்த, பால் மற்றும் இளநீரை அபிஷேகத்துக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர்.
புலவர் காளமேகத்திடம் விதண்டாவாதம் செய்யும் வகையில் ஒரு புலவர் கேட்டார்.
" ஐயா, நீர் பெரிய புலவர் என்று பேசிக் கொள்கிறார்களே.
உம்மால் முருகனைப் புகழ்ந்து பாட முடியுமா?”
"முருகன் அருளால் முடியும்.
வேலில் தொடங்கவா? மயிலில் தொடங்கவா?"
என்றார் காளமேகம்.
"வேலிலும் தொடங்க வேண்டாம்.
மயிலிலும் தொடங்க வேண்டாம்.
செருப்பில் தொடங்கி விளக்குமாறில் முடித்தால் போதும்"
என்று விளையாட்டாகக் கூறிவிட்டார் போட்டிப் புலவர்.
என்ன கொடுமை?
இறைவனை, முத்தமிழ் முதல்வனை, செந்தமிழ் தெய்வத்தை, வெல்வேல் அழகனை, கருணைக் கடவுளை, கண்கவர் காளையை, முருகனைப் பாடும் போது செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிப்பதா? தகுமா? முறையா?
அதைத் தகும் என்றும் முறை என்றும் மிகமிக அழகாக நிரூபித்தார் காளமேகம்.