#ஶ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்து, முடிவில் அவருடைய உடல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ‘பள்ளிப்படுத்தல்’ செய்யப்பட்டது. அது, ‘தானான திருமேனி’ என அழைக்கப்படுகிறது. நிறைவாழ்வு வாழ்ந்த அரிவைஷ்ணவ ஆச்சார்யன் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் தம் 120 ஆம் வயதில் பரமபதித்தார். வருடம் பொயு
1137. தாம் பிறந்த பிங்கள வருடம் மாசி மாத வளர்பிறை தசமியில், திருவாதிரை நக்ஷத்திரத்தில் சனிக்கிழமை நண்பகல் ஜீயர் மடத்தில் அவர் பரமபதித்தார். எம்பெருமானார் பரமபதித்த வேளையில், தர்மோ நஷ்ட: (தர்மத்திற்கு நஷ்டம் வந்தது) என்று அசரீரி ஒலித்ததாம். அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடை,
சூடிக்களைந்த துழாய் மலர், எண்ணெய்க் கிண்ணம் என சீடராகிய உத்தம நம்பியின் மூலம் ஜீயர் மடத்துக்கு அனுப்பி வைத்தாராம். உத்தம நம்பி ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி நம்பெருமாள் அளித்த எண்ணெயை எம்பெருமானாரின் திருமுடியில் தேய்த்து, திருமேனியை நீராட்டி, பிரம்மமேத
சம்ஸ்காரத்துக்கு தயார் படுத்தினார்.
இறுதி ஊர்வலம் தொடங்கிய நேரத்தில் ரங்கநாதர் கோவிலில் இருந்து அசரீரி ஒன்று ஒலித்ததாக ஐதீகம். ‘ராமானுஜன் எந்தன் மாநிதி’ என்றும், ‘ராமானுஜன் எந்தன் சேம வைப்பு’ என்றும் அந்தக் குரல் ஒலித்தது. எனவே, ராமானுஜரின் உடல் என்ற சேம வைப்பை அரங்கன்
திருக்கோவில் வளாகத்தில், துறவிகளுக்கான சம்ஸ்கார விதிகளின்படி பள்ளிப்படுத்த பெருமாளின் கட்டளையாக அது ஏற்றுக் கொள்ளப் பட்டது. பொதுவாக வைணவ சம்பிரதாயப்படி மறைந்த துறவிகளின் உடலுக்கு எரியூட்டும் வழக்கம் இல்லை. மாறாக அவர்களது உடல் பள்ளிப்படுத்தப்படும். அதாவது, சமாதியில் அமர வைக்கப்
பட்ட நிலையில் வைத்து, தக்க முறைகளின்படி சமாதி மூடப்படும். அதுபோல ராமானுஜரின் உடல் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்தில் பள்ளிப்படுத்தப்பட்டது. அங்கே ராமானுஜரின் சன்னிதி உள்ளது. அங்கே பத்மாசன நிலையில் அமர்ந்து, தியானத்தில் உள்ள திருமேனிபோல இன்றும்
உயிரோட்டமாக காட்சி தருகிறது. ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருப்பதோடு, கால் விரல்கள், நகங்கள், கைகளில் ரோமங்கள் இருப்பதையும் காணலாம். அவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றைச் சேர்த்து தயார் செய்யப்பட்ட கலவையினால் மூடப்பட்டுள்ளது. 1137-ம் ஆண்டு காலமான
ராமானுஜரின் உடல் அப்படியே பல்வேறு திரவியங்கள் மற்றும் சூரணங்களால் பதப்படுத்தப்பட்டு, பள்ளிப்படுத்தல் என்ற முறையில் ஸ்ரீரங்கம் வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட, 800 ஆண்டுகளுக்கும் மேலாக யோக உஷ்ணத்தின் அடிப்படையில், அந்த உடல் இறுகி, நிலை மாறாமல் இருக்கிறது. இப்போதும்
அவரது திருமேனி வைத்தவாறே உள்ளே இருப்பதாகவும், அதற்கு மேற்புறத்தில் இப்போது உள்ள ரூபம்தான் ‘தானான மேனி’ என்பதும் பல ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அந்த திருமேனிக்கு திருமஞ்சனம், அதாவது எந்த விதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை. வருடத்துக்கு இருமுறை பச்சைக் கற்பூரம் மற்றும் குங்குமப்
பூ ஆகியவற்றால் ஆன ஒருவகை குழம்பு மட்டுமே சாற்றப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள தானான திருமேனியை தரிசித்து ஆசி பெறுவோம்.
உடையவர் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 #அறிவோம்_மகான்கள் #அறிவோம்_சனாதனதர்மம் #அறிவோம்_நம்_ஆன்மீக_வரலாறு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஆடிமாதம் ஆடி மாதம் பல வகைகளில் சிறப்பு மிக்க மாதமாகும். ஆடி மாதத்திற்கு முதலில் அப்பெயர் வந்த காரணத்தை பார்ப்போம். ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி
என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை
அழிக்க யத்தனித்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான், என் தேவி
புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த புராணங்கள் வேதவியாசர் என்பவரால் நூல்களாக தொகுப்பட்டுள்ளன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள்
மகாபுராணங்கள் என்று அழைக்கப் படுகின்றன. இந்த பதினெட்டு புராணங்கள் எடுத்துக் கூறும் விஷயங்கள்: 1. பிரம்ம புராணம்: பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. மேலும் இதில் கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கோதாவரி நதிக்கரையில் சின்னபாப் என்ற புனித ஸ்தலம் உள்ளது. அங்கு மிக கடினமாக தவம் செய்யும் சஞ்சதப்பா என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். சூரியன் சுட்டெரிக்கும் காலத்தில் நெருப்பின் இடையில் அமர்ந்து தவம் செய்வார். கடும் குளிரில் ஆற்றில் தவம் செய்வார். அவர் தன் புலன்கள்
அனைத்தையும் தன கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இதன் காரணத்தால் பகவான் கிருஷ்ணரின் பாத கமலங்களை முழுமையாக சரணடைந்திருந்தார். பிரம்மதேவர் தினமும் சஞ்சத்தப்பாவை சந்தித்து, பகவான் கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது என்று கேள்விகள் கேட்பார். சஞ்சத்தப்பாவும் விளக்கமளிப்பார். இதை
கவனித்துக் கொண்டிருந்த இந்திரனுக்கு, சஞ்சத்தப்பாவை பார்த்து பொறாமை ஏற்பட்டது. எங்கு சஞ்சதப்பா தன் தவ வலிமையால் இந்திரலோகத்தை கைப்பற்றிவிடுவாரோ என்ற பயமும் வந்தது. உடனே தேவலோகத்து அப்சரசுகள் இருவரை அழைத்து சஞ்சத்தப்பாவின் தவத்தை கலைக்க உத்தரவிட்டார். இந்திரனின் ஆணையை ஏற்று இருவரும
#கும்பாபிஷேகம் புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும் போது, விக்கிரகங்களை ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம் முழுமை பெற்றுவிடாது. எப்போது முழுமை பெறும் என்றால் ஆலயத்தில், கும்பாபிஷேகம் நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது. கும்பம் என்றால்
நிறைத்தல் என்று பொருள். நம் ஆலயங்களில் வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்களின் மூலம் இறை சக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவ சமயத்தவர் மகா கும்பாபிஷேகம் என்றும், வைணவர்கள் மகா சம்ப்ரோக்ஷணம் என்றும் அழைக்கிறார்கள். புது கோவில்களுக்கு செய்வது மட்டுமல்ல ஏற்கனவே
இருக்கும் ஆலயங்களுக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய சடங்கு தான் குடமுழுக்கு அல்லது கும்பாபிஷேகம். இதன் மூலம் உள்ளிருக்கும் கடவுள் சிலைகளுக்கு தெய்வீகத்தன்மை புதுப்பிக்கப் படுகிறது. குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து, மந்திரங்களினால் தெய்வத்
#மகாபெரியவா
"உபநயனம் செய்துவைக்க வேண்டிய வயாசாச்சு இவனுக்கு, குண்டோதரன் மாதிரி எத்தனை சாப்பிட்டாலும் இன்னும் பசிக்கிறது என்கிறான். இவனுக்குச் சாதம் போட்டுக் கட்டுபடியாகவில்லை. வீட்டில் எப்போதும் ஒரு கற்சட்டி சாதம் தயாராய் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கு. பெரியவா பரமேசுவரன் மாதிரி,
இந்தக் குண்டோதரன் பசியைத் தீர்த்து வைக்கணும்” என்று நீண்ட பிரார்த்தனையுடன் பெரியவா பாதங்களில் விழுந்தாள் ஓர் அம்மாள்.
கிராமம்தான் என்றாலும், மற்ற பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். பெரியவா, அடுத்த பக்தரிடம் குசலப்பிரச்னம் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால், குண்டோதரனின் தாயார் சற்று நகர்ந்து நின்றாளே தவிர, பெரியவாளிடமிருந்து பிரசாதம் வாங்கிக்கொள்ளாமல் போவதாக இல்லை! சற்றைக்கெல்லாம் பெரியவா அந்த அம்மையாரை அழைத்தார்கள்.
"உங்க கிராமத்திலே மாரியம்மன் கோயில் இருக்கோ?"--பெரியவா.
"இருக்கு"
"அம்பாளுக்குப் பால் பல்லியம், தயிர் பல்லயம்,
#மந்திரங்கள்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம். (நமஹ தேவையில்லை)
இது #துவாதசாக்ஷரி_மந்திரம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது விஷ்ணு மற்றும் கிருஷ்ணர் இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட பன்னிரண்டு எழுத்துக்கள் மந்திரம்.
ஓம்+நா+மோ+பா+க+வா+தே+வா+சு+தே+வா+யா -
மொத்தம் 12 அக்ஷரங்கள். இந்த மந்திரத்தை 12 லட்சம் முறை உச்சரிப்பதன் மூலம் மந்திர பலன்கள் செயல்படுத்தப்படும் என்பது நம்பிக்கை.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய - பொருள் : எல்லா உயிர்களின் இதயங்களிலும் வீற்றிருக்கும் இறைவனை வணங்குகிறேன்.
இந்த மந்திரம் நம்மை மோட்சத்திற்கு இட்டுச் செல்லும்.
பிறப்பு மற்றும் இறப்பின் நித்திய சுழற்சியான சம்சாரத்திலிருந்து இறுதி சுதந்திரத்தை அடைய ஆன்மீக வழிகாட்டுதலை இது வழங்குகிறது.
பலன்களைப் பற்றி சிந்திக்காமல் தெய்வீக அன்புடனும் பக்தியுடனும் மந்திரத்தை ஜபிப்பது நல்லது. மேலும் குருமுகமாக உபதேசம் பெற்று ஜபிப்பது மிக அவசியம்.