பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.
பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது.
குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.
ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.
அன்று சம்பள நாள் என்பதால் வழக்கம் போல சரவணனும் ஓட்டலுக்கு போய் சமையல் அறைக்குள் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த ஸ்டூலில் உட்கார்ந்து அங்கு நடப்பவைகளை பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தோசைக் கல்லில் சாதா, ரவை, ஆனியன் என்று ஆர்டர்களுக்கு தகுந்தபடி வார்த்துக்கொண்டு
மறு பக்கம் இட்லி போணியிலிருந்து ஆவி பறக்கும் இட்லிகளை எடுத்துத் தட்டில் கவிழ்த்துக் கொண்டிருந்தார் அவனின் அப்பா. இடையிடையே அடுத்த நாள் காலை தயாராகவேண்டிய ஸ்பெஷல் ஆர்டருக்கு தேவையான சாமான்களுக்கான லிஸ்டை அவரின் உதவியாளருக்கு சொல்லிக்கொண்டிருந்தார்.
பார்த்துக் கொண்டிருந்த சரவணனால் இருக்க முடியவில்லை. பாவம் என்னை படிக்க வைப்பதுக்காக அப்பா இப்படி நெருப்பில் வேகிறாரே என்று நினைத்துக்கொண்டு முள்ளின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தான் .
இரவு எட்டு மணி ஆகவும் சரவணனை அழைத்துக்கொண்டு கல்லாவிலிருந்த முதலாளியிடம் போய்
ஒரு நடை கிராமத்துக்கு போய் உன் பொண்டாட்டிகிட்டே கொடுத்துட்டு வந்தாத்தான் என்ன? " என்று கேட்ட முதலாளியிடம் ...
"நான் படும் கஷ்டம் என் மகன் படக்கூடாதுங்கறதில நான் உறுதியா இருந்தாலும் அவனை பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க நான் விரும்பலை.
நான் கஷ்டப்பட்டுத்தான் சம்பாதிக்கிறேன் என்பதை அவனும் உணரணும்கிறதுக்காகத்தான் ஓவ்வொரு மாசமும் சம்பள நாள் அன்று அவனை வரச்சொல்லி சமயலறையில் காக்க வச்சு நான் படற கஷ்டங்களை நேரடியா பார்க்க வைக்கிறதுனால
அவனும் அதை உணர்ந்து பொறுப்பா நடந்துகிட்டு நல்லா படிச்சுமுதல் ரேங்க் வாங்கறான் அய்யா" என்றார்.
" நீ ரொம்ப படிக்கலை என்றாலும் வாழ்க்கையை நல்லாவே படிச்சு வச்சிருக்கேய்யா "என்ற முதலாளியை நெகிழ்ச்சியுடன் பார்த்தார் மாசிலாமணி.
நம்மில் பலர் ஊர்களுக்கு செல்லும்போது ஆங்காங்கே ஒரு சில கட்சியின் மாநாடுகள் நடந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.
அப்படி மாநாடுகள் நடந்து கொண்டிருக்கும் திடலுக்கு வெளியே ஒரு சில பேர் கட்சியின் கரை போட்ட டவல், பேட்ச், விசிறி, தொப்பி என்று பலதை விற்றுக் கொண்டிருப்பார்கள்.
மிக மோசமான தரத்தில் இருக்கும் அவை. அந்த மாநாடு முடியும் போது கூட இருக்குமா அல்லது நஞ்சு போய் பியிந்து விடுமா என்று தெரியாத அளவுக்கு ஒரு தரத்திலேயே இருக்கும்.
மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த உலகளாவிய செஸ் ஒலிம்பியாட்டை
நமது மாநில அரசு இதுபோல ஏதோ ஒரு மாநாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு கேவலமான ஒரு துண்டை வருகின்ற விருந்தினர்களுக்கு போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
20 ரூபாய்க்கு ஒரு மாலை பத்து ரூபாய்க்கு ஒரு துண்டு. இதற்கு எதையும் போடாமலே இருந்திருக்கலாம்.
அன்று ராகவ்க்கு 10 வது பிறந்தநாள். அவன் அப்பா ராஜேஷ் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் எம்டி.பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை . அம்மா சாருலதா ஒரு சாப்ட்வேர் கம்பனியில் சீனியர் வைஸ் பிரசிடென்ட்.
ராகவ் எதை வேண்டும் என்று கேட்கவே
வேண்டாம் நினைத்தாலே போதும் உடனே அது அவன் கையில் இருக்கும்.
அப்பாவும் அம்மாவும் அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டை படாடோபமாக அலங்கரிக்க ஆர்டர் செய்து இருந்தார்கள்.
மாலை நான்கு மணிக்கு தடபுடல் பர்த்டே பார்ட்டி.
ராஜேஷும் சாருவும் தனக்கு தெரிந்த பிரபல நணபர்களை அழைத்திருந்தார்கள்.
நகரத்தின் ஐந்து நட்சித்ர ஹோட்டலில் இருந்து சிறப்பு உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாற ஏற்பாடு.
ராகவ்வின் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு.
ராகவ்க்கு விலையுயர்ந்த கோட் சூட்டும் ரெடி.
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''
""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''
அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.
"
"நான் உங்கப்பாவோட நண்பன்,காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''
பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.