அன்று ராகவ்க்கு 10 வது பிறந்தநாள். அவன் அப்பா ராஜேஷ் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனியின் எம்டி.பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லை . அம்மா சாருலதா ஒரு சாப்ட்வேர் கம்பனியில் சீனியர் வைஸ் பிரசிடென்ட்.
ராகவ் எதை வேண்டும் என்று கேட்கவே
வேண்டாம் நினைத்தாலே போதும் உடனே அது அவன் கையில் இருக்கும்.
அப்பாவும் அம்மாவும் அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டை படாடோபமாக அலங்கரிக்க ஆர்டர் செய்து இருந்தார்கள்.
மாலை நான்கு மணிக்கு தடபுடல் பர்த்டே பார்ட்டி.
ராஜேஷும் சாருவும் தனக்கு தெரிந்த பிரபல நணபர்களை அழைத்திருந்தார்கள்.
நகரத்தின் ஐந்து நட்சித்ர ஹோட்டலில் இருந்து சிறப்பு உணவு வகைகளை எடுத்து வந்து பரிமாற ஏற்பாடு.
ராகவ்வின் நெருங்கிய நண்பர்களுக்கும் அழைப்பு.
ராகவ்க்கு விலையுயர்ந்த கோட் சூட்டும் ரெடி.
மணி மூன்றறைக்கே அப்பாவும் அம்மாவும் டிரஸ் செய்துகொண்டு ரெடியாகி விட்டனர். ராகவ்வுக்கும்டிரஸ் பண்ணி பார்டி ஹாலுக்குள் வந்தாகி விட்டது.
விருந்தினர்கள் ஒருவர் ஒருவராக வரத்தொடங்கி விட்டனர்.
வந்த விருந்தினர்களும் தங்கள் தகுதிக்கும்மீறி ராஜேஷையும் சாருவையும் மகிழ்வைக்க விலை உயர்ந்த பரிசுப் பொருள்களை கொண்டு வந்து அடுக்கிவிட்டனர்.
ராகவ் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு இருந்தான்.
பெரிய கேக் வெட்டும் வேளையும் வந்தது.
ராஜேஷும் சாருவும் “ ராகவ் இங்கே வா எல்லாரும் வந்தாச்சு கேக்வெட்டலாம்” என்று அழைத்தார்கள்.
ராகவ் கேக்கின் எதிரில் நின்று கொண்டு எல்லாரையும் பார்த்துவிட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான் யார் வரவையோ எதிர் பார்த்து.
“ சீக்கிரம்.வா டைம்ஆயிடுத்து கேக் கட்பண்ணு” அம்மாவின் ஆர்டர்.
“ கொஞ்சம் இரும்மா” என்று கூறிவிட்டு வாசலையே பார்த்தான்.
அப்போது ஒரு ஆட்டோ மெதுவாக வாசலில் வந்து நின்றது அதில் இருந்து வயதான ஒரு அம்மாள் சாயம்போன புடவையில் இறங்கினாள்.அவளைக்கண்டதும் சாருவின் முகம் இறுகியது.
அவளைப் பார்த்ததும் ராகாவ் முக மகிழ்ச்சியுடன் ஓடி “ பாட்டி “ என்று கத்திக்கொண்டே “வா வா பாட்டி உனக்கோசரம்தான் காத்துக்கிட்டு இருந்தேன் என்று கூறி
அவளை கட்டிக்கொண்டு கேக்டேபிளுக்கு அழைத்து வந்து எல்லோரும் ஹாப்பி பர்த்டே பாட கேக் வெட்டி முதல் துண்டை அம்மாவும் அப்பாவும் வாயைக்காட்டும்போது பாட்டிக்கி ஊட்டினான்
பாட்டியும் தன்கையில் மறைத்து வைத்திருந்த சிறிய லட்டை ராகவ் கையில் வைத்து
“ ராகவ் கண்ணா உனக்கு லட்டு பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்”
ராகவும் லட்டை கையில்வாங்கி எல்லா பரிசு பொருட்களையும் ஒருமுறை பார்த்துவிட்டு “ பாட்டி இது எல்லாத்தையும்விட எனக்கு மிகவும் பிடித்த பரிசு நீயும் நீ கொண்டுவந்த லட்டும்தான்” என்று கூறி ஆசையுடன் அதை சாப்பிட்டான்
அந்த பாட்டி யாருமில்லை ராஜேஷின் தாயார் பார்வதிதான்
சாருவின் தொந்தரவு தாங்காமல் அம்மாவை முதியோர் இல்லத்தல் சேர்த்து இருந்தான்.ராகவ்தான்அம்மா அப்பாவுக்கு தெரியாமல் பாட்டிக்கு போன் போட்டு வரச்சொன்னான்'பணம் பாதளம் வரை போனாலும் பாட்டியையும் பேரனையும் பாசத்தையும் பிரிக்க முடியவில்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நம்மில் பலர் ஊர்களுக்கு செல்லும்போது ஆங்காங்கே ஒரு சில கட்சியின் மாநாடுகள் நடந்து கொண்டிருப்பதை பார்த்திருப்போம்.
அப்படி மாநாடுகள் நடந்து கொண்டிருக்கும் திடலுக்கு வெளியே ஒரு சில பேர் கட்சியின் கரை போட்ட டவல், பேட்ச், விசிறி, தொப்பி என்று பலதை விற்றுக் கொண்டிருப்பார்கள்.
மிக மோசமான தரத்தில் இருக்கும் அவை. அந்த மாநாடு முடியும் போது கூட இருக்குமா அல்லது நஞ்சு போய் பியிந்து விடுமா என்று தெரியாத அளவுக்கு ஒரு தரத்திலேயே இருக்கும்.
மகாபலிபுரத்தில் நடக்கும் இந்த உலகளாவிய செஸ் ஒலிம்பியாட்டை
நமது மாநில அரசு இதுபோல ஏதோ ஒரு மாநாடு என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறது.
எவ்வளவு கேவலமான ஒரு துண்டை வருகின்ற விருந்தினர்களுக்கு போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
20 ரூபாய்க்கு ஒரு மாலை பத்து ரூபாய்க்கு ஒரு துண்டு. இதற்கு எதையும் போடாமலே இருந்திருக்கலாம்.
பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார்.
அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார்.
""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?''
""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?''
அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார்.
"
"நான் உங்கப்பாவோட நண்பன்,காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.''
பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார்.
வாங்கிப் பார்த்த ஆனந்த், ""அப்பாவா?'' என்று வினவியபடி, கடிதத்தை படித்தான்.
பஸ் ஸ்டாண்டின் எதிரிலிருந்த அந்த ஓட்டலில் எப்போதும் கூட்டம் அலைமோதும். ருசி கண்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட வருவதால்தான் அப்படி. ஓட்டலுக்குள் புகுந்த சரவணன் அவனின் அப்பா அங்கு சமையல்காரராக வேலை பார்ப்பதால் நேராக சமையலறைக்குள் சென்றான்.
பொள்ளாச்சிக்கு பக்கத்தில் உள்ள ப.க.புதூர்தான் அவன் சொந்த ஊர்.தென்னந்தோப்பு வைத்திருந்த அவனின் அப்பா மாசிலாமணி அவருடன் கூடப் பிறந்த நான்கு பெண்களையும் கரை சேர்ப்பதுக்குள் எல்லாவற்றையும் விற்றாக வேண்டியதாகிவிட்டது.
குடும்பத்தை காப்பாற்ற அந்த ஓட்டலில் சமையல்காரருக்கு உதவியாளனாக வேலைக்கு சேர்ந்து படிப்படியாக முன்னேறி இன்று அந்த ஓட்டலின் சீஃப் குக் ஆக இருந்தார்.
ஒவ்வொரு மாதமும் சம்பள நாள் அன்று மாலை சரவணனை ஓட்டலுக்கு வரச்சொல்லிவிடுவார்.