#கோவிலில்_வழிபடும்_முறை நம் இந்து மதத்தில் தான் இறைவனை நம் உள்ளப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்றிருக்கிறது. வழிபட முக்கிய தேவை பக்தியும் பணிவும் தான். ஆனால் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது நாம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை
தூய்மையாக இருக்க வேண்டும். குளித்து விட்டு துவைத்த துணிகளை அணிந்து (கோவிலுக்கு உகந்த வேட்டி சட்டை, புடைவை) செல்ல வேண்டும். ஆண்கள் நெற்றியில் திருநீறு, சந்தனம், திருமண் காப்பு ஏதாவது ஒன்றை தரித்திருக்க வேண்டும். பெண்கள் குங்குமம் அல்லது சந்தனம், அல்லது திருநீறு இல்லாமல் வழிபடக்
கூடாது. வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லாமல், நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவில் வாயிலில் நுழையும் போது தண்ணீரால் கை,
கால்களை கழுவிக் கொள்வது நல்லது. கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு கோபுரத்தை இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அடுத்து கொடி மரம். நம் வேண்டுதல்களை கொடிமரத்தின் முன் நின்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து கொள்ள
வேண்டும். மேற்கு திசையில் தலையும் தெற்கு திசையில் கால் இருக்கும் படி நமஸ்காரம் செய்வது நல்லது. பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலி கொடுத்ததாக வணங்க வேண்டும். கோவிலில் விநாயகர் இருப்பின் அவரை அடுத்து வணங்க வேண்டும். விநாயகரை வணங்குகையில் தோப்புக்கரணம்
போட வேண்டும். நெற்றி பொட்டுகளில் லேசாக குட்டிக் கொள்ள வேண்டும். விநாயகரை ஒரு முறையும் சூரியனை இரண்டு முறையும், அம்பாள், விஷ்ணுவை நான்கு முறையும், ஆஞ்சநேயரை ஐந்து முறையும் பிரதக்ஷ்ணம் செய்ய வேண்டும். முதியவர்கள் மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களாக இருந்தால் ஒரு முறை மட்டும்
பிரதக்ஷ்ணம் செய்தால் போதும். கோயிலுக்குள் சென்ற பிறகு யாரிடமும் பேசாமல், இறைவனை மட்டும் மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும். கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்கும் போது அர்ச்சனைகள் செய்து ஆரத்தி
காட்டும் போது கண் குளிர இறைவனை தரிசித்துக் கொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு அப்போது பிரார்த்தனை செய்யக் கூடாது. மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் சமயத்திலும், நைவேத்தியம் செய்யப்படும் பொழுதும் பிரகாரத்தை பிரதக்ஷ்ணம் செய்யக் கூடாது. அபிஷேகத்தை பார்த்தால், அலங்காரத்தையும், தீப
ஆராதனையையும் பார்த்து விட்டு தான் வீடு திரும்ப வேண்டும். சனி பகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக் கூடாது. சற்று தள்ளி நின்று தான் கும்பிட வேண்டும். ஆலயத்தின் உள்ளே நம்மை விட மூத்தவர்களாக இருந்தாலும் சரி, கடவுளை தவிர வேறு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூடாது.
சண்டிகேஸ்வரர் கோவிலில் கை தட்டி கும்பிடக் கூடாது. “சிவனின் அருளை தவிர நான் வேறு எதையும் எடுத்து செல்லவில்லை” என்று மனதில் நினைத்துக் கொண்டு வணங்கி வரவேண்டும். சிவன் கோவிலில் கால பைரவரையும், பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது. பின்பு
கோயிலில் அனுமார் இருப்பின் அவரை தரிசிக்க வேண்டும். சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது வீட்டுக்குத் தான் வர வேண்டும். வேறு யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது. இவ்வாறு இறைவனை முழு மனதுடன் வழிபட்டால் நம்
கஷ்டங்கள் அனைத்தும் விரைவாகவே குறைய ஆரம்பித்துவிடும். ஒரு கோவிலில் வழிபடும் போது, இது போன்ற சில வரைமுறையை  கடைபிடித்தால்தான் அந்த வழிபாடு முழுமை அடைகிறது. சிறு வயது முதலே குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட வைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 29
#ஸ்ரீசதுரங்க_வல்லபநாதர்_கோவில் #பூவனூர் முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த Image
அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து,
அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார். அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண்
Read 12 tweets
Jul 29
#சதுரகிரி #ஶ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவில். மிக விசேஷமான மலை. போய் வந்தவர்களுக்கு இதன் பெருமை புரியும். சித்தர்கள் இன்றும் அருவமாக வாழும் மலை. திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு Image
64 ஆயிரம் ஏக்கர். மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை ‘சஞ்சீவி மலை' என்கின்றனர். சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது. ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய Image
நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும். பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது. இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக Image
Read 56 tweets
Jul 29
#Til #எள்ளு Black sesame seeds have the powers to absorb negative energies that are present both in the atmosphere and inside the body. Therefore, black sesame seeds are used for cleansing the surroundings during tarpanam and Sradham. By using the kala til or black sesame seeds
people invoke their dead ancestors who wander in the Pitru Loka, a zone between earth and heaven. People offer black sesame seeds with water to the Pitrus while chanting specific mantras. These mantras (sounds) have certain energies that, in turn, activate the sesame seeds to
start attracting the dead relatives to earth for accepting the Pinda daanam or our offerings. The ritual is done to relieve the ancestors from the vicious cycle of birth and death and also help them in getting liberated from worldly desires that keep troubling their souls. A
Read 4 tweets
Jul 29
#ஆடிவெள்ளி_ஸ்பெஷல் #ஸ்ரீஸுக்தம்
அர்த்தம் புரிந்து படிப்போம்

ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா

பொருள்
விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் Image
சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்
யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்

பொருள்
அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம்
இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.
Read 28 tweets
Jul 29
#மகாபெரியவா ஒரு நாள் காஞ்சி மடத்தில் அதிகமான கூட்டம் பெரியவரைத் தரிசிக்க காத்திருந்தது. வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்களின் மத்தியில் ராமலிங்க பட் என்பவரும் இருந்தார். அவரது கையில் பட்டுத்துணி போர்த்திய தட்டு இருந்தது. அருகில் வேதமூர்த்தி என்பவர் நின்று கொண்டிருந்தார். அவர் Image
ராமலிங்க பட்டிடம், தட்டில் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். ஓரிக்கையில்(காஞ்சிபுரம் அருகிலுள்ள கிராமம்) மகாபெரியவருக்கு மணிமண்டபம் கட்டுகிறார்கள் இல்லையா, அங்கே பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு ஜோடி பாதுகையும், என் வீட்டு பூஜையறையில் வைக்க ஒரு ஜோடி பாதுகையும் தயார் செய்து கொண்டு
வந்துள்ளேன். அது மட்டுமல்ல, என் தாயார் சுமங்கலியாக காலமாகி விட்டார். அவர் காலமெல்லாம் அணிந்திருந்த எட்டுபவுன் தங்கச் சங்கிலியையும் மணிமண்டப கட்டுமானப் பணிக்கு கொடுப்பதற்காக வைத்துள்ளேன் என்றார். வேதமூர்த்தி அவரிடம், அதெல்லாம் சரி! பாதுகைகளைச் செய்வதாக இருந்தால், மணிமண்டபம்
Read 9 tweets
Jul 29
#கனகதாரா_ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் மேல் #ஸ்ரீஆதிசங்கரர் அருளியது இந்த ஸ்லோகம். அவர் பாலகனாக பிக்ஷை எடுக்க சென்றபோது ஒரு வீட்டில் மிகவும் எழ்மையான நிலையில் இருந்த பெண்மணியிடம் பிக்ஷை இட ஒரு நெல் மணி கூட இல்லை. வந்து நிற்கும் குழந்தைக்கு கொடுக்க ஒன்றுமே இல்லையே என்று வீட்டில் தேடி Image
பார்க்க, ஓர் அழுகிய நெல்லிக்கனி மட்டுமே கிடைத்தது. அதை அவருக்கு பிக்ஷை இடுகிறார். அவள் நிலை கண்டு மிக மனம் வருந்திய சங்கரர் மகாலக்ஷ்மியின் மேல் மனமுருகி பாடுகிறார். அவர் வேண்டுதலுக்குச் செவி சாய்த்து, அப்பெண்மணியின் பாவங்களை மன்னித்து தங்க நெல்லிக்கனிகளாக வீட்டின் கூரையின் மேல் Image
பொழிகிறார் கருணையே வடிவான தாயார். ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திர ஸ்லோகங்களும் அதன் பொருளும்
1. அங்கம் ஹரே:புலக பூஷணமாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகுலாபரணம் தமாலம்|
அங்கீக்ருதாகில விபூதிரபாங்க லீலா
மாங்கல்யதாஸ்து மம மங்கல ததவதாயா:|l

'முகுலாபரணம் தமாலம்' - பச்சை வர்ணத்தில் இருக்கும் தமால Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(