பண்டைய நாளில் இறந்து போனவர்களது ஆவி பற்றியும், அதனுடைய சக்தியைப் பற்றியும், உலகம் முழுவதிலும் உள்ள இனக்குழு மக்களிடையே சில நம்பிக்கைகள் இருந்தன.
இறந்து போனவர்களுடைய ஆவிக்கு ஆற்றல் அதிகம். அது ஆக்கச் சக்தியாகவும், அழிவுச் சக்தியாகவும் வெளிப்படலாம்.
அந்த ஆவி அவர்களுடைய உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும்.
அவற்றைச் சடங்குகள், வழிபாடுகள், சாந்திகள் போன்றவற்றால் மகிழ்வித்தால், அந்த ஆவி அக்குழுவிற்கு ஆற்றலளிக்கும் என்று நம்பினர்.
போரில் வெற்றி பெற்றுத் தரும். கால்நடைச் செல்வங்களைப் பாதுகாக்கும்.
வயல்களில் விளைச்சலை அதிகப்படுத்தும் என்று நம்பினர். இதற்காக முன்னோர்களுக்கு சடங்குகள் செய்து வழிபட வேண்டும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது.
ஆப்பிரக்க மக்கள் இந்த ஆவிக்கு உருவம் கொடுத்தனர். கென்யா, கோல்ட் கொஸ்ட், நைஜீரியா போன்ற மக்களிடையே இத்தகைய வழக்கம் இருந்தது.
இந்தியாவில் முன்னோர் உருவ வணக்கம் இல்லாமல் போனாலும், ஆவி வடிவில் அவர்களை திவச, திதி தினங்களில் உணவளித்து வழிபடும் வழக்கம் உள்ளது.
தங்கள் தந்தையருக்குத் திவச சடங்கு செய்யவேண்டும் என்றும், அவ்வாறு நடத்தாதவர்களுக்கு பல இன்னல்கள் விளையும் என்றும் நம்பிக்கை இன்றுவரை உள்ளது.
நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது. குடியிலுள்ள ஒருவன் இறந்துவிட்டால் அவன் இறந்துவிட்டதாகக் கருதவில்லை.
அவன் உடனிருப்பதாகவே பழங்குடியினர் கருதுகின்றனர். ஆன்மா உடலிலிருந்து பிரிந்து சாவு ஏற்படாமலேயே சில காலம் இருத்தல் என்பது பண்டைய மக்களின் நம்பிக்கை.
ஆன்மா சிலகாலம் இருக்க முடியுமானால், நெடுநாட்கள் இருக்கமுடியும் என்பதும் சாத்தியமே.
அப்படி பிரிந்திருக்கும் பொழுது ஒரு பகுதி, ஆவியின் இருப்பிடத்திலும் ஒரு பகுதி ஆன்மா வேறிடத்திலும் இருக்கும். ஓரிடத்தில் ஆவியை நிறுத்தும் சக்தி மனிதனுக்கு ஏற்பட்டபின் நிரந்தரமாகக் கல்லில் கொண்டு...
வந்து நிறுத்த முடியும் என்று நம்பினான். அதனால் மரம், கல் போன்றவற்றில் இறந்தவர்கள் ஆவியைக் கொண்டுவந்து நிறுத்தினர்.
இந்நிலை வந்த பின் "நடுகல் வணக்கம்" தோன்றியது.
இறந்தவனது ஆவியைக் கல்லில் தங்க வைத்தபின் அக்கல்லிற்கு வழிபாடு செய்தனர்.
தன் இனக்குழுவில் வாழ்ந்த மனிதன் இறந்த பின்னும், தன்னுடனேயே வாழ்கிறான் என்ற நம்பிக்கையில் பண்டைக்கால மனிதன் இவ்வழிபாட்டினைத் தொடர்ந்தான்.
ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கிடையில் #கற்காண்டல் நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அவர்களிடையில் உள்ள
நம்பிக்கையின் அடிப்படையில்...
இந்தச் சடங்கு நடைபெறுகின்றது.
மலை, பாறை, மரம், செடி, கொடி ஆகியவற்றில் தங்கள் குலத்தினர் ஆவிகள் தங்கியிருப்பதாகக் கருதுகின்றனர்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில், அங்குக் #கல்வழிபாடு தோன்றியதென்பர்.
#தொல்குடி வாழ்வில் #நடுகல் வழிபாடு சிறப்புற்றிருந்தமையைச் சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் வழி அறியலாம்.
சங்க காலத்தில் தமிழ்ச் சமூகத்திடையே இடையறாது நடைபெற்ற மாட்டுச் சண்டையாகும்.
ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்கு #நடுகல் நடும் சிறப்பு முல்லைத் திணையில் பேசப்படுகிறது.
தொல்குடி நிலையில் ஆகோள் பூசல் என்பது வாழ்வியல் ஆதாரத்தை பெருக்கும் ஒரு வழியாகவும், வளமைக்காகவும்..
வீரத்திற்காகவும் நிகழ்த்தப்பட்டதாகும். தொல்லியல் சான்றுகளாக நமக்குக் கிடைக்கும் #நடுகற்கள், #நெடுங்கல், #குத்துக்கற்கள் முதலியன ஆகோள் பூசலில் மாண்ட வீரர்களுக்காக வைக்கப்பட்டவையாக பெரும்பாலும் இருக்க வாய்ப்புண்டு.
'புலிமான் கோம்பை' #நடுகல் இதற்குத் தக்க சான்றாகும்.
சங்க இலக்கியங்களில் #மழவர்கள் நிரை கவர்பவர்களாகவும், #மறவர்கள் நிரை மீட்பவர்களாகவும் காட்டப் பெறுகின்றனர்.
புகழ்மிக்க அம்பு #மழவர் கையில் உள்ளது. அது எய்யப் பெறும்போது வீல் என்ற ஒலியுடன் பாய்ந்து செல்லும். பகலிலே நிரையைக் கவர அம்பெய்துகின்றனர்.
மந்திரச் சடங்குகள் ஆதிகாலத்திலிருந்து மனிதனால் நம்பிக்கையின் காரணமாக மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இதைப்போன்று செய்தல் என்ற நெறியில் அது நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளின் பேரில், மந்திரச் சடங்குகள் தொல்மனிதனால் பண்டு மேற்கொள்ளப்பட்டது.
தொல்குடி மாந்தர் நிறையா வாழ்க்கை நிலையிலிருந்த காரணத்தாலும், உற்பத்தி உத்திகள் அறியப்படாத நிலையில் இருந்ததாலும், உற்பத்தி நிறைவு வேண்டி மந்திரச் சடங்குகளைத் தொடங்கினர்.
வேட்டை மேற்கொள்ளும் மனிதனுக்கு வேட்டை கிட்டாவிடில் இனக்குழு மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவர்.
இதனால் பழங்காலத்தில் வேட்டையில் நல்ல மிருகங்கள் கிடைக்கவும், பயிர் உற்பத்திப் பெருகவும் தொல்குடி மக்கள் நம்பிக்கையின் பேரில் மந்திரச் சடங்குகளைச் செய்தனர்.
மந்திரச்சடங்குகளைத் தொத்து மந்திரம், ஒத்த மந்திரம் என வகைப்படுத்துவர். இருப்பினும் இவ்விரண்டுமே ஒத்துணர்வு மந்திரம் எனலாம்
#இலங்கை யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் #ஆனைக்கோட்டை என்ற இடத்தில், பெருங்கல் சின்னம் ஒன்றை அகழாய்வு செய்தபோது கண்டெடுக்கப்பட்ட முத்திரையில்,
மூன்றுக் குறியீடுகளைக் கொண்ட தொடர் மேல்வரிசையிலும் அதன் கீழ்ப்பகுதியில் #கோவேத என்ற...
#தமிழி எழுத்துப் பொறிப்புகளும் காணப்படுகின்றன. #கோ என்பது அரசனை (அ) தலைவனைக் குறிக்கின்றது.
#கோவேத என்பதனையடுத்து முத்தலைத் தண்டு போன்ற ஒரு குறியீடுக் காணப்படுகின்றது.
இதுவும் அரசுக்குரிய (அ) தலைமைக்குரிய இலச்சினையாகக் கொள்ளப்படுகிறது.
முனைவர் இரா. மதிவாணன்
தமிழிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.
கேரளாவில் உள்ள #எடக்கல் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "கடும்மி புத சேர்" என்ற தமிழிக் கல்வெட்டின் இறுதியில்...
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.