இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.
பொருள் :
குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில்
வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.
பொருள்
சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம்
உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.
பொருள்
நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.
அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்
பொருள்
உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.
பொருள்
வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப்
பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.
வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.
லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.
பொருள்
ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.
பொருள்
தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்
படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.
விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல
பொருள்
எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில்
கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.
லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியான தேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும்.
இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பார்ணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை நான்கு மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை எல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தர
வேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது
போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் காட்சி தருவார். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, இதெல்லாம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை நீ எடுத்துக்
கொள் என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். ஆஹா நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன்
காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், பொயு 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின்
நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.
தம் தாயார் இறந்த
பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
பட்டினத்தடிகளின் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்
#மகாபெரியவா
ஒரு சமயம் சாதுர்மாஸ்யத்தை ஒட்டி ஸ்ரீமடத்திலேயே முகாமிட்டிருந்தார் மகாபெரியவா. வித்வத் விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன, அந்த சமயத்தில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மகா பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்துல நாற்பத்தைந்து ஐம்பது வயது
மதிக்கத் தக்க பெண்மணி ஒருவரும் இருந்தார். அவர் முகத்தைப் பார்க்கிற போதே, ஏதோ ஒரு கலக்கம் அதில் இருப்பது தெரிந்தது. மகா பெரியவாளை அவர் தரிசிக்கற முறை வருவதற்குள், கிட்டத்தட்ட கதறி அழுதுவிடுகிற நிலைமைக்கே போய்விட்டார் அந்தப் பெண்மணி. ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவுமே சொல்லாம
கேவிக்கேவி அழ ஆரம்பித்தார். ரெண்டு மூணு நிமிஷத்துக்குப் பிறகு, "என்ன ஆச்சு?" என்று கேட்கிற பாவனையோட அந்தப் பெண்மணியைப் பார்த்தார் மகாபெரியவா.
"சுவாமி நான் ரொம்ப பயந்து போயிருக்கேன். எனக்கு சீக்கிரமே உசுரு போயிடுமோ, என்னோட பொண்ணுகள் அநாதை ஆயிடுவாளோன்னு தோணறது. நீங்கதான்
#ஆரியபட்டா குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வான சாஸ்திரமும் சோதிட சாஸ்திரமும் உச்ச நிலையை அடைந்திருந்தது. காரணம், அப்போது வாழ்ந்திருந்த ஆரிய பட்டர், வராகமிஹிரர், பாஸ்கராசாரியார் போன்ற அறிஞர்களே! மாமேதை ஆரியபட்டரே இந்திய சோதிட சாஸ்திரத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
கணிதத்தில் இவர் சிறந்த வல்லுநர். கணித சூத்திரங்கள் பலவற்றை முதன் முதலாக அவர் வகுத்ததோடு, அவற்றுக்கு விளக்கமும் எழுதி வைத்தார். இன்றும் கூட அவரது சூத்திரங்கள் கணிதத் துறையில் பயன்பட்டு வருகின்றன. பூஜ்யம்: இப்போது உலகம் எங்கும் தசம முறை வழக்கில் உள்ளது. இந்தத் தசம முறை, பண்டைக்
காலத்திலேயே பாரதத்தில் கையாளப்பட்டு வந்த, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பூஜ்யம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டதே. பூஜ்யம் முதன் முதலாக நம் நாட்டில் தான் கண்டறியப்பட்டது. புகழ்பெற்ற வெளிநாட்டு யாத்ரீகர்களான இப்னவேஷியா (ஒன்பதாம் நூற்றாண்டு) அலம் சூதி (பத்தாம் நூற்றாண்டு) அல்பரூனி(பதினோராம்
பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச
மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்)
நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மை விளையாமல் தடுத்து