#ஸ்ரீசதுரங்க_வல்லபநாதர்_கோவில்#பூவனூர் முற்காலத்தில் தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்த வசுசேனன் என்னும் மன்னனுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது. மன்னனும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்த ஜன்மத்தில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த
அன்னை பார்வதி தேவியார், "உங்களை அனுதினமும் மறக்காது பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா? அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் அருளக்கூடாதா?" என்று ஈசனிடம் கேட்டார். அதற்குச் சிவபெருமான், "இந்த ஜன்மத்தில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து,
அவர்களுடைய குழந்தையாக வளர்வாயாக. உரிய நேரத்தில் யாம் வந்து உம்மைத் திருமணம் செய்துகொள்வோம்!" என்று அருள் வழங்கினார். அதே தினத்தில், வசுசேனரும் காந்திமதியும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும்போது, தாமரை மலர் மேல் ஒரு சங்கைக் கண்டெடுத்தார்கள். அவர்கள் கையில் எடுத்ததும் அது அழகிய பெண்
குழந்தையாக மாறியது. அது, இறைவனே அனுப்பிய குழந்தை என்றுணர்ந்து அதற்கு ராஜராஜேஸ்வரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனமாக வளர்ப்பதற்கென, சப்த மாதாக்களில் ஒருவரான சாமுண்டியையும் பூமிக்கு அனுப்பினார் இறைவன். குழந்தையின் வளர்ப்ப
தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை ராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக் கொடுத்தாள். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த இளவரசி, குறிப்பாக சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள். அவள் திருமண வயதை எட்டியபோது, என் மகளை சதுரங்க விளையாட்டில் யார்
வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன் என்று அறிவித்தார் மன்னர். பல நாட்டு இளவரசர்களும் இளைஞர்களும் வந்தபோதிலும், யாராலும் ராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை. அனைவரும் தோற்றுப் போயினர். இதனால் கவலையுற்ற மன்னர், யாருமே அவளை வெல்லமுடியவில்லையே, மகளுக்கு
திருமணமே முடியாமல் போய்விடுமோ? என்று மிகுந்த கவலை அடைந்தார். கவலை வந்தால் முறையிடும் இடம் அந்த இறைவன் தானே, எனவே குடும்பத்தோடு காவிரியின் தென் கரையிலுள்ள சிவாலயங்களைத் தரிசிக்க குடும்ப சகிதமாக தல யாத்திரை கிளம்பினார். பல சிவாலயங்களைத் தரிசித்த பின்னர் திருபூவனூர் வந்தவர் புஷ்பவன
நாதரைத் தரிசித்து, தன் மனதின் பாரத்தை இறக்கி வைத்து விட்டு, குடும்பத்துடன் அந்த ஊரிலேயே தங்கினார் மன்னர். மறுநாள் காலையில், வயோதிகர் ஒருவர் மன்னரைச் சந்தித்து, என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா என்று கேட்டார். அரசன் சம்மதிக்க, ஆட்டம் தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில்
தோல்வியே கண்டிராத ராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் தோற்றுவிட்டாள். இப்படி வயதில் முதிர்ந்த ஒருவருக்கு தன் இளம் மகளை எப்படித் திருமணம் செய்து கொடுப்பது என்று பெருங்கவலை ஏற்பட்டது. மீண்டும் அவர் சிவனாரைத் தியானிக்க, அங்கே முதியவர் மறைந்து சாட்சாத் சிவபெருமானே தோன்றினார். சதுரங்க
ஆட்டத்தில் வென்று, ராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. அன்னை ராஜ ராஜேஸ்வரிக்கும் வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. நேற்று கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு.
திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் இந்த ஆலயத்தில் சதுரங்க வல்லப நாதருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவத்தலமாகும். ஆனால் இதையெல்லாம் ஒரு வட நாட்டவர் சொல்லிதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதுள்ளது.
நியாயமாக பார்த்தால் தமிழக அரசே முன்னின்று இந்திய சார்பில் பங்குபெறும் வீரர்கள் பெயரிலும் அந்த சதுரங்க பலகைகளுக்கும் பூஜைகள் செய்து நேற்று நிகழ்ச்சிகளை தொடங்கி இருக்க வேண்டும். 1500வருட பழமையான கோவில் இது.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾 #ChessOlympiad2022#அறிவோம்_கோவில்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மடி#ஆசாரம் என்றால் என்ன?
இது பற்றி இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு அன்றே #ஶ்ரீபுரந்தரதாசர் விடை அளித்துவிட்டார். சுத்தமும் தேவை, அதையும் விட முக்கிய தேவையை தெரிந்துகொளவோம்.
மடிமடி என்று அடிக்கடி சொல்வார்கள். மடியாக இருக்க வேறு வழி உண்டு. ஓடி விளையாடும் சிறுவனின் (ஸ்ரீகிருஷ்ணனின்) திருவடிகளை விடாமல் நினைத்து, அதைப்பற்றி பாடுவதே நிஜமான மடியாகும்.
பட்டெய நீருளகத்தி ஒணகிஸி
உட்டுகொண்டரே அது மடியல்லா
ஒட்டெயொளகின காம
க்ரோத
மத மத்ஸர பிட்டு நடெதரே அது மடியு
(கட்டிக்கொள்ளும்) ஆடையை நீரில் நனைத்து, காய வைத்து அணிந்து கொண்டால், அது மடியல்ல. நம் உடம்பில் இருக்கும் காமம், குரோதம் (கோபம்) மதம் (கர்வம்), மத்ஸரம் (பொறாமை) ஆகியவற்றை விட்டுவிட்டாலே அது மடிதான்.
#ஸர்வம்_ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில். அர்ச்சகரும், அவரிடம் வேலைபார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை நான்கு மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களை எல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தர
வேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசிராமனுக்கு, அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து, தொடுப்பான். பத்து, பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன், ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது
போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் விக்கிரகத்துக்கு மாலை சூட்ட போனால் ஏற்கனவே ஒரு புதுமாலையுடன் கிருஷ்ணர் காட்சி தருவார். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு, இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு, இதெல்லாம்
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள், தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை நீ எடுத்துக்
கொள் என்றான். ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான். நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை என்று சொன்னான் கர்ணன். ஆஹா நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன்
காண்டீவத்தை நம்புகிறான். நீ உன் திறமையை நம்புகிறாய் என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான். அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்
பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், பொயு 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர்
கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின்
நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர்.
தம் தாயார் இறந்த
பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
பட்டினத்தடிகளின் பாடல்
இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே;
பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும்
#மகாபெரியவா
ஒரு சமயம் சாதுர்மாஸ்யத்தை ஒட்டி ஸ்ரீமடத்திலேயே முகாமிட்டிருந்தார் மகாபெரியவா. வித்வத் விவாதங்கள் எல்லாம் நடந்து கொண்டு இருந்தன, அந்த சமயத்தில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மகா பெரியவாளை தரிசனம் பண்ண வந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்துல நாற்பத்தைந்து ஐம்பது வயது
மதிக்கத் தக்க பெண்மணி ஒருவரும் இருந்தார். அவர் முகத்தைப் பார்க்கிற போதே, ஏதோ ஒரு கலக்கம் அதில் இருப்பது தெரிந்தது. மகா பெரியவாளை அவர் தரிசிக்கற முறை வருவதற்குள், கிட்டத்தட்ட கதறி அழுதுவிடுகிற நிலைமைக்கே போய்விட்டார் அந்தப் பெண்மணி. ஆசார்யா முன்னால வந்து நின்னதும் எதுவுமே சொல்லாம
கேவிக்கேவி அழ ஆரம்பித்தார். ரெண்டு மூணு நிமிஷத்துக்குப் பிறகு, "என்ன ஆச்சு?" என்று கேட்கிற பாவனையோட அந்தப் பெண்மணியைப் பார்த்தார் மகாபெரியவா.
"சுவாமி நான் ரொம்ப பயந்து போயிருக்கேன். எனக்கு சீக்கிரமே உசுரு போயிடுமோ, என்னோட பொண்ணுகள் அநாதை ஆயிடுவாளோன்னு தோணறது. நீங்கதான்
#ஆரியபட்டா குப்த மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வான சாஸ்திரமும் சோதிட சாஸ்திரமும் உச்ச நிலையை அடைந்திருந்தது. காரணம், அப்போது வாழ்ந்திருந்த ஆரிய பட்டர், வராகமிஹிரர், பாஸ்கராசாரியார் போன்ற அறிஞர்களே! மாமேதை ஆரியபட்டரே இந்திய சோதிட சாஸ்திரத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
கணிதத்தில் இவர் சிறந்த வல்லுநர். கணித சூத்திரங்கள் பலவற்றை முதன் முதலாக அவர் வகுத்ததோடு, அவற்றுக்கு விளக்கமும் எழுதி வைத்தார். இன்றும் கூட அவரது சூத்திரங்கள் கணிதத் துறையில் பயன்பட்டு வருகின்றன. பூஜ்யம்: இப்போது உலகம் எங்கும் தசம முறை வழக்கில் உள்ளது. இந்தத் தசம முறை, பண்டைக்
காலத்திலேயே பாரதத்தில் கையாளப்பட்டு வந்த, ஒன்று முதல் ஒன்பது மற்றும் பூஜ்யம் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டதே. பூஜ்யம் முதன் முதலாக நம் நாட்டில் தான் கண்டறியப்பட்டது. புகழ்பெற்ற வெளிநாட்டு யாத்ரீகர்களான இப்னவேஷியா (ஒன்பதாம் நூற்றாண்டு) அலம் சூதி (பத்தாம் நூற்றாண்டு) அல்பரூனி(பதினோராம்