நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன? #அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8)
அங்கே ஒரு கிண்ணத்தில் fruit salad வைக்கப்பட்டுள்ளது! அதில் ஒரு கைப்பிடி எடுத்து உங்கள் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறீர்கள். அதில் பல கலவையான பழங்கள் இருக்குவே பலதரப்பட்ட இனிய ருசியையும், உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்களையும் ஒருங்கே பெறுவீர்கள்!
(2/8)
அதே சமயத்தில் இன்னொரு நபர் அங்கே வருகிறார். அவர் வாழைப்பழம் மட்டுமே உயரிய பழம் என்றும் இதுவே அனைத்து சத்துக்களையும் தனக்கு அளிக்கும் என்றும் நம்புகிறார்! அந்த கிண்ணத்தில் உள்ள வாழைப்பழத் துண்டுகளை மட்டும் உண்டுவிட்டு போகிறார்!
(3/8)
மூன்றாமவருக்கு ஆரஞ்சு பழங்கள் மேல் அலாதி பெருமை! பேரும் ஆரஞ்சு கலரும் ஆரஞ்சு இப்படி எந்த இனத்துக்காவது (பழ இனம் தான் friends) அமையுமா என்று பெருமை பட்டுக்கொண்டே ஆரஞ்சுத்துண்டுகளை மட்டும் உண்டுவிட்டு செல்கிறார்.
(4/8)
இதில் உங்களைத்தவிர மற்ற இருவருக்கும் அனைத்து சத்துக்களும் கிடைப்பதில்லை! மேலும் அடுத்தடுத்து வரும் வாழைப்பழ பிரியர்களுக்கும் ஆரஞ்சுப் பழ வெறியர்களுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிஞ்சிய கெட்டுப்போன அல்லது அடிபட்ட பழத்துண்டுகளே கிடைக்கும்
இது தான் மரபணுக்களிலும் நிகழும்! (5/8)
ஒரு populationனில் நம் அனைவரது மொத்த மரபணுக்கூட்டு (gene pool) ஒரு mixed fruit salad போல பல வகையான மரபணுக்களை கொண்டிருக்க வேண்டும்! அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து இன்னொரு கிண்ணத்தில் போடுவது என்பது ஒரு தலைமுறையின் மரபணுக்களை எடுத்து அடுத்த தலைமுறையை உருவாக்குவதைப் போன்றது.(6/8)
நீங்கள் கலவையான மரபணுக்களை எடுக்கும் வரையில் அடுத்தடுத்த தலைமுறை ஆரோக்கியமான diversityநிறைந்த genepoolஐ கொண்டிருக்கும். ஒரேகுழுவிற்குள் மட்டுமே மீண்டும்மீண்டும் மரபணுக்களைஎடுத்து நிர்ணயிக்கப்படும் தலைமுறையானது பன்முகத்தன்மையற்று மோசமானமரபணுக்களை தனது genepoolல் கொண்டிருக்கும்7/8
அதிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து அதற்கடுத்த தலைமுறை உருவாக்கும் போது அதன் விளைவு இன்னும் மோசமானதாய் இருக்கும்
எனவே வாழைப்பழபிரியராகவும் இல்லாம ஆரஞ்சுப்பழ வெறியராகவும் இல்லாமல் திறந்த மனதோடு இந்த அழகான ஆரோக்கியமான mixed fruit salad bowlஅயே நமது அடுத்த தலைமுறைக்கும் பரிசளிப்போம்! 8
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh