தயவு செய்து ஒரு நிமிடம் செலவு செய்து முழுவதும் படிக்கவும்.
இன்று இவருக்கு 147 ஆவது பிறந்த நாள்.
நம் நாடு எத்தனையோ வகை தேசிய கொடிகளை கொண்டு இருந்த காலத்தில் 01.04.1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விஜயவாடா நகருக்கு வந்த பொழுது அவரிடம் பிங்களி வெங்கையா அவர்கள் காண்பித்து
மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புதலின் பேரில் இப்பொழுது புழக்கத்தில் உள்ள நமது தேசிய கொடி அதிகார பூர்வ அங்கீகாரம் பெற்றது.
எனவே தற்பொழுது புழக்கத்தில் உள்ள நம் தேசிய கொடி 102 ஆண்டுகள் பழமையானது.
அப்போதைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திர மாநிலம்) இருந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பட்லபெறுமண்ணு என்ற கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி வறுமை மற்றும் ஏழ்மை நிறைந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிங்களி வெங்கையா பிறந்தார்.
வறுமையை, ஏழ்மையை சமாளிக்க விவசாயம் செய்து வாழ்வை நடத்தினார்.
அவ்வளவு வறுமையிலும் மசூலிப்பட்டணத்தில் ஒரு கல்வி நிலையம் நிறுவி / நடத்தி அனைவருக்கும் இலவச கல்வி வழங்கி வந்தார்.
அவர் அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் இராணுவத்தில் பணி புரிந்தவர்.
அந்த சமயம் தென் ஆப்பிரிக்கா சென்று யுத்தம் புரிந்தவர்.
அங்கு தான் அவருக்கு முதன் முதலில் மகாத்மா காந்தி அறிமுகம் ஆனார்.
இவர் ஒரு புவியியலாளறும் கூட.
இராணுவ பணி முடித்து மசூலி பட்டணத்தில் உள்ள ஆந்திர தேசிய கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்தவர்.
அனைவருக்கும் ஏகப்பட்ட உதவிகள் செய்து அவரின் *_அனைத்து சொத்துக்களையும் இழந்து கடனில் உயிர் விட்டவர்._*
இவர் தனது 86 வயதில் 1963 ஆம் வருடம் ஜூலை மாதம் 4 ஆம் தேதி *_கடனாளியாகவே_* மறைந்தார்.
*_அரசு ஆவணங்களின்படி இன்றும் அவர் ஒரு கடனாளி._*
*_அவரை நம் இந்தியா எளிதில் மறந்தது._*
உங்களுக்கெல்லாம் எப்படியோ தெரியாது.
நான் குறைந்தது ஒரு 100 முறையாவது தேசிய கொடியை முழுமையான விவரம் புரியாமல் தேசப்பற்றுடன் ஆர்வத்துடன் எனது சட்டையில் குத்தி மரியாதை செலுத்தி இருக்கிறேன்.
ஆனால் இவரைப் பற்றி இன்று தான் தெரியும்.
எனது தேசிய கொடியை வடிவமைத்தது யார் என்றே இன்று வரை தெரியாது.
உண்மையில் அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
2009 ஆம் ஆண்டு அவரின் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது.
2011 இல் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டது.
நேற்று அவரின் பிறந்த நாள் நினைவாக மீண்டும் ஒரு தபால் தலை புது டில்லியில் பிரதமர் அவர்களால் வெளியிடப்படுகிறது.
பிங்களி வெங்கையாவின் நினைவாக அவரின் 147 ஆவது பிறந்த நாளான இன்று நாம் அனைவரும் நம் அனைத்து வாட்ஸ் ஆப், முக நூல், டிவிட்டர் போன்ற நமது சமூக வலை தளங்களில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு
இன்று முதல் வரும் *_15 ஆகஸ்ட் வரை இந்திய தேசிய கொடியை நமது DP டிபி_* ஆக வைத்துக் கொள்ள நமது இந்திய பிரதமர் அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்திய பிரதமர் அழைப்பு விடுக்காவிட்டாலும் இது நம் அனைவரின் கடமை மற்றும் திரு. பிங்களி வெங்கையாவுக்கு நாம் செய்யும் மரியாதை மற்றும் நமது நன்றிக் கடன் ஆகும்.
எனவே நாம் அனைவரும் நம் அனைவரின் *_DP டி பி_* யை நம் தேசியகொடியாக மாற்றி திரு.பிங்களி வெங்கையாவுக்கு நமது மனம் கனிந்த நன்றிகளை காணிக்கையாக செலுத்துவோம்.
ஆடி பெருக்கு 2022 சிறப்புகளும், வழிபட வேண்டிய அவசியம் என்ன?*
ஆடி 18 அன்று சப்தகன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகள் நீராடி இறைவனை வணங்குவது வழக்கம்.
திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள் சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் நிலவுகிறது.
ஆடி மாதம் தொடங்கினாலே கிராமங்கள் திருவிழாக்களால் களைக்கட்டத் தொடங்கி விடும்.
தெய்வீகம் பொருந்திய ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை, ஆடி 18 (ஆடிப்பெருக்கு), கிராமங்களில் கோயில் திருவிழா என விசேஷங்கள் நிறைந்ததாக மக்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கக்கூடிய அருமையான மாதம்.
*பிரம்மா சரஸ்வதியிடம், “உலக உயிர்களைப் படைக்கும் நான்தான் பெரியவன். எனவே தான் பிரம்மா,விஷ்ணு, சிவன் என எனது பெயரை முதலில் கூறுகிறார்கள்” எனக் கூறினார்.*
🇮🇳🙏2
*இதைக்கேட்டு கலைமகளுக்கு சிரிப்பு வந்தது.கோபமடைந்த பிரம்மா, வாணியை பேசும் சக்தியற்றவளாக மாறும்படி சபித்தார். வருந்திய வாணி பூலோகம் வந்து சிருங்கேரி என்னும் தலத்தில் தவம் இருந்தாள்.*
திருமால் திரிவிக்கிரமனாக ஓங்கி உலகளந்தபோது, அவரது திருவடிக்குத் தன் கமண்டலத்திலுள்ள நீரால் பிரம்மா அபிஷேகம் செய்தார்.
அச்சமயம் திருமாலின் திருவடிச் சிலம்பில் பட்டுத் தெறித்த தீர்த்தம், சிலம்பாறு என்ற பெயருடன் திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் அழகர் மலையில் இறங்கியது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்ல பட்ச துவாதசியில் கள்ளழகர் சிலம்பாற்றில் நீராடுவது வழக்கம்.
அந்த வைபவத்தைக் காண அகஸ்திய முனிவரும் அவரது சீடர்களும் அழகர்மலைக்குச் சென்றார்கள். அங்கே கூடியிருந்த பக்தர்கள் எல்லோரும் ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று கோஷமிட்டார்கள். இதைக் கவனித்த அகஸ்தியரின் சீடர்கள், “குருவே! கோவிந்தன் என்றால் மாடு மேய்ப்பவன் என்று தானே பொருள்?
கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர்.
🇮🇳🙏1
திருநறையூர் என்றால் தேன் நிறைந்த பூக்களும் மணம் கமிழும் பொய்கைகள் கலந்து மணம் வீசும் ஊர் என்று பொருள். 🇮🇳🙏2
ஸ்ரீநிவாசப்பெருமாள் நாச்சியாரைத் தேடிக்கொண்டு வந்து திருமணம் செய்து கொண்டதோடு இந்த ஊரிலேயே தங்கிவிட்டதால் இந்த கோவில் நாச்சியாருக்கு சிறப்பிடம் தரப்பட்டு ஊர்ப்பெயரும் நாச்சியார் கோவில் என்றாகிவிட்டது.
( பசும்பொன் தேவர் - 1959-ல் பொள்ளாச்சி சிறீ குடலுருவி மாரியம்மன் கோவிலில் பேசியது.)
நட்ச்சத்திரம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பகலிலே பார்க்கிற ஓருவருக்கு நட்ச்சத்திரம் தெரியாது.
சூரியன் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும், இரவிலே பார்த்தால் சூரியன் தோன்றாது.
இரவிலே சூரியனை பார்த்து தவறாக சூரியன் என்பதே இல்லை என சொல்வது எவ்வளவு அவசர புத்தியோ... அவ்வளவு அவசர புத்திதான் தனக்கு நேரில் தெரியாதது அத்தனையும் இல்லை என வாதிக்க முன்வருவது.
எல்லாம் எல்லாருக்கும் தெரிகிற நிலைமையில் அமைந்தது அல்ல உலகம்.