A must watch video!
கீழே உள்ள வீடியோவில் பேராசிரியர் எரிக் க்ரீன் NHGRI ஆய்வகத்தில் நமது மரபணுத்தொகுப்பின் (genome) 1000இல் ஒரு பகுதியை சுவர்களில் அச்சிட்டுள்ளதை விளக்குகின்றார். நமது மரபணுவின் 1000இல் ஒரு பகுதி ஆக்கிரமித்துள்ள இடம் ~80 அடி.
எனில், மனிதனின் மொத்த மரபணுத்தொகுப்பு (~320 கோடி A, T, C மற்றும் G nucleotide மூலக்கூறுகள்) ஆக்கிரமிக்கத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 15.5 மைல்கள்.
ஆச்சர்யம் என்னவெனில் இந்த மொத்த மரபணுத்தொகுப்பும் நமது செல்களுக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டரை 100ஆல் வகுத்தால் எவ்ளவு சிறிய இடம் இருக்குமோ (10micrometer) அவ்வளவு சிறிய கருவிற்குள் (nucleus) அமையப்பெற்றுள்ளது.
பிகு: ஒரு nucleotide மூலக்கூறின் உண்மையான அளவு ஒரு மில்லிமீட்டரில் 10 லட்சத்தில் ஒரு பங்கு (1nanometer). எனில் ஏறத்தாழ 5 அடி மரபணுத்தொகுப்பு 10 micrometer அளவுள்ள கருவிற்குள் பந்து போல் சுருட்டிவைக்கப்பட்டுள்ளது. #அறிவோம்_மரபியல்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை 2/8
கண்டறிகிறார். நோயின் தீவிரமும் பாக்டீரியாவின் எண்ணிக்கையும் நேர்மறைத் தொடர்பில் இருப்பதையும் (postive correlation) காண்கிறார். முதலில் அந்த பாக்டீரியாவின் தன்மைகுறித்து ஆராய அதை ஆய்வகத்தில் வளர்ப்பது சிரமமாய் இருந்தாலும் பின் இரு மருத்துவர்களும் அதில் வெற்றி பெறுகின்றனர். (3/8)
பள்ளிக்காலங்களில் எங்கள் classல ஒரு பொண்ணு.
அவ தான் எப்பவுமே first rank. Perfection, Home work complete பண்றது, exams எல்லாத்திலயுமே அவ தான் top. Teachers எல்லாருக்கும் favorite. எங்களுக்குள்ள second இல்லனா third rankக்குத் தான் போட்டி இருக்கும்.
(1/6)
யாராலையுமே அவள beat பண்ணமுடியலன்றது classகுள்ள எப்படி மாறுச்சுனா "அவ teachers' favoriteன்றதால அவளுக்கு question papers கெடைச்சிடுது அதனால தான் அவ I rank எடுக்குறா அவளுக்கு தெறமைல்லாம் இல்லன்னு" ஒரு group conspiracy உருவாக்கிட்டு இருந்தாங்க.
(2/6)
அப்போ தான் நானும் என் friendஉம் கொஞ்சம் extra hard-work போட்டு மாறி மாறி first rank எடுக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் ஒரு student மட்டும் தான் இந்த classல படிப்பாளின்ற concept மாதிரி அந்த classல நெறய நல்லா படிக்கிற students உண்டுன்ற பேரு கிடைச்சது.
(3/6)
நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன? #அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8)
அங்கே ஒரு கிண்ணத்தில் fruit salad வைக்கப்பட்டுள்ளது! அதில் ஒரு கைப்பிடி எடுத்து உங்கள் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறீர்கள். அதில் பல கலவையான பழங்கள் இருக்குவே பலதரப்பட்ட இனிய ருசியையும், உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்களையும் ஒருங்கே பெறுவீர்கள்!
(2/8)
அதே சமயத்தில் இன்னொரு நபர் அங்கே வருகிறார். அவர் வாழைப்பழம் மட்டுமே உயரிய பழம் என்றும் இதுவே அனைத்து சத்துக்களையும் தனக்கு அளிக்கும் என்றும் நம்புகிறார்! அந்த கிண்ணத்தில் உள்ள வாழைப்பழத் துண்டுகளை மட்டும் உண்டுவிட்டு போகிறார்!
(3/8)