ஆண்களில் ஒரு 4 வகை இருக்காங்க 1. ஆணாதிக்கம் என்று ஒன்று இல்லவே இல்லை. இன்றும் இல்லை அன்றும் இல்லை என்றுமே இல்லை. பெண்கள் அந்த காலத்தில் பாதுகாப்புடன் இருந்தார்கள். ஆண்கள் அவர்களை பாதுகாத்தார்கள் இன்றுதான் பெண்கள் படித்துவிட்டு எதோ புரட்சி பேசி சமூக சீர்கேட்டை உண்டாக்குகிறார்கள்
தவளை தன் வாயால் கெடுவது போல அவர்கள் அவர்களாகவே சீரழிகிறார்கள்.
2. ஆணாதிக்கம் ஒரு 30 வருடங்கள் முன்பு இருந்தது. ஆனால் இப்போது சுத்தமாக இல்லை. பெண்கள் பரிபூரண விடுதலையுடன் சந்தோசமாக இருக்கிறார்கள்.
வேண்டுமென்றே இன்னமும் அடிமையாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி ஆண்களை exploit செய்கிறார்கள்.
3. பெண்கள் தான் இப்போது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஆண்கள் தான் பாவம் மிகவும் கஷ்டப்படுறோம். பொண்ணே கிடைக்கல. எந்த பொண்ணும் என்னை காதலிப்பதில்லை. ஆண் இனமே பாவப்பட்ட இனம்.
என்னுடைய வேலைவாய்ப்பை பெண்கள் பிடுங்கி கொள்கிறார்கள். எல்லா வகுப்பிலும் அவர்கள் தான் முதல் மதிப்பெண்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு இலவச பேருந்தெல்லாம் இருக்கு எங்களுக்கு என்ன இருக்கு நாங்க பாவப்பட்ட ஜென்மம்.
4. பெண்களின் நிலை குறித்து உண்மையிலேயே வருந்தி அதற்காக குரல் கொடுப்பவர்கள். ஆணாதிக்கத்தை ஒப்புக்கொண்டு அதை எதிர்ப்பவர்கள்.
இதில் முதல் வகை தான் பெண்களை இழிவுபடுத்தி memes போன்றவற்றை போடுவது. பெண்கள் பணத்தாசை பிடித்தவர்கள். அரைகுறை ஆடையுடன் சுற்றுகிறார்கள்,
காதலித்து கழட்டி விட்டுவிடுவார்கள் போன்ற stereotype meme போட்டு கலாச்சார பாடம் எடுப்பவர்கள். பெண்கள் கருத்து சொன்னால் halfboil, கிழவி, aunty, பெரியார் பேத்தி என்று மட்டம் தட்டுபவர்கள்.
இந்த முதல் வகை போடும் memes/comments க்கு super மச்சி என்று கை தட்டி ரொம்ப ரசித்து சிரிப்பவர்கள், அதை வேகமாக பகிர்பவர்கள் 2ஆம் வகை. 3ஆம் வகை பாவப்பட்ட வகை அமைதியாக like மட்டும் போட்டுவிட்டு உள்ளுக்குள் ரசித்துக்கொள்வார்கள்.
இந்த 4ஆம் வகை இத்தகைய பிற்போக்கு memes/comments க்கு பொங்கி எழுந்து கண்டனம் தெரிவிக்கும்போது. முதல் வகை, "தோ, வந்துட்டாங்கப்பா any help shalini ன்னு... பொம்பளைங்களுக்கு ஒண்ணுன்னா உடனே shoulder அ தூக்கிட்டு வந்துடுவாங்க." என்று 4ஆம் வகை ஆண்களை மட்டம் தட்டுவார்கள்.
இதற்கும் 2ஆம் வகை கைதட்டும்.
இந்த 3 ஆம் வகை, 4 ஆம் வகை ஆண்களுக்கு பெண்களுக்கு மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பார்த்து அதே போல செய்து பெண்கள் அபிமானத்தை பெற முயல்வார்கள்,
அதனால் "உங்க நன்மைக்கு தான் தோழி சொல்றேன்... இந்த 1ஆம் வகை ஆண்கள் எல்லாம் ரொம்ப மோசமானவங்க அவங்க கிட்ட வச்சுக்காதீங்க தோழி, ஷால் போடுங்க தோழி, என் மேல நம்பிக்கை இருந்தா உங்க நம்பர் குடுங்க." என்பார்கள்.
இவர்களுக்கு 1ஆம் வகை ஆண்களை பகைத்து கொள்ள பயம் அதே சமயம் காதலிக்க பெண்கள் கிடைப்பதே இல்லையே என்கிற ஆதங்கமும் உண்டு.
இந்த 3ஆம் வகையின் double standards ஐ, பெண்களும் 4ஆம் வகை ஆண்களும் சுட்டிக்காட்டும்போது,
"நானே பாவம், பொண்ணு கிடைக்காம வேலை கிடைக்காம கஷ்டப்படுறேன்" என்று மூக்கு சிந்துவார்கள்.
ஆண்கள், பெண்களை பற்றி இழிவாக போடும் மீம்ஸ் அல்லது comments க்கு தான் பெண்கள் எதிர்வினையாற்றுகிறார்கள்.
'பெண்களே தேவை இல்லை' என்று ஆண்கள் போடும் பதிவிற்கு தான். 'ஆண்கள் இல்லாமல் உலகம் இயங்கும் பெண்கள் இல்லாமல் இயங்காது' என்று பெண்கள் பதில் பதிவிடுகிறார்கள்.
'பெண்களே தேவை இல்லை' என்று 1ஆம் வகை ஆண் போட்ட மீம்ஸ் ஐ, சௌகரியமாக இந்த 2ஆம் 3 ஆம் வகை ஆண்கள் மறந்துவிட்டு
அதற்கு பெண்கள் ஆற்றும் எதிர்வினையில் மட்டும் வந்து குறை சொல்வார்கள்.
'பெண்கள் பணக்காரனை மட்டும்தான் திருமணம் செய்துகொள்வார்கள்' என்று கண்ணியமற்ற முறையில் ஒரு ஆண் போட்ட பதிவிற்கு, பெண்கள் எதிர்வினையாற்றினால் அங்கு வந்து
"பெண்கள் ரொம்ப யோக்கியம் மாதிரி பேசாதீங்க... எனக்கு எல்லாம் பெண்ணே கிடைக்கல தெரியுமா?" என்று மூக்கு சிந்துவார்கள்.
ரோட்டில் எவனாவது பொறுக்கி, கூட வரும் மனைவியை கிண்டல் செய்வான்... அவனை தட்டிக்கேட்க தைரியம் இருக்காது.
"நீ ஒழுங்கா dress பண்ணுனா, கண்டவன் எல்லாம் ஏன் உன்னை கிண்டல் பண்ண போறான்?" என்று மனைவியை கடிந்துகொள்ளும் கையாலாகாத்தனம் போன்றதே இது.
#Netflix இல் #Darlings என்றொரு படம் வந்து இருக்கிறது. அந்த படத்தை பாருங்கள்... அதில் கணவன் குடித்துவிட்டு வந்து மனைவியை அடிப்பான்.
அதை பார்க்கும்போது உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் வராது. பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு இயல்பாக பார்ப்பீர்கள். அடுத்து, அடிவாங்கிய மனைவி கணவன் திருந்திவிடுவான் என்று அவனை தாங்கி கொண்டே இருப்பாள் அப்போதும் உங்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது...
ஆனால், அந்த கணவனின் கொடுமை தாங்க முடியாமல்... தனது தாயுடன் சேர்ந்து அவனை கொன்று விடலாம் என்று அவள் திட்டமிடும் போது உங்களுக்கு பக்கென்று இருக்கும். அதை உங்களால் ஜீரணிக்க முடியாது. இதை படிக்கும்போதே உங்களுக்கு 'என்னது!!!' என்று அதிர்ச்சியாக தான் இருக்கும்.
ஒரு ஆண், ஒரு பெண்ணை சின்ன சின்ன விஷயங்களுக்காக அடிக்கும்போது நமக்கு நெஞ்சம் பதறாது. ஏனென்றால் அதெல்லாம் பார்த்து பழகியது தானே...
அந்த பெண் திரும்ப திரும்ப அடிவாங்கும் கணவனிடமே சென்று விழும்போதும்... நமக்கு எவ்விதமான மனஇடறலும் தோன்றாது... காலம் காலமாக இதானே நடக்குது...
ஹே என்று அலட்சியமாக அந்த காட்சிகளையும் கடந்த செல்வோம்...
ஆனால் அந்த பெண் அவளது கணவனை கட்டி வைத்து அடிக்கும்போது... அவனை கொல்ல திட்டமிடும் போது... நமது மனம் பதறும்,
"என்ன இருந்தாலும் இது தப்புப்பா, போலீஸ் ல complaint குடுக்க வேண்டியது தானே... divorce வாங்கிட்டு போகலாம்ல, அவன் தப்பையே இவளும் செய்தா அது சரியா?" என்றெல்லாம் அங்கலாய்க்க தோன்றும்.
பெண் மட்டும் எப்போதும் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு மத கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
ஆனால் இதுவே ஒரு ஆண் உதாரணமாக திருப்பாச்சியில் விஜய் சட்ட திட்டத்தை மதிக்காமல் ரௌடியை கொலை செய்யும்போது, விசில் அடித்து கைதட்டுவோம். அப்போது நமக்கு அந்த காட்சி சங்கடமாக இருக்காது.
"என்ன இருந்தாலும் தப்புப்பா இவனும் இப்படி அவங்களை கொலை செய்தால் ரௌடியிக்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்? போலீஸ் கிட்ட சொல்லலாம், கோர்ட் இருக்கு" என்றெல்லாம் புலம்ப மாட்டோம். "அடிடா அவனை, குத்து டா" என்று குதூகலிப்போம்
ஏன் ஒரு காட்சி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் அசௌகரியமாக உணர்கிறோம், மற்றொரு காட்சியை விசில் அடித்து வரவேற்கிறோம்? ஏனென்றால் ஒரு காட்சி நாம் காணாத காட்சி. மற்றொன்று நமக்கு பழக்கப்பட்ட காட்சி.
அதேதான், ஆண்கள் பெண்களை நக்கலடிப்பது கிண்டலடிப்பது காலம் காலமாக பழக்கப்பட்ட காட்சி (பட்டிமன்றம் முதல் இன்றைய மீம்ஸ் வரை). அது காமெடி... தமாசு... அதற்கு பெண்கள் ஆற்றும் எதிர்வினை நாம் இதுவரை காணாதது நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது...
"அதுக்காக நீங்க இப்படி ஒரேடியா எல்லா ஆண்களையும் சொல்லலாமா? பெண்களும் மோசமானவங்க இருக்காங்க அதை பத்தி சொல்ல மாட்டிங்களா? பெண்களால் நான் எவ்ளோ பாதிக்கப்பட்டு இருக்கேன் தெரியுமா?" என்றெல்லாம் அங்கலாய்க்க தோன்றுகிறது...
பெண்களை stereotype செய்து "எல்லா பெண்களும்" என்ற தொனியில் ஆண்கள் அடிக்கும் நக்கலை, 'ஹை தாமசு' என்று பெண்கள் சிரித்து கடக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல...
அதற்கு பெண்கள் ஆற்றும் எதிர்வினையை "சரி அவங்க தரப்பை அவர்கள் சொல்கிறார்கள்" என்று இயல்பாக ஆண்கள் ஏன் கடந்து செல்ல கூடாது?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
self-improvement பற்றி புத்தகங்கள் எழுதுபவர்களும், YouTube களில் பேசுபவர்களும் இளைஞர்கள் குறிப்பாக 20 முதல் 35 வயது ஆட்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வயது எதையாவது செய்து முன்னேற வேண்டும் சம்பாரிக்க வேண்டும் என்று நினைக்கும் வயது.
அதனால் அவர்களுக்கு சுய முன்னேற்றம், எப்படி வாழ்வில் முன்னேறலாம் போன்ற topic மிகவும் பிடிக்கிறது.
அதனாலேயே மிகவும் பிரபலமானவராக Jordan B Peterson இருக்கிறார். ஆனால், இங்கு எப்படி வலது சாரியை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் வசீகரமான எழுத்துக்களால் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
அதில் இருக்கும் ஆபத்து உள்நோக்கம் அறியாமல் நாம் அவர்களை ரசிக்கிறோம் என்று விமர்சனம் வைக்கிறோமோ அதே போல Jordan B Peterson கனடாவின் வலது சாரி நபர். வசீகரமான அவரது எழுத்து மற்றும் பேச்சால் தவறான விஷயங்களை முன்வைக்கிறார்.
ஹையோ இப்படி எல்லாம் பேசுறதுக்கு உனக்கு யாருடா சொல்லி தரது அப்படினு கேக்கணும் போல இருக்கு. உணவுக்குழாய் என்கிற வார்த்தையில் 'குழாய்' இருப்பதால் அது எதுவோ PVC pipe மாதிரி இருக்கும் என்று நினைத்து கொண்டார்கள் போல.
முதலில் நின்று இருந்தாலும் அமர்ந்து இருந்தாலும் படுத்து இருந்தாலும் வாய்க்கும் வயிற்றுக்கு உண்டான தூரம் ஒன்று தான். ஒரே புவிஈர்ப்பு விசை தான். நின்று கொண்டு குடித்தால் வேகமா வந்து தண்ணீர் விழுந்து சிதறும் என்கிறார்களே.
esophagus என்பது காலி PVC pipe அல்ல எது போட்டாலும் அப்படியே நேரே பொதக்கடினு விழ. நிறைய தசைகளால் ஆனா ஒரு குழாய் அதில் உணவாக இருந்தாலும் சரி நீராக இருந்தாலும் சரி peristalsis எனப்படும் ஒரு அலை போன்ற தசைகளின் நகர்வால் தான்,
கருத்து சுதந்திரத்தின் மீது கொலை முயற்சி
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
நேற்று மேற்கு நியூயார்க்கில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக எழுத்தாளர் சல்மான் ரஷ்டி சென்றிருக்கிறார். அங்கே அவருடைய உரை துவங்கும் முன்பு திடீரென மேடை ஏறிய ஒரு இளைஞன்
கத்தியை எடுத்து அவரைப் பல முறை குத்தி இருந்திருக்கிறான். மேடையில் உடன் இருந்தவர்கள் அவனைத் தடுக்க முயல அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷ்டி பல முறை குத்துப்பட்டிருக்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யபட்டு வருகின்றன. அவருடைய இலக்கிய ஏஜெண்டு ஆண்ட்ரூ வைலி கொடுத்த தகவலின்படி அவர் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி பெண்களை தாய், ஒவ்வொரு வீட்டிலும் கடவுள் இருக்க முடியாது என்று தான் தாயை படைத்து இருக்கிறார் என்றெல்லாம் glorify செய்வது தவறோ அதே போல தான் இதுவும். எதெல்லாம் புனிதமாக்கப்படுகிறதோ அதெல்லாம் சுரண்டப்படுகிறது என்று அர்த்தம்.
எல்லையில் ராணுவ வீரர்கள், விவசாயி இல்லாவிட்டால் வீட்டில் அடுப்பெரியாது என்றெல்லாம் கண்ணீர்மல்க பேசுவோம் ஆனால் அவர்களது வாழ்க்கை தரம் உயர எதாவது செய்வோமா? மாட்டோம். உணவு சரியில்லை என்று ராணுவ வீரர் கண்ணீர் வீடியோ போடுவார். அரை நிர்வாணத்துடன் தலைநகரில் விவசாயி போராட்டம் செய்வார்.
இங்கு ஆண்கள் கடினமான வேலை செய்கிறார்கள் தான். அதை அங்கீகரிக்க வேண்டும். புனிதப்படுத்த கூடாது. இதுபோன்ற உயிருக்கு ஆபத்தான கடினமான வேலைகளை யாருமே செய்ய கூடாது. அதற்கு என்ன பண்ணலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர...
ஒரு rugged ஆண் எப்படி இருக்கணும்?
கட்டுமஸ்தா? ஒல்லியா?
பெரிய தாடி? மீசை மட்டும்? இல்ல அதுவும் இல்லாம?
இதுபோல கேள்விகளை நம்முன் வெச்சா ஒவ்வொரு பெண்ணுக்கும் வெவ்வேறு தேர்வுகள் இருக்கும்.
ஒவ்வொரு தேர்வுக்கும் பின்னாடி சில சமூக புகட்டலும் சில தன்னிச்சையான ஆசைகளும் அடங்கி இருக்கும்.
இதை நாம "sexual preference" என்ற பதத்தில் எடுத்துக் கொள்ளலாமா?
தமிழ் பெண்களின் ஒரு பெரிய பிரச்சனை, "மீசை வைத்தால் எனக்கு பிடிக்கும்" என்று சொல்ல மாட்டார்கள்.
"மீசை வச்சா தான் ஆம்பளைக்கு அழகு" என்று மாற்றி சொல்வார்கள். அதாவது அவங்களுக்குன்னு விருப்பு வெறுப்பு எதுவும் இல்ல. இப்படி இருந்தா அழகு, அப்படித்தான் ஊர் சொல்லுது, இவங்களும் ஊரோடு சேர்ந்து தான் இருக்காங்க.
Marie Curie அவரது கணவருடன் நோபல் பரிசு பெற்றார். பின் அவரது கணவர் 1906 இல் இறந்துவிட, British scientist Kelvin, ரேடியத்தை கண்டுபிடித்ததாக மேரி பொய் சொல்கிறார் உண்மையில் அது radium அல்ல lead மற்றும் helium கலவையே அது என்றார்.
Marie உடனே molten radium chloride ஐ electrolyze செய்து pure radium ஐ isolate பண்ணி Kelvin னின் கூற்று தவறென்று நிரூபித்தார்.
“There are sadistic scientists who hurry to hunt down errors instead of establishing
the truth.”
- Marie Curie
1911 இல் வலது சாரி பத்திரிக்கைகள், Marie Curie ஒரு யூதர். அவரது கணவனின் முன்னாள் மாணவரான Paul Langevin க்கும் இவருக்கும் தொடர்பு இருக்கிறது. இந்த தொடர்பை அறிந்து தான் கவனமின்றி சென்று அவரது கணவர் விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.