ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார்.
பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்தார். காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) பெருமான் அருளிச் செய்தார்.
திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருநாவுக்கரசர் சுவாமிகள் பதிகங்கள் பாடப் பெற்ற திருத்தலம்.
சப்தஸ்தான தலங்களில் 5-ம் தலம்.
"சாதாதாப" முனிவருக்காக இறைவன் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார்.
மேலும் பெருமான் சாதாதாப-க்காக வில்வமரத்தை கயிலையிலிருந்து வர வைத்தார் ஆகையால், இத்தலம் 'ஆதிவில்வாரண்யம்' என்றும் பெயர் பெற்றது.
தேவாரப்பாடல்:
திருச்சிற்றம்பலம்
பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை
உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்
கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த
தொண்டர் பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே.!
ஔவையார் இத்தல விநாயகரை, “சீதக் களப” எனத் தொடங்கும் அகவல் பாடி பூஜித்து, அவரது தும்பிக்கையால் கயிலை அடைந்த பதி.
அவ்வையார், கபிலர் சேர்ந்து, பாரி வள்ளலின் மகள்களை (அங்கவை சங்கவை), திருக்கோயிலூர் மன்னனுக்கு திருமணம் செய்து வைத்த சிறப்புடைய தலம் இது.
முருகன் அசுரனை கொன்றதால் பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூஜை செய்ய வேண்ட, ஏற்ற இடத்தை உணர்த்த அம்பாள் எறிந்த வேல் விழுந்த தலம்.
தேவாரப்பாடல்:
திருச்சிற்றம்பலம்
ஆறு பட்ட புன்சடை அழகன் ஆயிழைக்கு ஒரு
கூறு பட்ட மேனியான் குழகன் கோவலூர்தனுள்
நீறு பட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்
வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே.!
திரிபுரதகன உத்ஸவம் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடக்கிறது.
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் 3 அசுரர்கள் செய்து பிரம்மாவிடம் தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாத வரம் பெற்றனர்.
தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று தேவர்கள் நினைத்து கொண்டிருக்க, சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை.
அசுரர்களை பார்த்து சற்றே புன்னகைத்தார். அவ்வளவுதான், உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்ட மூவரும் சாம்பலாயினர்.
தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.
ஒரே சமயத்தில் தேவர்கள், அசுரர்கள் இருவரது ஆணவத்தையும் அடக்கினார் பெருமான்.
அப்பர் சுவாமிகளின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்த திருத்தலம்.
"கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கி "நாவுக்கரசு" என்ற பட்டம் பெற்ற அற்புதத்தலம்.
ஞானசம்பந்தர் சுவாமிகளுக்கு இறைவன் திருநடனம் காட்டிய தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான 'உண்மை விளக்கம்' நூலை அருளிய 'மனவாசகங்கடந்தார்' அவதாரத் தலம்.
சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த் திங்கள் சூளாமணியும்
வண்ண இரிவை உடையும் வளரும் பவள நிறமும்
அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும்
திண்ணென் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர் நாம்
அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.!
இங்குள்ள தட்சபுரீசுவரரின் காலடியில் தட்சன் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிக சிறப்பானது.
தேவாதி தேவர்களை எல்லாம் அழித்ததுடன், அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார்.
நவகிரகத்திற்கென்று கோயில் இல்லை.
சுப்பிரமணியர் திருவுருவம் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளது. அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடல் பெற்றது திருத்தலம்.
தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'பறியலூர்' என்றும், தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் வழங்கலாயிற்று.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப் பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத்தானே.!
சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில், சலந்தரன் சங்கரிக்கப்பட்ட திருத்தலம் இது.
சலந்தரனின் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பது தொன்வரலாறு.
திருமால் வழிபட்ட இலிங்கத் திருமேனி தனிக் கோவிலாக உள்ளது.
சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரனாதலால் குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.
சலந்தரனைச் சம்ஹரித்த மூர்த்தி, ஜலந்த்ரவதமூர்த்தி, உற்சவத் திருமேனி கொண்டு, வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தி, ஏனைய கரங்களில் மான், மழு ஏந்தி, முத்திரையுடன் அருட்காட்சி அளிக்கிறார்.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
கரிய கண்டத்தர் வெளிய வெண்பொடி அணி மார்பினர் வலங்கையில்
எரியர் புன்சடை இடம் பெறக் காட்டு அகத்து ஆடிய வேடத்தர்
விரியும் மா மலர்ப்பொய்கை சூழ் மது மலி விற்குடி வீரட்டம்
பிரிவு இலாதவர் பெருந் தவத்தோர் எனப் பேணுவர் உலகத்தே.!
தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன் பால் ஏவி விட, பெருமான் அதை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம்.
வழுவை– யானையை உரித்த ஊர், வழுவூர் என்பர்.
பெருமான், கஜசம்ஹாரமூர்த்தி ஆக தரிசனம் தருகின்றார். யானையை அழித்து, தோலுரித்து சிரசின் மீது சுற்றியவண்ணம், இறைவன் வீர நடனமாடுகின்றார்.
யானையின் வால்புறம் சிரசின் மீது தெரிகிறது. திருமேனி ஓங்கார வடிவில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் அட்ட வீரட்டத்தலங்களில், மன்மதனை எறித்த திருத்தலம் இது.
காமதகன மூர்த்திப் பெருமான் என்ற திருநாமத்துடன் உற்சவ முகூர்த்தியாக அருள்கிறார்.
பெருமான், இடக்காலை மடித்து வலக்காலைத் தொங்கவிட்டு வலக்கை அபய முத்திரையுடன் இடக்கையை மடக்கிய கால் மீது வைத்து அமர்ந்த நிலையில் யோக மூர்த்தியாக வீற்றிருக்கிறார்.
யோக மூர்த்த பெருமானை நினைத்தவுடன் தரிசிக்க இயலாது. சுவாமியை தரிசிப்பவர்களுக்கு யோக நிலை கைகூடும் என்பது ஐதீகம்.
மூலவர் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையாரில் உயர்ந்த பாண லிங்கத் திருமேனியாக பெருமான் அருள்கிறார்.
மன்மதன் எறிந்த பஞ்ச பாணங்களுள் ஒன்றான பத்மம் (தாமரை) பதிந்துள்ள அடையாளம் சுவாமி பீடத்தின் முன்புறத்தில் நடுவில் உள்ளது.
தேவாரப் பாடல்:
திருச்சிற்றம்பலம்
அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி
வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அருந்தவத்த
கணம் புல்லர்க்கு அருள்கள் செய்து, காதல் ஆம் அடியார்க்கு என்றும்
குணங்களைக் கொடுப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே.!
எங்கள் நெறி சொன்னது.
இதை உணர்ந்து எங்கள் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, அவர்களது பெருமைகளை அழிக்கத் துடிக்கும் ஈனர்கள்.
நமக்கு கிடைக்கப் பெற்ற தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள், மற்றும் உள்ள ஏனைய கோயில்களில் உள்ளவர்கள் இந்து தெய்வங்கள் தானே.!
👇🏼
சனாதனமே வாழ்வியல் நெறி.!
நம் சனாதன தர்மத்தைப் பற்றியும் அதிலும் குறிப்பாக சைவநெறி பற்றியும் அடிப்படை அறிவு கூட இல்லாத திரு.தெரு, திராவிட விசங்கள், பகுத்தறிவு வியாதிகள் எல்லாம் உருட்டும் பிரட்டுகளை சகிக்காமல், எழும் கேள்விகள் சில.
இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.
அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?
"பூ நாளும் தலை சுமப்ப"
-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
1/
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!
என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.
2/
எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று
அருச்சிப்பதை கூறுவதாக பொதுப் பொருளாக விளக்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
"எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்.
பெருமான் பரமசிவம், ஆன்மாக்களை இரட்சிக்கும் பொருட்டாகப் பஞ்ச கிருத்தியங்களைப் புரிகிறார்.
அதற்காக அருவமாகிய சிவம், சக்தி, விந்து, நாதம் ஆகிய நால்வரும்,
அரு உருவமாகிய சதாசிவமும்,
உருவமாகிய மகேசுவரர் , உருத்திரர் ஆகிய இருவரும்,
இவர்கள் அதிகாரத்தைப் பற்றி நடக்கிற பிரம்மா, விஷ்ணு இருவரும்
ஆக ஒன்பது மூர்த்திகளுமாய் உபாதானத் திரயங்களைக் கொண்டு, சிருட்டித்து, திதித்து, சங்கரித்து, திரோபவித்து, அனுக்கிரகித்து இப்படி பஞ்ச கிருத்தியங்களைச் செய்கிறார்.
தேவார கோயில்கள் - 127
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்:
திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்ற தலம்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானோரின் மடங்களை வடக்கு வீதியில் தரிசிக்கலாம்.
இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.
சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை சம்பந்தரின் வாக்கு.
ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.
புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.
இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.
பொன்மை நிறம் - மண் (காஞ்சிபுரம்)
வெண்மை நிறம் - நீர் (திருவானைக்காவல்)
செம்மை நிறம் - தீ (திருவண்ணாமலை)
கருமை நிறம் - காற்று (காளஹஸ்தி)
புகை நிறம் - ஆகாயம் (சிதம்பரம்)