*சுதந்திர தினத்திற்கும்* ( *Aug-15* ) , *குடியரசு* *தினத்திற்கும்* ( *Jan* - *26* ) கொடி ஏற்றுவதில் - பறக்கவிடுவதில் உள்ள மூன்று வித்தியாசங்கள் :
*முதல் வித்தியாசம்* ...
ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால் இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
சுதந்திரம் பெற்ற அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு " *கொடியேற்றம்* " அதாவது " *Flag* *Hoisting* " என்றழைக்கபடுகிறது.,
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று ,
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்
இதை " *கொடியை* *பறக்கவிடுதல்* " அதாவது " *Flag* *Unfurling* " என்பார்கள்..
*இரண்டாவது வித்தியாசம்* ...
சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர்தான் நாட்டின் முதல் மனிதராக Political Head ஆக கருதப்பட்டார்.
குடியரசு தலைவர் ஒரு Constitutional Monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர் கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் அன்றைய தினம் மாலையில் ரேடியோ, தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்.
குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால் அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..
*மூன்றாவது வித்தியாசம்* ...
சுதந்திர தினத்தன்று *டில்லி* *செங்கோட்டையில்* கொடி *ஏற்றப்படுகிறது* .
குடியரசு தினத்தன்று *டில்லி ராஜ்* *பாத்தில்* கொடி *பறக்கவிடப்படுகிறது* .
நம் நாடு எத்தனையோ வகை தேசிய கொடிகளை கொண்டு இருந்த காலத்தில் 01.04.1921 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விஜயவாடா நகருக்கு வந்த பொழுது அவரிடம் பிங்களி வெங்கையா அவர்கள் காண்பித்து
மகாத்மா காந்தி அவர்களின் ஒப்புதலின் பேரில் இப்பொழுது புழக்கத்தில் உள்ள நமது தேசிய கொடி அதிகார பூர்வ அங்கீகாரம் பெற்றது.
எனவே தற்பொழுது புழக்கத்தில் உள்ள நம் தேசிய கொடி 102 ஆண்டுகள் பழமையானது.
அப்போதைய சென்னை மாகாணத்தில் (இன்றைய ஆந்திர மாநிலம்) இருந்த கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பட்லபெறுமண்ணு என்ற கிராமத்தில் 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் தேதி வறுமை மற்றும் ஏழ்மை நிறைந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிங்களி வெங்கையா பிறந்தார்.
புளிங்குடி கிடந்து வரகுண மங்கை யிருந்து வைகுந்தத்துள் நின்று தெளிந்த என் சிந்தை அகங்கழியாதே என்னை யாள்வாய் எனக்கருளி நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்ப நீ காண வாராயே.
ஸ்ரீ வேதவியாசருடைய ப்ரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தின் படி உரை (பாஷ்யம்) எழுத வேண்டும் என்பது சுவாமி ஆளவந்தாரின் விருப்பம். அவரது ஆசையை நிறைவேற்ற உறுதிபூண்டார் ராமானுஜர்.
பிரம்ம சூத்திரத்துக்கு ஏற்கெனவே ‘போதாயான மஹரிஷி’ எனும் வேதவியாசரின் சிஷ்யர் எழுதிய போதாயன விருத்தி எனும் நூலைக் கேள்விப்பட்டார். ஆனால் அது எங்கும் கிடைக்க வில்லை. போதாயன விருத்தியின் மூல நூல் 2 லட்சம் படிகளை உடையது.
ஆனால் காஷ்மீர் சரஸ்வதி பீடத்தில் 25,000 படிகளை மட்டுமே கொண்ட சுருக்கமான நூல் இருப்பது தெரிய வந்தது. உடனே கூரத்தாழ்வானுடன், ஶ்ரீரங்கத்திலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட்டார் ராமாநுஜர். மூன்று மாதங்கள் நடந்து சென்று இருவரும் காஷ்மீரை அடைந்தனர்.