#நெஞ்சுக்குநீதி படம் இன்றுதான் பார்த்தேன்!
நெகிழ வைத்து விட்டீர்கள்!🥲🥲
பல இடங்களில் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டி வந்தது, கதையின் சோகத்தினால் மட்டுமில்லை பெருமிதத்தினாலும்!
<1/11>
"கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி
கொட்டுன்னுதானே சொன்னாங்க?
கூரையுமில்லா வீட்டுல வாழும்
எங்களை எதுக்கு கொன்னாங்க?"- என்ற பாடல் வரியில் சோகத்தால் கண்ணீர். கடைசியில் எல்லோரும் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தும்பொழுது பெருமிதத்தால் கண்ணீர். கண்ணீருக்குத்தான் பாகுபாடு இல்லையே!
<2/11>
எனவேதான் சோகத்திலும் வருகிறது, பெருமிதத்தாலும் வருகிறது!🥲
ஒரு படம் பார்க்கையில் இத்தனை தடவை மெய்சிலிர்க்குமா? இந்தப் படத்தில் அது நிகழ்கிறது. கொல்லப்பட்ட நம் தங்கை அனிதாவுக்குப் படத்தில் மருத்துவ அங்கி மாட்டி அழகு பார்த்திருக்கிறீர்கள்! அந்த ஒரு காட்சியே கோடி பெறும்!
<3/11>
1) முழுப் பெயர் கேட்கும் இடங்கள் 2) இந்தித் திணிப்புக்கு எதிரான காட்சி 3) காவல்துறைக்குள் சாதிய மனப்பான்மை 4) தாழ்த்தப்பட்டவர்களை மனிதர்களாகவே பார்க்காத மேட்டிமைத் திமிர் 5) மேல்சாதி கீழ்சாதி என எல்லாருக்குள்ளும் கொஞ்சம் ஒட்டியிருக்கும் சாதியப் பார்வை
- இன்னும் இன்னும் என
<4/11>
கிடைக்கும் அத்தனை இடைவெளிகளிலும் ஆப்படித்திருக்கிறீர்கள்!
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக் கதையை எந்த இடத்திலும் முகம் சுளிக்க வைக்காமல் காட்சிப்படுத்தி அதே நேரம் சொல்ல வந்த கருத்தைக் காரமும் ஈரமும் குறையாமலும் சொன்ன விதம் அசத்தல்!
<5/11>
உரையாடல் ஒவ்வொன்றும் வெடிமருந்து!
"30 ரூபா கூலி ஜாஸ்தி கேட்டதுக்கா அடிச்ச?" என்ற கேள்விக்கு "இல்ல, ஜாஸ்தி கேட்டதுக்கு" என்ற மறுமொழி கீழவெண்மணிப் படுகொலைகளுக்குப் பின் இருந்த வன்மத்துக்கு 54 ஆண்டுகள் கழித்துப் புது விளக்கம் தருகிறது!
<6/11>
எல்லாவற்றுக்கும் மேலாக நம் சமுகத்தின் உண்மையான வில்லன் யார் என்பதை உருவமாகவே காட்டி விட்ட உங்கள் துணிச்சல் உச்சக்கட்டம்!🫡
இதில் பார்ப்பனராக நடிக்கத் துணிந்து முன்வந்த சுரேசு சக்கரவர்த்தி அவர்களுக்குத் தலை வணக்கம்!
<7/11>
படத்துக்குக் கதைத்தலைவனாக @Udhaystalin அவர்களை நீங்கள் தேர்ந்தெடுத்தது செம்மை! இதன் மூலம் படத்தின் கருத்து மக்களுக்கானதாக மட்டுமின்றி தேசிய அரசியல் மட்டத்திலுமானதாக உயர்ந்து நிற்கிறது!
<8/11>
சாதியின் கொடூரத்தை அறியாமலே அதைச் சரி என நினைத்துக் கடைப்பிடிக்கும் சராசரித் தமிழனாகக் கடைசியில் மயில்சாமி அவர்களின் நடிப்பு விழிப்புணர்வற்ற கோடிக்கணக்கான மக்கள் நெஞ்சில் நீங்கள் அள்ளி வைத்த நெருப்பு!
<9/11>
தயவு செய்து இந்தப் படத்தை இந்தியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுங்கள்! நாட்டிலுள்ள அத்தனை பேருக்கும் உறைக்கட்டும்!
ஆனால் இவ்வளவும் இருந்தாலும் திரைமொழியைப் பொறுத்த வரை ‘கனா’வில் இருந்த உலகத்தரம் இதில் கொஞ்சம் குறைவுதான். ஏன்? அடுத்த படத்தில் இன்னும் கவனம் வேண்டுகிறேன்!
<10/11>
முதல் படத்தில் பெண்மையின் பேராண்மையும் இந்திய வேளாண்மையும். இந்தப் படத்தில் சாதியம். அடுத்தது என்ன? காத்திருக்கிறோம் ஆவலுடன்!
மாண்புமிகு @CMOTamilnadu அவர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கை!
இந்திக்காரன், நேபாளி, மார்வாடி என எவனெவனோ தமிழ்நாட்டில் வந்து பிழைக்கிறான். ஆனால் கூப்பிடு தொலைவில் உணவின்றித் தவிக்கும் நம் தொப்புள் கொடி உறவுகள் இங்கு வர முடியவில்லை. வந்தால் முகாம் எனும் சிறை! இதற்கொரு...
<1/6>
முடிவு கட்ட மாட்டீர்களா முதல்வரே?
"ஈழத் தமிழர் எங்கள் ரத்தம்" என்று முழங்கினீர்களே? அப்பேர்ப்பட்ட நீங்களே ஈழ மக்களை இப்படியோர் இக்கட்டான சூழலில் காப்பாற்றாவிட்டால் வேறு யார் காப்பாற்றுவார்?
கப்பல் கப்பலாக நீங்கள் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்கிறீர்கள்தாம். ஆனால்...
<2/6>
அப்படி எத்தனை நாட்களுக்குச் செய்ய முடியும் என்பதை நீங்கள் கனிவு கூர்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
மாறாக மற்ற நாட்டு மக்கள் இங்கு வந்து பிழைப்பது போல் நம் தமிழ் மக்களும் இங்கு வந்து வாழ வகை செய்தால் சிறிது காலமாவது அவர்களுக்கு அது ஆறுதலாக அமையும்.