The Silent Patient is an interesting read. Alex Michaelides எனக்கு அறிமுகம் இல்லாத author. அறிமுகம் இல்லாத எழுத்தாளர்களின் கதை புத்தகத்தை வாங்க ரொம்பவே யோசிப்பேன். விமர்சனங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே வாங்குவேன்.
ஆனா இப்போ அதுவுமே யோசனையாக தான் இருக்கு book க்கு over promotion, build up ஆனா வாங்கி படிச்சா கடியா இருக்கும். அப்படிதான் colleen hoover எழுதிய verity புத்தகத்தை ஆவலாக வாங்கி ஏமாந்து போனேன். அதே மாதிரி இதுவும் இருக்குமோ என்று ஆர்வமில்லாமல் இருந்தேன்.
அப்புறம் flipkart ல தள்ளுபடி விலைல கிடைக்கவும் 'சரி போ வாங்கி பாப்போம்' என்று வாங்கி, பக்கத்தை புரட்டினால் அடடே எனக்கு பிடித்தமான இரண்டு விஷயங்கள் நாவலின் மையமாக இருந்தன ஒன்று psychology மற்றொன்று Greek mythology.
கதையின் மையமாக இருக்கும் Alicia தன் எண்ணங்களை ஓவியமாக வெளிப்படுத்துகிறாள் அதுபோக ஒரு டைரி வேறு எழுதுகிறாள் (ஆனா ஒரு டைரியை இவ்ளோ detailed ஆ ஒருத்தங்க எழுதுவங்களா? and again ஒரு டைரி என்பது காலம்காலமாக எல்லா கதைகளிலும் நாம் பார்க்கும் ஒரு easy mystery reveal ஆ இருக்கு).
ஒரு psychotherapist இன் பார்வையில் இருந்து கதை விரிகிறது. நம்மை ஒரு கதையுடன் ஒன்ற வைப்பது எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நமது சாயலை காணுவது தான்.
இதில் பாதிக்கப்பட்ட Alicia மற்றும் psychotherapist Theo இருவரிடமும் என்னுடைய சாயலை காண முடிந்தது.
Michaelides எழுத்துநடை மிக எளிமையான நம்மை அப்படியே இழுத்து கதைக்குள் போட கூடிய எழுத்துநடை. அவரின் முதல் கதையாம் இது. ஆச்சரியமாக இருந்தது. இம்மாதிரியான thrillers ல எப்படியும் ஒரு plot twist இருக்கும். தெரிந்த விஷயம் தான்.
ஆனா அந்த plot twist கதைக்கு அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்க கூடியதாக இருக்க வேண்டும். வலிந்து திணிக்கப்பட்டதாக இருக்க கூடாது. "அட பாவி நீயா?" என்ற எண்ணத்தை தரணும். அதை Michaelides, perfectஆ செய்து இருக்கார்.
The perfect book for a weekend. Do read. @nual_reviews
இலவசங்கள் பயன் தருமா என்பது குறித்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டாஃப்லோ இருவரும் வளர்ச்சிப் பொருளாதாரத்துக்கு நோபல் பரிசு பெற்றவர்கள்.
பொருளாதார ஆய்வுகளில் Randomised Control Trial என்ற அறிவியல் உத்தியை பயன்படுத்தி கொள்கை முடிவுகளை, அவற்றின் பயன்களை கண்டறிந்து சொன்னதற்காக இவர்களுக்கு அந்தப் பரிசு வழங்கப்பட்டது. அது குறித்து இவர்கள் இருவரும் இணைந்து எழுதிய Poor Economics என்ற புத்தகம் முக்கியமானது.
குபேரனை பற்றி பல கதைகள் இருக்கின்றன. இந்து மதம் என்பது பல சமயங்களின் தொகுப்பு என்பதாலும், ஒரு சமயத்தில் இருந்து இன்னொரு சமயத்திற்கு கதை பரவும்போது சில சில வேறுப்பாடுகள் ஏற்படும் என்பதாலும். இந்து மதத்தை பொறுத்தவரை எல்லா கடவுளுக்கும் பல கதைகள் உண்டு.
செல்வத்தின் கடவுள் குபேரன் ஆவார். குபேரன் ஒரு அரக்கன், இலங்கையில் தங்க நகரத்தைக் கட்டிய மன்னர் . அவர் புஷ்பக விமானம் எனப்படும் பறக்கும் வாகனத்தை பயணம் செய்யப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்துக் கதைகளும், சிற்பங்களும் குபேரனை பெரிய வயிறு மற்றும் தாமரை இலை நிறம் கொண்ட ஒரு குள்ளமானவராக சித்தரிக்கின்றன.குபேரன் இந்து மதத்தைத் தாண்டி, வைணவ மற்றும் பௌத்த மத புராணங்களிலும் இடம்பெற்றுள்ளார்.
நின்று கொண்டே தண்ணீர் குடிக்க கூடாது என்று ஆயுர்வேதமும் சொல்கிறது. இந்த myth எப்படி வந்து இருக்கும் என்று நின்று கொண்டே யோசித்து பார்த்தேன். நாம எப்போ தண்ணீர் குடிப்போம்?
சாப்பிடும்போது அமர்த்து இருப்போம் (அந்த காலத்தில் கட்டாயமாக) அப்படியே அமர்ந்தவாறே தண்ணீரும் குடிப்போம்.
வேறு எப்போது தண்ணீர் குடிப்போம்? எதாவது வேலை செய்துவிட்டு களைப்பாக இருக்கும்போது, அல்லது வெளியில் சென்று விட்டு வரும்போது
(அந்த காலத்தில் எத்தனை தூரமாக இருந்தாலும் நடந்து தான் வந்து இருப்போம்.) இந்த 2 point உம் சிந்திப்போம். வேலை செய்த களைப்பு மற்றும் வெளியில் சென்று விட்டு வரும்போது மூச்சு வாங்கும், களைப்பாக இருக்கும், வெயிலில் சென்று வந்து இருப்போம்
self-improvement பற்றி புத்தகங்கள் எழுதுபவர்களும், YouTube களில் பேசுபவர்களும் இளைஞர்கள் குறிப்பாக 20 முதல் 35 வயது ஆட்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வயது எதையாவது செய்து முன்னேற வேண்டும் சம்பாரிக்க வேண்டும் என்று நினைக்கும் வயது.
அதனால் அவர்களுக்கு சுய முன்னேற்றம், எப்படி வாழ்வில் முன்னேறலாம் போன்ற topic மிகவும் பிடிக்கிறது.
அதனாலேயே மிகவும் பிரபலமானவராக Jordan B Peterson இருக்கிறார். ஆனால், இங்கு எப்படி வலது சாரியை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் வசீகரமான எழுத்துக்களால் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.
அதில் இருக்கும் ஆபத்து உள்நோக்கம் அறியாமல் நாம் அவர்களை ரசிக்கிறோம் என்று விமர்சனம் வைக்கிறோமோ அதே போல Jordan B Peterson கனடாவின் வலது சாரி நபர். வசீகரமான அவரது எழுத்து மற்றும் பேச்சால் தவறான விஷயங்களை முன்வைக்கிறார்.
ஹையோ இப்படி எல்லாம் பேசுறதுக்கு உனக்கு யாருடா சொல்லி தரது அப்படினு கேக்கணும் போல இருக்கு. உணவுக்குழாய் என்கிற வார்த்தையில் 'குழாய்' இருப்பதால் அது எதுவோ PVC pipe மாதிரி இருக்கும் என்று நினைத்து கொண்டார்கள் போல.
முதலில் நின்று இருந்தாலும் அமர்ந்து இருந்தாலும் படுத்து இருந்தாலும் வாய்க்கும் வயிற்றுக்கு உண்டான தூரம் ஒன்று தான். ஒரே புவிஈர்ப்பு விசை தான். நின்று கொண்டு குடித்தால் வேகமா வந்து தண்ணீர் விழுந்து சிதறும் என்கிறார்களே.
esophagus என்பது காலி PVC pipe அல்ல எது போட்டாலும் அப்படியே நேரே பொதக்கடினு விழ. நிறைய தசைகளால் ஆனா ஒரு குழாய் அதில் உணவாக இருந்தாலும் சரி நீராக இருந்தாலும் சரி peristalsis எனப்படும் ஒரு அலை போன்ற தசைகளின் நகர்வால் தான்,
கருத்து சுதந்திரத்தின் மீது கொலை முயற்சி
- ஸ்ரீதர் சுப்ரமணியம்
நேற்று மேற்கு நியூயார்க்கில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக எழுத்தாளர் சல்மான் ரஷ்டி சென்றிருக்கிறார். அங்கே அவருடைய உரை துவங்கும் முன்பு திடீரென மேடை ஏறிய ஒரு இளைஞன்
கத்தியை எடுத்து அவரைப் பல முறை குத்தி இருந்திருக்கிறான். மேடையில் உடன் இருந்தவர்கள் அவனைத் தடுக்க முயல அவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரஷ்டி பல முறை குத்துப்பட்டிருக்கிறார்.
அங்கிருந்து ஹெலிகாப்டரில் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டவருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யபட்டு வருகின்றன. அவருடைய இலக்கிய ஏஜெண்டு ஆண்ட்ரூ வைலி கொடுத்த தகவலின்படி அவர் கல்லீரல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.