Swathika Profile picture
Aug 26 24 tweets 3 min read
Shroud of Turin Part - 3

Leonardo da Vinci ஏன் இப்படி ஒரு forgery யை உருவாக்க வேண்டும்? என்ன அவசியம் அவருக்கு?

Leonardo da Vinci ஒரு Catholic. பெரும்பான்மையான அவரது படங்கள் பைபிள் பற்றியதே. பலர் அவர் ஒரு atheist என்பார்கள்.
சர்ச்க்கு தெரியாமல் பிணங்களை எடுத்து ஆய்வு செய்பவர், ஓய்வு நாள் அன்று வேலை செய்வார், Vatican தடை செய்த alchemy ஆராய்ச்சியில் ஈடுபட்டார், அவரது எல்லா மதம் சார்ந்த படங்களிலும் ஒரு உள் குத்து இருக்கும் இதெல்லாம் அவர் சர்ச்க்கு எதிரானவர் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது என்பார்கள்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவர் ஒரு curious ஆன ஆள். சுற்றி நடக்கும் விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தெரிந்து கொண்டதை ஊருக்கு சொல்லணும். டார்வின் கூட atheist இல்லை. பெரும்பாலான கண்டுபிடிப்பாளர்கள் priest தான்.
Big Bang theory யை முன்மொழிந்த Georges Lemaître ஒரு கத்தோலிக்க பாதிரியார், Father of Genetics என்றழைக்கப்படும் Gregor Mendel ஒரு பாதிரியார், இப்படி மதத்தோடு முரண்படும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவர்கள் இறை நம்பிக்கையாளர்கள் தான்.
அவர்களது நோக்கம் இறைவனையோ மதத்தையோ எதிர்க்க வேண்டும் என்பதாக இருக்காது. உண்மையை தேடி செல்லும்போது இதுபோன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கக்கூடும். (ஏன் பாதிரியார்கள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கிறார்கள்? அது ஒரு சுவாரசியமான கதை #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
அப்படியானால் எது Leonardo da Vinci யை இம்மாதிரி ஒரு forgery யை உருவாக்க தள்ளி இருக்க வேண்டும்?
முன்பே சொன்னது போல shroud of Turin பிரபலமான காலம் என்பது அற்புத பொருட்களுக்கான market தேவை இருந்த காலம்.
பல பெரிய குடும்பங்கள் ஏதேனும் ஒரு அற்புத பொருளை வைத்திருப்பது கௌரவமாக நினைக்கப்பட்ட காலம். இன்றும் சபரிமலை ஐயப்பனின் ஆபரணங்களை பந்தள ராஜா வாரிசுகள் வைத்திருப்பதையும் அதனால் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் நாம் பார்க்கிறோம்.
அன்றும் இதே போல ஏதேனும் ஒரு குடும்பம் shroud of Turin போல ஒரு relic நம்மிடம் இருந்தால் அது அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் அதிகாரத்தை தரும் என்றும், அதை காட்டி காசு பார்க்கலாம், ஊரினுள் கெத்தாக இருக்கலாம் என்று நினைத்து இருக்கக்கூடும்.
அவர்கள் Leonardo da Vinci யிடம் செய்து தரும்படி கேட்டு இருக்கலாம்.
வரலாற்றில் இது மட்டுமே shroud அல்ல. இதற்கு முன்னரும் பல பேர் என்னிடம் இயேசுவை மூடிய துணி இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள்.
1389 CE இல் Bishop Pierre d'Arcis, Vatican க்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் Geoffroy de Charny என்பவர் (Lirey, France) இயேசுவை மூடிய துணி என்று ஒரு துணியை, 1353 இல் இருந்து மக்களிடம் காண்பித்து வருகிறார் மக்களும் அதை கூட்டமாக வந்து பார்த்து காசு தருகிறார்கள்.
அது forgery! துணியில் பெயிண்ட் செய்து இருக்கிறார்கள். நீங்கள் தடை செய்ய வேண்டும் என்று எழுதுகிறார். (சிலர் அந்த துணியும் இப்போது இருக்கும் துணியும் ஒன்றுதான். அன்றே அது forgery என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். சிலர் அது வேறு இது வேறு என்கிறார்கள்)
Pope Clement அதை வைத்து காசு பார்க்க கூடாது என்று அறிவித்தார். அப்புறம் சத்தமே இல்ல.

1453 de Charny குடும்பத்தினர் (Knights Templar வம்சாவழியை வந்தவர்கள்) அந்த Shroud ஐ Savoy குடும்பத்திற்கு தருகிறார்கள் (Leonardo da Vinci க்கு அப்போ 1 வயசு!)
இவர்களும் மிகப்பெரிய குடும்பம். இதை அவர்கள் வாங்கி ஒரு 50 வருஷத்திற்கு இந்த துணி யார் கண்ணுலயும் அகப்படலை கமுக்கமாக இருந்து இருக்கிறது. பின்னர் அதை உள்ளூர் சர்ச்சில் வைத்திருக்கிறார்கள்.
அதை பார்த்த மக்களுக்கு குழப்பம் de Charny குடும்பத்தாரிடம் இருந்த Shroud க்கும் இப்போது பார்க்கும் Shroud க்கும் பெரிய வித்தியாசம். இது உண்மை போலவே இருக்கிறது. செய்தி Vatican க்கு எட்டி Pope உம் வந்து பார்த்துவிட்டு வணங்கி செல்கிறார்.
நடுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதுபோல, ஒரு 50 வருஷம் யாரும் Shroud ஐ பார்க்கவில்லை. de Charny குடும்பத்திடமிருந்து Savoy குடும்பத்திற்கு சென்றபின் 'நம்ம சுமார் திவ்யா சூப்பர் திவ்யா ஆகிட்டாளே' என்பது போல Shroud உம் ஒரு பெரிய மாற்றத்தை சந்தித்து இருக்கிறது.
ஆனால் அதை எல்லாம் ஆராய்ச்சி செய்து அன்று நிரூபிக்க முடியவில்லை. 50 வருட இடைவெளி என்பது பெரிய இடைவெளி. பலருக்கும் ஒருவேளை அதுதானோ இது... இதானோ அது... என்னும் dilemma இருந்து இருக்கும்.
1390 இல் de Charny குடும்பம் இதை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட போது பலர் இதை forgery பார்த்தாலே தெரியுது என்று அன்றைய காலத்திலேயே கண்டுபிடித்து இருக்கிறார்கள். Pope Clement உம் அதை தடை செய்திருக்கிறார்.
ஆனால் அதே துணி de Charny குடும்பத்தாரிடம் இருந்து Savoy குடும்பத்திற்கு செல்கிறது அவர்கள் இதை 50 வருடம் கழித்து காண்பிக்கும்போது ஒருத்தாராலும் இதை போர்ஜ்ரி என்று சொல்ல முடியவில்லை.
Leonardo da Vinci, அந்த காலத்தில் பெரிய பெரிய மனிதர்களின் வீட்டுக்கு சென்று அவர்கள் கேட்கும் படங்களை வரைந்து தந்து இருக்கிறார். Savoy குடும்பத்திடம், da Vinci வரைந்த பல படங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவரையே அவர் வரைந்து கொண்ட self portrait ஒன்று Savoy குடும்பத்திடம் இருக்கிறது.
Savoy குடும்பத்திற்கும் da Vinci குடும்பத்திற்கும் உள்ள கொடுக்கல் வாங்கல் கணக்கு பற்றி ஒரு புத்தகமும் Florence royal library இல் இருக்கிறது.
தன்னுடைய படைப்புகள், கண்டுபிடிப்புகள், idea எல்லாவற்றையும் da Vinci தெளிவாக notebook இல் எழுதி வைப்பது வழக்கம்.
ஆனா இந்த Shroud பற்றி அவர் எதையும் எழுதி வைக்கல. (அவருடைய மிகப்பிரபலமான ஓவியம் Mona Lisa பற்றி கூட அவர் எங்கேயும் எழுதி வைக்கல.) இன்னொன்னு, ஒரு திருட்டு வேலை செய்யும்போது அதை பற்றிய ஆதாரங்களை விட்டுவைக்க da Vinci ஒன்னும் முட்டாள் இல்லையே.
காசுக்காக இல்லாது, செஞ்சு தான் பார்ப்போமே என ஒரு ஆர்வத்தில் டாவின்சி இதை செய்தார் என்றால் கண்டிப்பாக அவர் ரகசியமாக தான் செய்து இருப்பார். மதவெறி அதிகமாகி இருந்த அந்த காலத்தில், ஒன்று உண்மையான ஒரு அற்புத பொருளை, 'நான் செய்தேன்' எ இவன் பொய் சொல்றான் என மக்கள் அவர் மேல் பாயக்கூடும்.
அல்லது 'ஏமாற்று வேலை செய்து எங்களை ஏமாற்றினாயா?' என்றும் வெளுக்க கூடும். எப்படி பார்த்தாலும் அது ஆபத்துதான். Savoy குடும்பமும் இது ரகசியமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்க கூடும்.
ஆனா டாவின்சி தான் இதை செய்தார் என்பதில் ஒரு பிரச்சனை இருக்கு.
அது carbon dating செய்து அந்த துணியின் வயதை மூன்று தனித்தனி ஆய்வகங்கள் கண்டறிந்தார்கள் இல்லையா? இந்த Shroud உண்டான காலகட்டமாக அவர்கள் சொன்னது 1260-1390 CE. Leonardo da Vinci பிறந்த வருடம் 1450 CE!

தொடரும்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Aug 27
Shroud of Turin Part - 4

Da Vinci பிறப்பதற்கு 60 வருடங்களுக்கு முன் உண்டான துணி Shroud of Turin என்று carbon dating சொல்கிறது. டாவின்சி அவருடைய peak இல் அதாவது நிறைய படங்கள் வரைந்து கொண்டு இருந்த போது அவரது வயது 50.
அப்படியானால் 100 வருடங்களுக்கு முன்னால் உள்ள துணியை டாவின்சி எப்படி பயன்படுத்தி இருக்க முடியும்?
ஆனால் சாத்தியக்கூறுகள் இருந்தன. டாவின்சி அப்போது இருந்த Florence ஊர் அன்றைய trade center. உலகம் எங்கும் இருந்தும் பொருட்கள் அங்கு வந்து விற்பனையாகின.
டாவின்சி 1000 வருடங்கள் பழமையான ஒரு relic ஐ உண்டாக்க போவதாக இருந்தால்... அந்த genius, கடைக்கு சென்று fresh ஆ நெய்த துணியை வாங்க போவதில்லை (ஏற்கனவே பல shroud கள் forgery என புறம்தள்ளப்பட்டதை பார்த்து அதில் இருக்கும் தவறுகளை திரும்ப செய்யக்கூடாதென்று நினைத்திருப்பார்).
Read 57 tweets
Aug 27
ஸ்ரீதர் சுப்ரமணியம்

தன்பாலின ஈர்ப்பு பற்றிய எனது பதிவுகளில் மத நம்பிக்கையாளர்கள் வந்து தன்பாலின ஈர்ப்பாளர்களை படு கேவலமான வார்த்தைகளில் அர்ச்சிக்கிறார்கள். போலவே பெண்ணியம் சார்ந்த என் பதிவுகளில் வந்து அந்தப் பெண்களை அவல வார்த்தைகளில் விமர்சிக்கிறார்கள்.
அந்த எந்த கமெண்ட்டுகளையும் நான் நீக்குவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும். எனவே தைரியமாக வந்து வண்டி வண்டியாக வசை பாடுகிறார்கள்.
அவர்கள் கமெண்ட் இடட்டும். அது பிரச்சினை இல்லை. ஆனால் எனக்கு இதில் ஒரு முக்கிய ஆச்சரியம் வருகிறது.
இந்த மத நம்பிக்கையாளர்கள் உலகில் பல்வேறு விஷயங்களை கேலி, கிண்டல், மற்றும் இழிவு செய்கிறார்கள். நாத்திகர்களை, பெண்ணியவாதிகளை, தன்பாலின ஈர்ப்பாளர்களை, பல நேரங்களில் அறிவியலாளர்களை என்று பல்வேறு தரப்பினரை இழிவு செய்கிறார்கள்.
Read 15 tweets
Aug 26
Shroud of Turin - Part 2

Carbon dating முடிவுகள் இது இயேசுவின் காலத்திய துணி இல்லை என்று அறிவித்ததும், இது 13ஆம் நூற்றாண்டின் துணி என்றதும், 'சரி அப்போ இது forgery யாக தான் இருக்க முடியும்' என்னும் முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தார்கள்.
Carbon dating மட்டுமே இந்த முடிவுக்கு வர காரணம் இல்லை. இந்த சோதனைக்கு முன்னரே பல சந்தேகங்கள் ஆய்வாளர்களிடம் இருந்தன.
ஒருவேளை இது இயேசுவின் துணியாக இல்லாமல் போனாலும், வேறு யாரையாவது அதே போல சாட்டையால் அடித்து முள் கிரீடம் வைத்து என பைபிள் விவரித்த exact scene ஐ recreate பண்ணி,
இதை தயாரித்து இருக்க வாய்ப்புண்டு. காரணம், முன்னரே சொன்னது போல அந்த காலத்தில் புனித பொருட்களுக்கு demand அதிகம். நிறைய காசு வசூலிக்கலாம் அது போக அது உங்களுக்கு தரும் அதிகாரம், ஊருக்குள்ள நல்ல பேரு, etc.
இன்னொரு காரணம் இயேசு ஒருவர் மட்டுமே சிலுவையில் அறையப்படவில்லை.
Read 14 tweets
Aug 25
shroud of Turin
வரலாற்றில் இதை ஆராய்ந்ததை போல வேறு எதையும் ஆராய்ந்து இருக்க மாட்டார்கள். கிட்டத்தட்ட 600 வருடங்களுக்கு மேலாக புதிது புதிதாக வரும் எல்லா technology களை கொண்டு ஆராய்ந்து, மீண்டும் மீண்டும் இது போலி என்றாலும் மக்களுக்கு இதன் மீதான நம்பகத்தன்மை குறைந்ததே இல்லை.
அது shroud of Turin! இத்தனை ஆண்டு காலமாக பல கோடி மக்களை ஆணித்தரமாக இதன் மேல் நம்பிக்கை வைக்க காரணம் பக்தியா? அல்லது இதை உருவாக்கிய the great Leonardo da Vinci யின் மேஜிக்கா?
Shroud of Turin என்றால் என்ன? இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்ததும், Arimathea என்னும் ஊரை சேர்ந்த Joseph என்னும் பணக்காரர், அவரது உடலை ஒரு linen துணியில் சுற்றி அவருக்கு சொந்தமான குகையில் வைக்கிறார்.
Read 59 tweets
Aug 24
இது male privilege க்கும் பொருந்தும். பெண்களின் சுதந்திரம் என்பது நுகத்தடி மாட்டின் கயிற்றை போல. ஒவ்வொரு பெண்ணுக்கும் அந்த கயிற்றின் நீளம் கூட குறைய இருக்கும் ஆனால் எல்லா பெண்களுக்கும் அந்த கயிறு உண்டு.
சில பெண்கள் வீட்டில் பெண் படிக்கவே கூடாது, சில இடத்தில் ஒரு degree படித்தால் போதும், சில இடத்தில் பெண்ணுக்கு என்று இருக்கும் படிப்புகளில் எது வேண்டுமானலும் படிக்கலாம், இப்படி சுதந்திரத்தின் அளவு கூட குறைய இருக்குமே தவிர முழு சுதந்திரம் என்பது பெண்களுக்கு கிடையாது.
(உடனே ஆண்கள் நாங்கள் மட்டும் விருப்பட்டதை படிக்கிறோமோ என்று கேட்கவேண்டாம். நீங்கள் ஒரு ஆண் என்பதால் உங்களுக்கு படிப்பு மறுக்கப்படுவதில்லை. உங்கள் வீடு சூழல் போன்ற வேறு காரணங்கள் இருக்கும். ஆனால் பெண் என்ற காரணத்திற்காகவே ஒரு பெண்ணுக்கு படிப்பு மறுக்கப்படுகிறது.
Read 8 tweets
Aug 24
Wonder Woman படங்களில் Amazon பெண்களை பார்த்து இருப்பீர்கள். Homer எழுதிய The Iliad என்னும் கிரேக்க புராணத்தில் வரும் கதாபாத்திரங்கள் தான் Amazon பெண்கள். இந்த கதாபாத்திரத்தை எடுத்து கொஞ்சம் மசாலா சேர்த்து DC comics எடுத்தது தான் Wonder Woman படம்.
கதைப்படி, ஆண்களின் கைகளால் இறந்த பெண்களை கடவுள் Artemis (வேட்டையின் கடவுள்) மீண்டும் உயிர்த்தெழ வைத்து அவர்களுக்கு உறுதியான உடலும் வீரத்தையும் தருகிறார். இந்த பெண்கள் தான் Amazons. இவர்கள் Amazonia என்னும் பெண்கள் மட்டுமே இருக்கும் நாட்டை ஆண்டு வந்தார்கள்.
அப்புறம் ஒரு நாள் Hercules என்னும் உலகிலேயே யாராலும் தோற்கடிக்க முடியாத வீரன் Amazonia வை பற்றி கேள்விப்படுகிறான். ஆனால் எல்லாரும் அவனால் Amazons ஐ தோற்கடிக்க முடியாது என்கிறார்கள். as usual ஒரு ஆணாகிய Hercules இன் ஈகோவை உரசி பார்க்கிறது.
Read 34 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(