அங்கன்வாடியில் பயின்று வந்த மூன்று வயது தலித் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீக்குச்சியை பயன்படுத்தி எரித்துள்ளார் உதவி ஆசிரியை ராஷ்மி, கர்நாடகாவில் உள்ள தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள கோடேகெரே கிராமத்தில் உள்ள
(1)
அங்கன்வாடி மையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது இது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அக்குழந்தை தனது தாயை இழந்தது. அவரது தந்தையும் பாட்டியும் குழந்தையை கவனித்து வந்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு
(2)
6 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மூத்த உடன்பிறப்பும் உள்ளார். குழந்தையின் பெற்றோர் சிக்மகளூரில் உள்ள ஒரு காபி எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட ராஷ்மி மீது போலீஸ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் இருந்தது.
(3)
இப்போது அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணை நடந்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இங்கு #DalitLivesMatter
என்று சொல்லக் காரணம், இதுவே அக்குழந்தை தங்களை உயர்சாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு சாதியில் பிறந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?
அப்படியே நடந்திருந்தாலும் அந்த ஆசிரியை மீது வெறும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மட்டும்தான் எடுக்கப்பட்டிருக்குமா?
(5)
ஒரு குழந்தை என்றும் பாராமல் இப்படி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட ஆசிரியைக்கு வெறும் பணியிடை நீக்கம் ஒரு தண்டனையாகுமா?
சாதியெனும் மனநோயால் இன்னும் எத்தனை கொடுமைகள் நடக்கப்போகிறதோ!? 🤬
(6)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
முதலில் ஸ்கந்தன் யார் முருகன் யார் என புரிந்து கொண்டால் முருகன் கடவுளா என்ற கேள்விக்கான பதில் அதிலேயே கிடைத்துவிடும்.
(1)
ஸ்கந்தன் எப்படி பிறந்தார் என, என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமான கச்சியப்ப சிவாச்சாரியர் அவர்களால் எழுதப்பட்ட கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை சுருக்கமாக பார்ப்போம்.
வழக்கமான எல்லா கடவுள் கதைகளிலும் போல அசுரர்கள் தேவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்,
(2)
தேவர்களை சிறை பிடித்து பல இன்னல்களை உருவாக்குகிறார்கள். இந்த கொடுமைகள் தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள், அப்போது சிவன் தனக்கு ஒரு குமாரன் உருவாவான் அந்தகுமாரன் அசுரர்களை வதம் செய்வான் என்று கூறுகிறார்.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள், சரி அது அவர்களின் நம்பிக்கை சார்ந்தது என்பதற்காக அதை ஒப்புக்கொண்டாலும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் எப்படி இருக்கிறது!?
(1)
விநாயகரின் ஒரு சிலை பொதுவெளியில் வைக்கப்பட்டு சில நாட்கள் பூஜை செய்த பிறகு அதை கடலிலோ ஆற்றிலோ கொண்டு போய் கரைத்து விடுகிறார்கள். ஆனால் புராணங்களின் அடிப்படையில் இந்த மாதிரியான வழிபாடு இல்லவே இல்லை.
(2)
சிவமகா புராணத்தில் விநாயகர் சதுர்த்தி எப்படி செய்ய வேண்டும் என குறிப்புகள் உள்ளது.
மார்கழி மாதம் தேய்பிறையில் வரும் நான்காவது நாள் சதுர்த்தி அன்று இதை துவங்க வேண்டும், உலோகம் பவளம் அல்லது மண் ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை வைத்து,
சிவ பக்தனான அரக்கன் இரணியனின் மகன் பிரகலாதன் தீவிரமான விஷ்ணு பக்தன், இதை எதிர்த்த இரணியன் தன் மகனை கொல்லும் அளவிற்கு சென்றான், தன் பக்தனுக்கு ஆபத்து வந்ததால் அரக்கன் இரணியனைக் கொன்று பிரகலாதனை காப்பாற்ற விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
(1)
ஏன் விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை கொல்ல வேண்டும், காரணம் இரணியன் ஒரு ஸ்பெஷல் வரம் வாங்கியிருந்தான், கிட்டத்தட்ட அது சாகா வரம் எப்படி என்றால், பகலிலோ இரவிலோ, வீட்டிற்கு உள்ளேயோ வெளியேயோ, போர் ஆயுதங்களோ, மனிதனாலோ மிருகத்தாலோ தான் கொல்லப்படக்கூடாது என்பதுதான்.
(2)
ஆனால் இந்த வரத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி விஷ்ணு புது உத்தியை கண்டுபிடித்து நரசிம்மாவதாரம் எடுத்தார், நரசிம்ம அவதாரம் மனிதனும் அல்ல விலங்கும் அல்ல ஒரு தூணை உடைத்த போது அதற்குள் இருந்து வந்த மனித உடலும் சிங்க தலையும் பொருந்திய ஒருவர்,
எனக்கும் சின்ன சந்தேகம் இருந்துச்சு நீங்க ஆதாரம்னு வீடியோ எல்லாம் போடுறீங்க அண்ணன் படிக்க சொல்லியிருக்காரோன்னு,அந்த வீடியோவ முழுசா பார்த்துட்டு தான் நீங்க பகிர்ந்தீங்களான்னு தெரியல, அதுல மெக்காலே கொண்டு வந்த கல்வி முறை சரியில்லைன்னு சொன்னது சரி, அதை மெக்காலேவே சொல்லியிருக்கர் (1)
இந்தியர்களை அடிமைப்படுத்தனும்னா அவர்களின் வேளாண்மையையும் கல்வியையும் ஒழிக்கனும்னு மெக்காலே சொன்னதாக அண்ணன் சொல்றாரு, மெக்காலே இந்தியாவிற்கு ஒரு கல்வி முறையை கொண்டு வருவதற்கு முன்னாடி இந்தியால எந்த மாதிரியான கல்வி அமைப்பு இருந்துச்சு!?
(2)
வெறும் வேத குருகுல கல்வி மட்டும், அதுவும் யாருக்கு இருந்துச்சு தங்களை உயர் சாதி என்று சொல்லிக் கொண்ட அவளுக்கு மட்டும். மெக்காலே பல குறைபாடுகள் கொண்ட கல்விமுறையை இங்கு கொண்டு வந்ததாலும் அது அடிப்படையான கல்வி அறிவு கிடைக்க உதவியது.
(3)