#healthinsurance
Health insurance சிறு குறிப்பு வரைக:-

Health insurance என்பது ஒரு வகை insurance. எதேனும் உடல் நலக்குறைவு/விபத்து ஏற்பட்டால், அதனால் ஆகும் மருத்துவ செலவினத்தை இன்சுரஸ் கம்பெனி ஏற்க்கும்.

இதுவே Health Insurance எனப்படும்.
Health Insurance யார் யார் எடுக்கனும் ?

1. பணக்காரர்கள் or Elite
2. Corporate (office) Insurance இல்லாதவர்கள்
3. வியாதி உள்ளவர்கள் மட்டும்
அப்போ யார் தாண்டா எடுக்கனும், சொல்லி தொலையன் டான்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.

அதுக்கு பதில் எல்லாரும் கண்டிப்பா Health Insurance எடுக்கனும். வசதி இல்லாதவங்கன்னா அரசு கொடுக்குற insurance ஆச்சும் வச்சியிருக்கனும். Image
எனக்கு ஆபிஸ் ல தராங்க vro, எனக்கு எதுக்கு இதுன்னு கேட்குற dude களின் கவனத்திற்க்கு.

2018 ல என் கூட வேலைப்பாத்தவன், அடுத்த கம்பெனிக்கு join ஆகுற gap ல trip போனன், accident. ICU ல இருந்தான், மொத்த savings போயி, கடனாளி ஆனது தான் மிச்சம். Corporate Insurance லாம் LWD ஒட காலவதி
ஆயிரும். அது மட்டுமில்ல, அவங்க தர Group Policy ல அதிகபட்சம் 3L-5L தான். இப்போ இருக்குற medical expenses க்கு இந்த காசலெல்லாம் யானைப்பசிக்கு சோழப்பொறி மாதிரி. Dude களும் office ல தரது போக, வெளில ஒரு ஹெல்த் பாலிசி எடுக்கனும்.
வியாதி உள்ளவனக்கு தா லே இன்ஸுரன்ஸ்,நான் லாம் கல்ல தின்னாலே செறிக்கிருமின்னு காலர துக்கிட்டுயிருந்தவன் லாம்,தம்மா துண்டு கொரனா துக்கிப்போட்டு மிதிச்சிருச்சி.நாளைக்கு என்ன வியாதி வருமின்னு யாருக்கு தெரியாது. சொல்றத கேளுங்க டா, ஒழுங்க ஹெல்த் பாலிசியா எடுங்க டா, கெஞ்சி கேட்குறன் Image
அப்படியா சொல்ற,இந்த போறன் சொசைட்டீக்குன்னு policy bazzar க்கு ஓட வேண்டாம். எனக்கு தெரிஞ்சத சொல்றன், இதெல்லாம் checklist, இந்த list அ நீங்க எந்த கம்பெனில insurance எடுக்குறீங்களோ அவன்கிட்ட check பண்ணிட்டு பாலிசி எடுங்க. பி.கு: I’m not from any insurance, sharing my experience
Requirement: உங்க பாலிசில யார்லாம் கவர் ஆகனும், எவ்ளோ கவரேஜ் வேணும்.

இங்க Family Insurance சொல்றது Self,Spouse,children தான். Parents or in laws லாம் Family ங்குறதுகுள்ள வர மாட்டாங்க. Parental Insurance/ Extended Family(in laws) insurance னு தனியா plans இருக்கும்.
Family Floater ங்குற பேர்ல, மொத்த குடும்பத்துக்கும் சேர்த்து coverage வச்சிருப்பாங்க. 5L,10L,15L,20L etc.. coverage அதிகமாகும் போது Premium அதிகமாகும். சில கம்பெனில/பிளான் ல கவரேஜ் அதிகமாவும், premium கம்மியாவும் இருக்கும். அதுலெல்லாம் ஒரு க்கான வச்ச மாதிரி.
இனி சொல்ல போறதுலாம் அதுல இருக்குன்னா அந்த பிளான்/கம்பெனில எடுக்காதீங்க.

Co-payment : உங்க பில்/கிளைம் amount ல Fixed % நீங்க தான் தர வேண்டியிருக்கும்.

Deductible: குறிப்பிட்ட amount வருசத்துக்கு கொடுத்த தான், அந்த வருசம் coverage இருக்கும்.

Room Cap: Hospital Room Rent ல
இவ்ளோ தான் கவர் பண்ணுவோம்ன்னு சொல்லுவாங்க. ICU லாம் இப்போ min 6-7K வரும். சும்மா 2K/Day வரை தான் சொன்னா, 4 நாள் ICU ல இருந்தவே 16K நம்ம கைல இருந்து போட வேண்டி வரும். Co pay/Deductible/Room cap இருக்குற plans அ எடுக்காதீங்க
Sub limits : Room கவரேஜ் 10L கொடுப்பான், ஆனா, இந்த வியாதிக்கு இவ்ளோ தான் cover மாதிரி எதாச்சும் இருக்கான்னு கேட்டு வச்சிகிறது உத்தமம்.

Restoration:5L கவரெஜ்,உங்க வீட்டுல ஒருத்தருக்கு emergency,மொத்த கவரேஜும் use பண்ணிட்டிங்க.இப்போ வேற ஒருத்தர் admit ஆனா என்ன பண்ணுவீங்க.அதுக்கு
தான் இந்த Restoration. கவரெஜ் amount refil பண்ணிருவாங்க. எத்தனை தடவை ஒரு வருசத்துல பண்ணுவங்ககுறத கேட்டுக்கொங்க

Day Care : school a இருக்குறதில்ல. பொதுவா, Claim லாம் 24 hrs min hospitalised ஆன தான். ஆனா சில Treatments ( டயாலிசிஸ் மாதிரி) 24 hrs குள்ளவே முடிஞ்ரிரும்.
Pre Post Hospitalisation Care : pre planned operation க்கு முன்ன இல்ல Discharge ஆனதுக்கு அப்புறம் தேவைப்படுற medicines மாதிரியான expenses கவர் ஆகும்மான்னு தெரிஞ்சிக்கனும். அடுத்து ரொம்ப முக்கியமான ஒரு விசயம்.

Low Waiting Period:
Health Insurance எடுக்கும் போது நம்ம family ல யாருக்காச்சும் எதாவது நோய் இருந்தா முன்னவே declare பண்ணனும். அப்படி பண்ணலன்னா claim/reimbursement கெடைக்கமா போகலாம். அப்படி declare பண்ணா, எத்தனை வருசம் கழிச்சி அதுக்கு கவர் start ஆகுங்குற கேட்டுக்கனும். Premium அதிகம இருக்குற plan ல
No Waiting Period சொல்லிருவாங்க. அப்படின்னா, day 1 ல இருந்தே க்வர் கெடைக்கும். இது insurance provider/plan பொறுத்து மாறும்.

CashLess Benefit: எல்லார்கிட்டயும் காசு அதிகம இருக்காது. தேவைக்கு தான் இருக்கும். மிஞ்சி போன ஒரு மாசம் சம்பளம் savings ல இருக்கும். அப்படி இருக்கும் போது
Emergency 5L கட்டுங்கன்னு சொன்ன யார இருந்தாலும் கஸ்டம். இந்த மாதிரி நேரத்துல cashless Treatment தர insurance provider best. Claim/reimbursement போன 100% லாம் எல்லாரும் தரதில்ல.
கீழ இருக்குறது லாம் கொடுக்குற plan/company ய தாரளமா consider பண்ணலாம்.

NO co pay
NO Deductible
NO Room cap
NO sub limit on Disease
Restorations Benefit
Pre/Post Hospitalisation Care
Day Care
Low or waiting period
Cashless Treatment
இது போக Annual health checkup, Air Ambulance லாம் கொடுத்த இன்னும் சிறப்பு. ஆனா இதெல்லாம் கொடுக்குற plan கண்டிப்பா 20K-25K வாச்சும் வரும். அய்யோ அவ்ளோ வான்னு நினைக்காதிங்க. ஒரு சின்ன hospital admit ஆன கூட 5 நாள் பில் 30K வந்துரும். காச பாக்காதிங்க, benefits பாருங்க. அப்புறம்,
நீங்க ஒரு plan/company choose பண்ணிட்டீங்கன்னா, உங்க வீட்டுக்கிட்ட எத்தனை NetWork hospital இருக்குங்குற பாத்துக்கோங்க.

Premium கம்மின்னு ஊர் பேர் தெரியாதவகிட்ட போகாதீங்க.

இதுல No claim bonus சேக்கல, அதுல ஒரு catch இருக்கு. Riders பத்தியும் எதும் சொல்லல.
சொன்ன over feed மாதிரி இருக்கும். இதுவே more than enough. வரட்டா maamee durrer

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with கரெக்ட்டா இருந்துக்க

கரெக்ட்டா இருந்துக்க Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @_D_Resist

Aug 9
#TaxSavingTip 15L மேல salary இருக்குறவங்க எப்படி 30% ல இருந்து 20% கொண்டு வர ஒரு வாய்ப்பு இருக்கு. சம்பளத்தை பொதுவா 3 major components இருக்கும்(Basic pay/HRA/ Allowances)Basic pay ல இருந்து தான் PF&HRA derive ஆகும்
IT Companies இப்போ salary re structure பண்ற வாய்ப்ப தராங்க. உங்க BasicPay(BP) increase பண்றது மூலமா, உங்க HRA & PF ம் அதிகமாகும். இது மூலமா TAX Save பண்ணவும் முடியும், உங்க PF ல Employer contribution ம் அதிகமாகும். ஒரே கல்லு ரெண்டு மாங்க. HRA calculation க்கு கீழ இருக்கு
பொதுவா Basic pay(BP)22K தான் இருக்கும். (e.g) 15L/PA வாங்குறவர், 80C,80D,std deduction,NPS லாம் காட்டி deduction 3Lவாங்கிட்டார். HRA maximum 1.32L claim பண்ணி, Taxable income 10.68L கொண்டு வந்தா அவர் 30% Tax pay பண்ணனும்.
Read 5 tweets
Apr 23
சம்மர் வந்தாச்சு.. AC வாங்குறதுக்கு முன்னாடி என்னலாம் கவனிக்கனும்ன்னு பாக்கலாமா.. AC ல மொத்தம் ரெண்டு வகை.. Window, Split. Window லெமுரியா காலத்த சேர்ந்தது.. இப்போ யாரும் அதை சீண்டுறது இல்ல.. நாமும் அதை சீண்ட வேண்டாம்..

இப்படி லாம் @_D_Resist இவன் எழத மாட்டானே!!
நீ AC அதுனால உனக்கு AC போட்ட ரூம். நான் AC இல்ல அதுனால எனக்கு AC போடாத ரூம்! அவ்ளோ தான் வே உனக்கும் எனக்கும் வித்யாசம்.. (போம்.. போம்..)போலிஸ் depart யே பிரிச்சி காட்டற ACய நாம கொஞ்சமாச்சும் தெரிஞ்சிட்டு வாங்கனும் ல. இது நான் ஒரு வாரமா 6 கடை, online ன்னு தெரிஞ்சிக்கிட்ட விசயம்..
ஹிட்லர் என்ன சொல்றான்…”நாம எந்த பொருள் வாங்குறதா இருந்தாலும், நமக்கு என்ன தேவை, இந்த பொருள் அதுக்கு சரிப்பட்டு வருமான்னு பாக்கனும்.. “ AC பொறுத்தவரை அதோட Capacity,Technology&Warranty,EnergySaving,Features,Brand இதெல்லாம் முத முடிவு பண்ணனும்.. அய்யயோ budget விட்டுட்டனே!!
Read 26 tweets
Aug 13, 2021
Form 16 வந்துச்சு. IT Return File பண்ணியா? இப்படி லாம் சில வார்த்தைகள் உங்க காதுல விழலாம் இந்த ஆகஸ்ட் மாசத்துல. இது என்னன்னு தெரியாம சில பேர் இருக்காங்க, குறிப்பா புதுசா வேலைக்கு போறவங்க. அவங்களுக்கு ஆன பதிவு..
Form 16 அப்படினா என்ன?
உங்க ஆண்டு வருமானம்(Fin Yr) > 2.5L , மாசம் மாசம் tax பிடிப்பங்க. இதுக்கு TDS ( Tax Deducted at source) ன்னு பேரு. இப்படி பிடிச்ச அமௌண்ட் உங்க PAN number வழியா IT Department ல pay பண்ணுவாங்க. April-March தான் Financial Year. இந்த FY காலத்துல புடிச்ச (Contin)
Amount க்கு ஒரு கிணறு வெட்டன Receipt மாதி ஆபீஸ்ல ஜூலை/ஆகஸ்ட் மாசம் ஒரு certificate கொடுப்பாங்க. அது தான்யா Form 16.
குறிப்பு : இந்த FY ல உங்க வருமானம் 2.5 கீழ இருந்தா Form 16 உங்களுக்கு கொடுக்க மாட்டாங்க.
Read 21 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(