இன்று ஏதோ ஆசிரியர் தினமாம், என் ஆசிரியரை இழந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது..என் ஆசிரியர் எப்பேர்பட்டவர் தெரியுமா? என் வாழ்க்கையை நான் சீர்படுத்தும் முன்னால் செதுக்கியவர் தோழர்களே!! அங்கன் வாடி போனேன் என் மெல்லியப்பாதமும், அடிமாடாய் உழைக்கும்
என் தாயின் இடுப்பும் நோகுமென்று உள்ளூரிலேயே அமைத்துக் கொடுத்தவர் என் ஆசிரியர்.. நான் தொடக்கப்பள்ளி போன போது எனக்கு காலணிகளை இலவசமாக கொடுத்தவர் என் ஆசிரியர். நான் நடுநிலைப்பள்ளியில் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு இலவச பஸ்பாஸை வழங்கியவர் என் ஆசிரியர்.. நான் உயர்கல்வியை நெருங்கும்
எனக்கு இலவச மிதிவண்டியை கொடுத்தவர் என் ஆசிரியர்.. சேரியில் படிப்பறிவு இல்லாத ஒரு தம்பதிக்கு பிறந்த என்னை கல்லூரிக்கு அனுப்பும் போது பார்ப்பணக் கூட்டம் என்னை சூழாதவாறு என் வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த ஆசிரியர் என் ஆசான்..ஆங்கிலத்தை பார்த்து நான் பயந்த போது செல்வமே! அழாதே... கண்ணை
துடைத்துக் கொள் நானிருக்கிறேன் என்று என்னை ஆரவாரம் செய்தவர் என் ஆசிரியர்..இதையெல்லாம் செய்த என் ஆசிரியர் நான் முதல்தலைமுறை பட்டதாரி என்னும் அந்தஸ்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.. எனக்கு வயது 21 என் ஆசிரியருக்கு வயது நான்கு! ஆச்சிரியக்குறியை அடுக்க வேண்டாம் தோழர்களே. கூனிக்குறுகி
கிடந்த கூட்டத்தில் பிறந்த என்னை போன்ற எத்தனையோ பிள்ளைகளை வளர்த்து இந்த தமிழ் சமூகத்திற்கு அயராது உழைத்தது போதும் என்ற மனநிறைவோடு சென்ற என் ஆசிரியர் யார் தெரியுமா? தலைவர் கலைஞர் தான் ஆசான்.. எனக்கான சுயம்,மனிதம்,கடவுள் இந்த மூன்றையும் வழங்கியவர் தான் தலைவர் கலைஞர். அந்த ஆண்டவனை
நேரில் பார்த்து என் பிறவியின் பலனை அடைந்தேன்! ஏய்,
வங்க கடலே? கொஞ்சம் காத்திரு.. என்னை ஆளாக்கி விட்ட என் ஆசான் உறங்குகிறார்! முடிந்தால் அவரிடம் போய் சொல், மேடையில் சரிநிகர் நாற்காலி போடப்படுகிறது என்று"
எந்த ஒரு கொம்பனும் என்னை விட தமிழ்பற்று கொண்டவன் இல்லை - சீமான்!!
Mr.சீமான் இந்த படம் நினைவில் இருக்கிறாதா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவுப்படம்... பேரலை நெருங்கும் போதும் வள்ளுவன் மூன்று விரல்களை காட்டி கம்பீரமாக நிற்கின்றான்! கீழே! "பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பல கொம்பன்களின் மூத்த கொம்பன் என் தலைவன் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம்! திருக்குறளை உன்னைப் போன்ற பொய்களை வாரி தூற்றும் கழிசடைகளுக்காகவே அவர் எல்லாப் பேருந்துகளிலும் "யாகாவாராயினும் நாகாக்க " எனும் உலகின் தாரக மந்திரத்தை பிரசுரிப்பு செய்ய
தொடங்கினார். அய்யாகோ! சீமானே! மறந்தாயோ அந்த தமிழ்தாயின் தலைமகனை, கலைஞர் தான் "விதவை" என்னும் வார்த்தையில் கூட பொட்டு வைக்க முடியவில்லை எனவே "கைம்பெண்" என்ற சொல்லாடலை பயன்படுத்த அரசாணையை வெளியிட்டார்!!
அய்யகோ சீமானே! மறந்தாயோ அந்த மாபுலவனை? நொண்டி, முடவன் என்று கேவலமாக பேசிய
திருட்டு குற்றத்தை ஒத்துக்ககொள்ள சொல்லி "ஜெய்பீம்" படத்தில் ராஜாகண்ணுவை காட்டுமிராண்டி தனமாக தாக்கும் காவல் துறையை பார்த்திருப்போம்! ஆனால், நிஜத்தில் திமுகவை விட்டு விலகச் சொல்லி கொடுமைபடுத்தியும் மரணத்தின் நொடிவரை திமுகவின் கொள்கையை நெஞ்சிலேந்திய
ஒரு ராஜாகண்ணுவை பார்த்திருக்க மாட்டோம்! ஆம், அந்த ராஜாகண்ணு வேருயாருமில்லை "சிட்டி பாபு".. திமுகவின் தூண்களில் இவரின் ரத்தம் குழைத்து கட்டப்பட்டிருக்கும். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.. 1975-ல் மிசாவில் கைது செய்யப்பட்டார். இன்றைய திமுக தலைவர் தளபதி, சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி
ஆகியோருக்கு ஒரே சிறையில் அன்றைய காவல்துறை தள்ளியது. இளைய தலைமுறைக்குச் சுருக்கமாகச் சொன்னால் "பொடா சட்டத்தின் தாத்தா, தடா சட்டத்தின் தந்தை தான்" இந்த மிசா' தளபதியை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போதெல்லாம் அடியை தன் மீது வாங்கி இன்று தளதியை நமக்களித்த ஒரு தியாகி அய்யா "சிட்டிபாபு"
இந்திய அரசியல் அதிகாலை முதலே பரபரப்புடன் காணப்படும்! எப்போதும் ஊடகங்களின் மையப்பகுதி தென் திசையை நோக்கியே இருக்கும்.. ஆம், அது தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற தலைவர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் தான் அந்த குடில்.. கோபாலபுரத்தின் நான்காவது தெருவை
தவிர்த்து தமிழக வரலாற்றை எழுத எந்த கொம்பனாலும் முடியாத ஒன்று.. பல ஆணவக்காரர்களை அடக்கியது அந்த நான்காது தெரு. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது கோபாலபுரத்து வீடு..1955- புதயல் என்னும் திரைப்படத்தில் வசனம் எழுதிய தலைவர் கலைஞருக்கு 45,000 கிடைத்த வருமானத்தில் சரபேஷ்வரா ஐயரிடம்
இருந்து அந்த இல்லத்தை வாங்கினார் தலைவர் கலைஞர்.. பல பிரதமர்களை உருவாக்கியதும் அந்த நான்காவது தெருதான். எத்தனையோ கல்வியாளர்களையும் கவிஞர்களை உருக்கியதும் அந்த இல்லம் தான் என்பதில் யாருக்கும் அய்யமில்லை. தான் வாழ்ந்த இல்லத்தை தன் மனைவி தயாளு அம்மாளுக்குப் பிறகு அது ஏழைகளின்
திமுக வரலாற்றை சுவடுகளாக வெளியிடும் போது அதில் அரை பத்திச் சுவடுகள் மட்டும் ஒருவனின் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும். ஆம், அந்த பெயர் தான் ஜெ.அன்பழகன்.. அச்சத்தை அகராதியில் வைக்காத ஒரு திமுககாரன், திமுகவின் சுவாசக்காற்றை இறுதி வரை சுவாசித்த மாவீரன்,
தலைவர் கலைஞரின் முரட்டு பக்தன், திமுக தொண்டர்களின் கடைசி நம்பிக்கை, தி நகர் தொகுதி மக்களின் நிரந்தர MLA, பழக்கடை அய்யா ஜெயராமனாரின் தவப்புதல்வன், பயத்திடமே பயத்தை காட்டும் பயமறியாச் சுடரொலி என்றெல்லாம் புகப்படக்கூடியவர் தான் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள். ஜீன் மாதம் பிறந்தால் போதும்
தி.நகரில் உள்ள அவரின் அலுகத்தில் அலையலையாய் மக்கள் கூட்டம் ஏழை குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கும் தருமத்தாயின் தலைமகன் இந்ந அன்பழகன்..எதிரிகளிடமே புறமுதுகை காட்டி ஓடியதுமில்லை, நெஞ்சிலே வேல் தாங்கும் கரிகால்பெருவளத்தானும் அன்பழகன் அவர்கள் தான். தொண்டர்களின் கோரிக்கையை தலைமையிடம்
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!!
- எடப்பாடி பழனிசாமி
இந்த முகத்தை ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? திரு.பழனிசாமி! 1991 தமிழகத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர்.. வாழ்க்கையில் இவர் செய்த பாவம் ஜெயலலிதாவுடன் சண்டமாருதம் செய்ததுதான்.. ஆம், இவர் தான் VS சந்திரலேகா IAS..
TITCO அமைப்பின் 25% சதவிகித பங்குகளை ஜெயலலிதா வாங்குவதை எதிர்த்து அதிகார வர்க்கத்தோடு போர் புரிந்ததற்கு கிடைத்த வெகுமதி தான் ஆசிட் வீச்சு..
இவர்கள் மூவரையும் நினைவிருக்கிறதா? Mrபழனிசாமி
1.ஹேமலதா 2.கோகிலவாணி 3.காயத்திரி என்னய்யா பாவம் செய்தார்கள்? ஒரு ஏழை குடும்பத்தைச்
சார்ந்தவர்கள் முன்னேறுவது ஒரு குற்றமா? யாரோ ஒருவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெறுவதற்கு இவர்கள் மூவருக்கும் அளிக்கப்பட்ட தண்டனை உயிரோடு வைத்து பேருந்தில் கொளுத்தியதால் மாண்டு போனார்களே! என்ன பாவம் செய்தார்கள்.. கரிக்கட்டையாக எறிந்தார்களே யார் ஆட்சியில் 2001 ஜெயலலிதா
எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை அவசியமா?
- எடப்பாடி பழனிசாமி கேள்வி
இந்த பையனை நினைவிருக்கிறதா? பழனிசாமி!
இந்த பையன் பேரு பொன்.நாவரசு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன்.
இவனுடைய அப்பா சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய ப.க.பொன்னுசாமி! Mr.பழனிசாமி நீங்கள் கொண்டு வந்த நீட் தேர்வுகள் இல்லாத காலகட்டம் அது! ஆம், தலைவர் கலைஞரின் ஆட்சி..தமிழர்களின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டமும் கூட!! அப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு
படித்துக் கொண்டிருந்த ஜான் டேவிட் என்பவன் தன்னுடைய ஓரினச்சேர்க்கைக்கு (Homosexual) இணங்க மறுத்ததால் நாவரசுவை கொலை செய்து உடல்பாகங்களை ஆற்றில் வீசினான்.. தமிழகமே அதிர்ந்த அந்த கொலை சம்பவம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றது. கொதித்தெழுந்த தமிழ்தாயின் தலைமகனான கலைஞர் உடனே அமைச்சரவையை