பெரும் கூட்டம் ஏற்றுக் கொள்ளாத பேசத் தயங்கும் உட்பொருட்களை சமூகக் கூறுகளை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசும் படம்.

சாதி மதம் இனம் மொழி பாலினம் கடந்தது காதல், ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமெனில் "LOVE IS LOVE"என்பதை சொல்வதே @beemji அவர்களின் "நட்சத்திரம் நகர்கிறது"
(1) Image
முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை பேசப்பட்ட அத்தனை வார்த்தைகளிலும் அரசியல், இசையிலும் வரிகளிலும் மெய்சிலிர்க்க வைத்த அதே நேரத்தில் சிந்திக்க மறந்து போன அல்லது பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பலவற்றையும் பேசுகிறது.

(2)
இசைஞானியை வைத்து செய்யப்படும் அரசியல், அவரின் இசை மீது வைக்கப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை பட்டவர்த்தனமாக பேசி பொதுபுத்தியை கேள்வி கேட்கிற ரெனே மாற்றத்தை விரும்பும் பலரின் பிரதிநிதியாக இருக்கிறாள்.

(3)
பல இடங்களில் முற்போக்கு பேசினாலும் ஏதோ ஒரு ஓரத்தில் ஆதிக்க மனநிலை ஒட்டிக் கொண்டிருக்கும் இனியன், பலரையும் தங்களை சுயபரிசோதனை செய்ய தூண்டுகிறான். பொது சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் அர்ஜுன், இந்த சமூகம் எவ்விதமான மாற்றத்தை நோக்கி நகர வேண்டும் என சிந்திக்க வைக்கிறான்.

(4)
இந்த சமூகத்தில் வாழும் பல வகையான மனிதர்களின் பிரதிபலிப்பாய் நட்சத்திரம் நகர்கிறது. ரெனே பேசும் ஒவ்வொரு வசனமும் சிந்தாமல் சிதறாமல் இந்த சமூகத்தில் படிந்துள்ள அழுக்குகளை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.

ஒரு பெண் தன்னை கம்யூனிஸ்டாகவோ பெரியாரிஸ்டாகவோ வெளிப்படுத்தும் போது பெரிய (5)
ஆச்சரியத்திற்கு உள்ளாகாத சமூகம், அவள் தன்னை அம்பேத்கரியவாதி என சொல்லும் போது ஒரு வித ஆச்சரியக்குறியுடன் அவளை அணுகுகிறது என்பதை மிக நுட்பமாக சொல்கிறது.

"என்னை எப்படி கூப்பிடனும்னு நான் தான் முடிவு செய்வேன்" என ரெனே சொன்ன விதமும் அவள் குரலில் இருந்த தீர்க்கமும்,

(6)
ரெனே என்பவள் யார் என முதல் காட்சியிலேயே உணர வைக்கிறது.

காதல் என்பது இயல்பான ஒன்று என உணர மறந்து, காதலுக்கு பல காரணங்கள் தேடும் காதலின் பின்னால் கட்டி வைக்க பல கதைகளை தேடும் ஒரு சாராருக்கும், காதல் என்பது இயற்கையான ஒன்று அதன் பின்னால் கதைகளை தேடுவது அப்பட்டமான முட்டாள்தனம்
(7)
என சொல்லும் இன்னொரு சாராருக்கும் நடக்கும் உரையாடல் தான் நட்சத்திரம் நகர்கிறது.
சமூகத்தின் எந்த புரிதலும் இல்லாமல் பொது வெள்ளத்தில் கலந்து அதனுள் ஊறிக் கிடக்கும் ஒருவருடன், ஒரு உரையாடலை ஏற்படுத்துவதை தவிர்த்து அவர்களை ஒதுக்கி வைப்பது என்பது எந்தவித பயனையும் தராது என்பதை,
(8)
அர்ஜுன் ரெனேவிடம் தவறாக நடந்து கொண்ட பின்னும்
ரெனே அர்ஜுனை மன்னித்து ஒரு உரையாடலுக்கான தளத்தை அமைத்துக் கொடுக்கும் காட்சியில் வெளிப்படுகிறது.

"political correctness" என்பது ஒரு நாளில் வருவது அல்ல பல தவறுகள் செய்து அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்று நாம் திருத்திக் கொள்ளும்
(9)
போது அமைவது தான் அது
எனவே தவறை திருத்திக் கொள்ள தளத்தை அமைத்துக் கொடுப்பது மாற்றத்தை விரும்புபவர்களின் முதல் கடமை என்பதை மிகத் தெளிவாக புரிய வைக்கிறது.

சிறிய காட்சியானாலும் அர்ஜுக்கும் அவன் அம்மாவிற்கும் இடையில் நடக்கும் உரையாடல் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது

(10)
என தோன்றுகிறது. தன் மகன் ஏதோ ஒரு பெண்ணை காதலிக்கிறான் என தெரிந்ததும் முதலில் அவன் அம்மா அவனிடம் கேட்ட கேள்வி "அவங்க என்ன ஆளுங்க?"

இந்த வசனத்தை கேட்டதும் புரட்சியாளர் அம்பேத்கர் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வந்தது "சாதி அமைப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள்

(11)
பெண்களே ஆவர். ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு சாதியை கடத்துவது அவர்கள் மீது விதிக்கப்பட்டிருக்கிறது."

ஒரு பெண் இந்த சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமெனில், இங்கு சமூகம் கட்டமைத்துள்ள அத்தனை கட்டுப்பாடுகளையும் காப்பாற்றும் பெண்ணாக இருக்க வேண்டும்.

(12)
பல பெண்களும் தெரிந்தோ தெரியாமலோ இதைத்தான் கடைப்பிடிக்கிறார்கள் காரணம் சமூகம் அதைத்தான் அந்த பெண்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது, அதுதான் சரி என நம்பவும் வைத்திருக்கிறது.

"ஒருவன் அடிமைப்பட்டு இருந்தால் அவன் அடிமைபட்டு இருப்பதை உணர்த்தினாலே போதும் பிறகு

(13)
அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்." என புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னது, சமூக கட்டுக்குள் அடிமையாக இருக்கும் அத்தனை பேருக்கும் பொருந்தும் முக்கியமாக பெண்களுக்கு.

சமூகத்திற்கு காதலின் மீது சாதி அடிப்படையிலான கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பது மட்டுமல்லாமல், பாலினம் சார்ந்த

(14)
பார்வையும் எப்படி உள்ளது என இந்த படத்தில் தெளிவாக வெளிப்படுகிறது. சமூக சமத்துவத்திற்கு பாலின அரசியல் என்பது மிக முக்கியமானது என ஒவ்வொரு நிமிடமும் உணர்த்துகிறது.

சமூக மாற்றத்திற்காக என்ன உரையாடல் நடத்தினாலும் எத்தனை காலம் புரிய வைக்க முயற்சி செய்தாலும்,

(15)
மாற்றத்தை விரும்பாத ஒரு கூட்டம் மனிதர்களின் பிரதிநிதியாக "பெரும் பூனை". சமூகத்தில் வலம் வரும் பல பெரும் பூனைகளுக்கு "நட்சத்திரம் நகர்கிறது" என்பது ஏற்றுக்கொள்ள முடியாத மிக உறுத்தலான விஷயமாக உள்ளது.
ஆனாலும் மாற்றத்திற்கான ஒவ்வொரு விஷயமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்,

(16)
யார் அனுமதித்தாலும் இல்லை என்றாலும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது இந்த படம்.

இப்படி காட்சிக்கு காட்சி பேசு பொருளாக அமைந்துள்ள #நட்சத்திரம்_நகர்கிறது பெரிதும் கொண்டாடப்பட வேண்டிய ஆகச் சிறந்த படைப்பு.
வாழ்த்துகள் @beemji
&Team #NatchathiramNagargirathu
(17)
End 🖤💙❤️🧡💛💚💜🤎🤍 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr. Nagajothi 👩🏽‍⚕️

Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @DrNagajothi11

Sep 8
#ஓணம்

ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;

(1) Image
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு

(2) Image
அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.

ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய

(3) Image
Read 32 tweets
Sep 2
#Thread

கந்தன்(ஸ்கந்தன்) முருகன் இருவரும் ஒன்றா!?

முருகன் கடவுளா!?

முதலில் ஸ்கந்தன் யார் முருகன் யார் என புரிந்து கொண்டால் முருகன் கடவுளா என்ற கேள்விக்கான பதில் அதிலேயே கிடைத்துவிடும்.

(1)
ஸ்கந்தன் எப்படி பிறந்தார் என, என்பது மகாபுராணங்களில் பதின்மூன்றாவது புராணமான கச்சியப்ப சிவாச்சாரியர் அவர்களால் எழுதப்பட்ட கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ள கதையை சுருக்கமாக பார்ப்போம்.

வழக்கமான எல்லா கடவுள் கதைகளிலும் போல அசுரர்கள் தேவர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்,

(2)
தேவர்களை சிறை பிடித்து பல இன்னல்களை உருவாக்குகிறார்கள். இந்த கொடுமைகள் தாங்காமல் தேவர்கள் சிவனிடம் முறையிடுகிறார்கள், அப்போது சிவன் தனக்கு ஒரு குமாரன் உருவாவான் அந்தகுமாரன் அசுரர்களை வதம் செய்வான் என்று கூறுகிறார்.

(3)
Read 31 tweets
Sep 1
#triggerwarning ⚠️

அங்கன்வாடியில் பயின்று வந்த மூன்று வயது தலித் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளை தீக்குச்சியை பயன்படுத்தி எரித்துள்ளார் உதவி ஆசிரியை ராஷ்மி, கர்நாடகாவில் உள்ள தும்கூர் மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவில் உள்ள கோடேகெரே கிராமத்தில் உள்ள

(1)
அங்கன்வாடி மையத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது இது.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அக்குழந்தை தனது தாயை இழந்தது. அவரது தந்தையும் பாட்டியும் குழந்தையை கவனித்து வந்தனர். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு

(2)
6 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மூத்த உடன்பிறப்பும் உள்ளார். குழந்தையின் பெற்றோர் சிக்மகளூரில் உள்ள ஒரு காபி எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட ராஷ்மி மீது போலீஸ் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

(3)
Read 6 tweets
Aug 31
#Thread

#விநாயகர்_சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகரின் பிறந்தநாள் என்று சொல்கிறார்கள், சரி அது அவர்களின் நம்பிக்கை சார்ந்தது என்பதற்காக அதை ஒப்புக்கொண்டாலும், இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் விதம் எப்படி இருக்கிறது!?

(1)
விநாயகரின் ஒரு சிலை பொதுவெளியில் வைக்கப்பட்டு சில நாட்கள் பூஜை செய்த பிறகு அதை கடலிலோ ஆற்றிலோ கொண்டு போய் கரைத்து விடுகிறார்கள். ஆனால் புராணங்களின் அடிப்படையில் இந்த மாதிரியான வழிபாடு இல்லவே இல்லை.

(2)
சிவமகா புராணத்தில் விநாயகர் சதுர்த்தி எப்படி செய்ய வேண்டும் என குறிப்புகள் உள்ளது.
மார்கழி மாதம் தேய்பிறையில் வரும் நான்காவது நாள் சதுர்த்தி அன்று இதை துவங்க வேண்டும், உலோகம் பவளம் அல்லது மண் ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகரின் சிலையை வைத்து,

(3)
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(