Swathika Profile picture
Sep 7 25 tweets 7 min read
90s kids க்கு bourbon, little hearts மாதிரி Generation Alpha க்கு Oreo. இன்றைய தேதிக்கு மிக பிரபலமான biscuit Oreo. கண்டிப்பா எல்லாரும் வாங்கி, 'ட்விஸ்ட் பண்ணுங்க... lick பண்ணுங்க... dunk பண்ணுங்க... சாப்பிடுங்க... என்று சாப்பிட்டு இருப்போம் (குழந்தைக்காகவாது...)
எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என Oreo வில் எந்த animal product உம் சேர்ப்பதில்லை முழுக்க முழுக்க vegan பிஸ்கட். அதேபோல diet-friendly! கலோரி கணக்கு மிக குறைவு. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ட்விஸ்ட் பண்ணி, lick பண்ணி, dunk பண்ணி சாப்பிடலாம்.
எது பிரபலமாக இருந்தாலும், அதைப்பற்றி controversial ஆக விஷயங்கள் வருவது வாடிக்கையானது தானே அந்த வகையில் Oreo cookies பற்றி ஒரு சுவாரஸ்யமான conspiracy theory படித்தேன்.
Oreo biscuit ஐ பார்த்ததும் எல்லார் கண்களும் முதலில் செல்வது அந்த பிஸ்கட் மேல் இருக்கும் டிசைன்க்கு தான்.
American architectural critic Paul Goldberger, Oreo biscuit ன் டிசைனை கண்டு சிலாகிக்கிறார். "யாருக்கு இப்படி ஒரு அரிய சிந்தனை உதித்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த டிசைன் ஒரு அற்புதமான நுட்பமான டிசைன்.
சாப்பிட தானே போறாங்க அதுக்கு எதுக்கு இவ்ளோ? சும்மா வட்டமா இருந்தா பத்தாதா? என்றில்லாமல் ஒரு ornament மாதிரி ஒரு celebration மாதிரி அட்டகாசமா இருக்கு. அந்த காலத்து கட்டிடம் எல்லாம் நுட்பமான வேலைப்பாடுகளோடு சிற்பங்களோடு அமைத்திருப்பார்கள்.
அந்த மாதிரி இந்த cookie யை செதுக்கி இருக்கிறார்கள்" என்று புளங்காகிதப்படுகிறார்.

இப்படி எல்லார் கண்களையும் கவர்ந்த அந்த டிசைனுக்கு நம்ம conspiracy theorist ஏதாவது ஒரு கதை வச்சு இருப்பாங்களே... இருக்கு பெரிய கதை இருக்கு...
Oreo's sacred geometry:

Oreo biscuit இல் இருக்கும் symbols ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு பொருள் இருக்கிறதாம். இரண்டு bar உள்ள cross க்கு Cross of Lorraine என்று பெயர். இது Knights Templar களின் சின்னம்.
கிறிஸ்தவ மதத்தை பரப்ப புனித போர்கள் நிகழ்த்தியவர்களே இந்த Knights Templar (இவர்கள் யார்? #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்).

அதே போல Oreo என்னும் பெயரை சுற்றி பூ பூவா four-leaf clover இருக்கு இல்லையா? அது Cross Pattée! அதுவும் Knights Templar களின் சின்னம்.
Oreo என்பதற்கான பெயர் காரணம் யாருக்கும் தெரியாது. சிலர் ஆரம்பத்தில் இந்த பிஸ்கட்கள் தங்க நிற பெட்டியில் இருந்தது. தங்கத்திற்கு ஃப்ரெஞ்ச் சொல் doré அதிலிருந்து Oreo வந்திருக்க கூடும் என்கிறார்கள்.
சிலர் cream இல் இருக்கும் 're' யை எடுத்து chocolate என்னும் சொல்லில் இருக்கும் இரண்டு O க்கு நடுவில் வைத்தால் வரும் சொல் தான் Oreo என்கிறார்கள்.
சிலர் Or என்றால் Hebrew மொழியில் வெளிச்சம் அல்லது அதிகாலை. eo என்றால் கிரேக்க மொழியில் மாலை/சூரியன் மறையும் நேரம்.
வெள்ளை கிரீம் வெளிச்சத்தையும் dark biscuit இரவையும் குறிக்கிறது என்கிறார்கள்.
அடுத்து Templars ஐ watchers என்பார்கள். அதற்கு கிரேக்க சொல் egrḗgoros. இதிலிருந்தும் Oreo வந்து இருக்க கூடும். அதாவது Oreo சாப்பிடுபவர்கள் விழிப்பு நிலையை அடைகிறார்களாம்.
Oreo வை ஏன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் அதில் எதோ ஒரு addictive பொருளை சேர்க்கிறார்கள் என்கிறார்கள். ஆனா Oreo biscuit ன் target குழந்தைகள் மட்டுமல்ல எல்லா மக்களுமே தான்.
அதில் ஏதோ கலந்து நம்மை அடிமைப்படுத்துவதற்கு தயார் செய்கிறார்களாம் psychic programming or mind control.
பிஸ்கட்டின் நடு பகுதியை சுற்றி உள்ள புள்ளிகளை இணைத்தால் 5 முனை நட்சத்திரம் வருகிறதாம் அது Order of the Eastern Star ஐ குறிக்கிறதாம். இது Freemason னின் மற்றொரு குழு.
இப்படி பல Freemasonry symbol இருப்பதால் இதை டிசைன் செய்தவர் ஒரு Freemason ஆக இருக்க வேண்டும் என்கிறார்கள். (Freemason என்பவர்கள் யார்? #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
Freemasons மற்றும் Knights Templar இவங்க ரெண்டு பேரும் கூட்டா சேர்ந்து இந்த Oreo biscuit மூலமா இந்த உலகையே ஆளப்போகிறார்களாம்.
Freemasonry, Order of Solomon’s Temple (Knights Templar), Illuminati, New World Order இவை எல்லாமே secretive, all-powerful organization
(அப்படினு சொல்லிக்கறாங்க!). இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ரகசியமாக இந்த உலகை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று பல நூற்றாண்டுகளாக கிசுகிசுக்கப்படுகிறது.

இவர்கள் ரகசியமாக இணைந்து செயல்பட என்ன காரணம்?
சிலர் யூதர்கள், யூத மதத்தை தவிர்த்து மற்ற மதங்களை அழிக்க இப்படி ரகசியமாக திட்டம் தீட்டுகிறார்கள் என்கிறார்கள். சிலர் இவர்கள் எல்லாம் சாத்தானை வழிபடுபவர்கள் பைபிளில் சொல்லப்படும் Antichrist இன் ஆட்சியை இந்த உலகத்தில் கொண்டு வர சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்கிறார்கள்.
சிலர் Communist கள் உலகத்தை takeover செய்ய இப்படி ரகசியமாக இயங்குகிறார்கள் என்கிறார்கள். எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை.
cookies/biscuits மேல அலங்காரமா எதாவது டிசைன் போடுவது docking & embossing என்றழைக்கப்படுகிறது. docking என்பது மாவை bake பண்ணும்போது அது உப்பிவிடாமல் இருக்க நிறைய துளைகளை போடுவது. எதாவது டிசைனை மேல அச்சிடுவது embossing எனப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சியின் போது, பிஸ்கட்கள் தொழிற்சாலையில் mass production செய்யப்பட்டது. அப்போது docking & embossing இரண்டையும் இணைத்து ஒரு automated production line ஐ Thomas Vicars என்னும் ஒரே பெயரைக் கொண்ட இருவர் உருவாக்கினார்கள்.
அதன் பின் அதில் நிறைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தன.
1908 இல் Sunshine Biscuits என்னும் நிறுவனம் Hydrox என்னும் Biscuit ஐ அறிமுகப்படுத்தியது. அதில் நல்ல அழகான நுட்பமான டிசைன் இருந்தது. 4 வருஷம் கழிச்சு அதை காப்பியடிச்சு National Biscuit Company (Nabisco) உருவாக்கியதுதான் Oreo.
Oreo தான் original, Hydrox தான் copy என்று மக்கள் நம்பும் அளவிற்கு தற்போது Oreo வின் புகழ் இருக்கிறது.
Oreo எடுத்ததுமே தற்போது இருக்கும் டிசைனில் வரவில்லை. இப்போது இருக்கும் டிசைன் 1952 இல் வந்தது அதற்கு முன் 2 வேறு வேறு டிசைன்களில் Oreo வந்திருக்கிறது.
இந்த oreo design conspiracy பிரபலமாக தொடங்கியபோது அதை உருவாக்கிய William A. Turnier உயிரோடு இல்லை. ஆகையால் அவர் என்ன ஐடியாவில் இந்த டிசைனை போட்டார் என்று தெரியவில்லை. (ஆளை பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்காரு...)
அவரது மகன் Bill Turnier விசாரிக்கும்போது, அப்பா Mason உறுப்பினர் இல்லை ஆனால் தாத்தா Mason உறுப்பினராம். இருந்தபோதிலும் அப்பாவிற்கு இதில் எவ்விதமான ஆர்வமும் இருந்ததில்லையாம். ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் அப்படின்ற மாதிரி ஒரு விளக்கம்!
ஒரு பக்கம் இப்படி conspiracy theorist, Oreo சாப்பிடாதீங்க சாப்பிடாதீங்க என்று கூவினாலும் மறுபக்கம் விற்பனை ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. Nabisco வும் எவனோ என்னமோ பினாத்திக்கிட்டு போறான் நமக்கு கல்லா கட்டுனா போதும் என்று கமுக்கமா இருக்கு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Swathika

Swathika Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @swathikasarah

Sep 6
குடும்பத்திற்குள்ளேயே தனி தட்டு தனி டம்ளர் தான் அது தான் hygienic என்பவர்கள் ஹோட்டல் போகும்போது வீட்டில் இருந்து தட்டு, டம்ளர், ஸ்பூன் கொண்டு போவார்களா? coffee shop க்கு வீட்டில் இருந்தே cup கொண்டு செல்வார்களா? small doubt....
ஒரே குடும்பத்தில், ஒரே வீட்டில் வாழும் அனைவருக்கும் ஒரே வகையான microbial population தான் இருக்கிறதாம். including pets இவர்கள் வேறு வீட்டுக்கு போகும்போது இந்த microbial population உம் அவர்களோடேயே இன்னொரு வீட்டிற்கும் போகிறதாம்.
பலர் வாழையிலை இருக்கு, use and throw cup, paper cup இருக்கு அப்படின்றாங்க. வாழையிலை indian cuisine ல தான் இருக்கும். அதுவும் கொஞ்சம் பெரிய ஹோட்டல் ல இருக்காது. paper cup, tea கடைல இருக்கும் இப்போ Café Coffee Day போன்ற கடைகளுக்கு போன coffee mug ல தான் தருவாங்க.
Read 4 tweets
Sep 6
socially irresponsible behavior நிறைய இருக்கு. traffic signal அ மதிக்காம போறது... கண்ட இடத்தில குப்பையை போடுறது... இப்படி பல, அதில் ஒன்று தான் பொத்தாம் பொதுவாக எல்லாருக்கும் மருந்து பரிந்துரை செய்வது. இது அடுத்தவர்களுக்கு நல்லது செய்கிறேன் என்னும் நோக்கத்தில் தான் செய்யறாங்க.
ஆனா உண்மையில் இது நல்லது அல்ல மிக மிக மோசமானது.

உங்களுக்கு வேலை செய்யும் ஒரு மருந்து எனக்கும் வேலை செய்து அதே result ஐ தரும் என்பது நிச்சயமல்ல. உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய paracetamol கூட சிலருக்கு (very rare) allergic reaction ஐ உண்டு பண்ணும்.
இயற்கை பொருளான, உடலுக்கு நல்ல, அதிக vitamin mineral சத்து கொண்ட வேர்க்கடலை சிலருக்கு உயிருக்கு ஆபத்தான anaphylaxis reaction இல் கொண்டு விடும்.
Read 22 tweets
Sep 5
வீட்டு பணியாளர்களுக்கு Sunday லீவு தரணும் என்பதும், மாசம் 3 நாள் லீவு விடணும் என்பதையும் நீயா நானா ஷோ show வில் பல பேரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ஷோ ல மட்டுமல்ல நிஜத்திலும் பலரால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது.
அதுல ஒருத்தங்க அதான் இரவானதும் வீட்டுக்கு போறீங்களே அப்புறம் என்ன? அப்படின்னு கேட்டாங்க.
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டப்போது தொழிலாளர்கள் எல்லாம் ஒரு நாளைக்கு 10 முதல் 16 மணி நேரம் வேலை பார்த்தார்கள். குழந்தை தொழிலாளர்களும் இதில் அடக்கம்.
அப்போ முதலாளிகள் சொன்ன காரணமும் இப்போ இவங்க சொல்ற காரணம் தான், உற்பத்தி தேவை அதிகமாக இருக்கு... நான் தான் உனக்கு காசு தரேனே... இதுக்கு எல்லாம் ஓத்துக்கிட்டு தானே வேலைக்கு வர... கஷ்டமா இருந்தா வராத...
உலக நாடுகள் முழுவதும், Australia, Britain, USA போன்ற நாடுகளில் தொழிலாளர்கள்,
Read 13 tweets
Sep 5
பொண்ணுங்க ரொமான்டிக்கான ஆளா இல்லையா என்று எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார்கள். இந்த சமூகம் ஒரு நல்ல ஆண் என்பவன் வேலைக்கு போய் சம்பாரிக்கணும், மனைவி குழந்தைகளை பாதுகாக்கணும், கெட்ட பழக்கங்கள் இருக்கக்கூடாது என்று தான் சொல்லி தருகிறதே தவிர
ஒரு பெண் மனதுக்கு பிடித்தவனாக எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி தருவதில்லை. அதனால தான் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவன் இம்மாதிரி ஆட்களை தேடிப்பிடித்து அவர்களை ரொமான்டிக்கா பெண்கள் மாற்ற வேண்டி இருக்கு.
'ஐயோ பொண்டாட்டி பாவம் பிள்ளையும் தூக்கிட்டு பையையும் தூக்கிட்டு நிக்கிறாளே அந்த பையை நாம வாங்கிப்போம்' என்று (இது பிறருக்கு உதவும் எண்ணம் இருப்பதால் இயல்பாக வரும் எண்ணம்) வாங்கும்போது பொண்டாட்டிக்கு ஆஹா நம்ம புருஷனுக்கு நம்ம மேல என்ன ஒரு லவ் என்று குஷி ஆகிறது.
Read 6 tweets
Sep 5
ஏன் follow செய்தால் பதிலுக்கு திருப்பி follow பண்ணனும் என்று எதிர்பார்க்கிறார்கள்? நமக்கு யார் போடுற பதிவுகள் பிடிக்குதோ அவங்களை தானே follow பண்ணனும்? நாம ஒருத்தங்க பதிவுகள் பிடிச்சு follow பண்ணுனா பதிலுக்கு அவங்களுக்கு நமது பதிவுகள் பிடிக்கணும் என்று அவசியம் இல்லையே...
இதுல இன்னொன்னு இருக்கு follow பண்ணு ன்னு கேப்பாங்க. நாமளும் சரி வாய்விட்டே கேட்டாங்களேன்னு மரியாதைக்கு follow back குடுத்தா கொஞ்ச நாள் கழிச்சு நம்மளை unfollow பண்ணி இருப்பாங்க... என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியுது moment!
சில பேர் இப்படி கேட்டாங்களேன்னு follow பண்ணுவோம் ஆனா அவங்க போடுற tweet க்கும் நமக்கும் சம்பந்தமே இருக்காது. for Eg follow back கேட்டாங்களேன்னு குடுத்தா WhatsApp status மாதிரி சாமி போட்டோவா போட்டு ஆன்மீக கருத்துக்கள் போட்டுக்கிட்டு இருப்பாங்க. எனக்கு அதில் ஆர்வமே இல்லை.
Read 8 tweets
Sep 5
ரொமான்டிக்கான ஆளா இல்லையா என்று எப்படி தெரிந்து கொள்வது?

1. நம்முடைய எதிர்கால கனவுகள் மேல ரொம்ப ஆர்வம் காட்டுவார்கள். அதைப் பற்றி கேள்விகள் அதிகம் கேட்பார்கள்.

2. ரொமான்டிக்கான ஆட்கள் நமது கண்களை பார்த்து பேசுவார்கள்.
ஏன்னா நம்மை impress பண்ணனும் என்பது அவர்கள் நோக்கமாக இருக்கும். அதுக்கு நம்ம reaction களை assess பண்ணனும் so எப்போவும் அவங்க பார்வை நம்ம முகத்து மேல் அல்லது நாம் கைகளை ஆட்டி செய்யும் செய்கைகள் மேல் இருக்கும். நாம் சொல்வதை உற்று கவனிப்பார்கள்.
3. எல்லாவற்றிக்கும் நம்மை முடிவெடுக்க சொல்வார்கள். எங்க dinner சாப்பிடலாம் நீயே சொல்லு... உனக்கு இந்த shirt பிடிச்சு இருக்கா நான் இதை எடுத்துக்கட்டுமா? இதற்கு ஒரு பெயர் கூட இருக்கு compassionate love நமது விருப்பத்தை முன்னிலைப்படுத்துதல்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(