த்ரட் எழுதலாம்னு அவனோட மொத்த ரிப்போர்ட் எடுத்து அலசிப்பாத்தா கடைசில இந்த OBC ஆட்களுக்கும் இதர சமூக மக்களுக்கும் பெருசா பட்டை நாமத்தை கொழப்பி அடிச்சுருக்காங்க. இது தெரியாம இந்த சத் சூத்திர சங்கிங்க தாமரைக்கு முட்டுதருவானுவ முட்டாப்பசங்க. #NEETresult2022
இந்த வருஷம் தேர்வெழுத பதிவு பன்ன மாணவர்கள் சதவீதம் வகுப்பு வாரியாக OBC-44.8%
Gen+EWS= 10.74%(அவர்களின் மொத்த தேர்ச்சி சேர்த்து தந்ததால நானும் தேர்வெழுதியவர்களை சேர்த்துக்கிட்டேன்).
SC- 15.2%, ST 6.5%.
இந்த லெவல்ல தேர்வு எழுதிருக்காங்க. ஆனா தேர்ச்சி பெற்றவர் % கேட்டாலே ஜெர்க்
ஆகுது. Gen+EWS- 88.8% (போன வருஷத்தை விட 0.2% அதிகம்)🙏. OBC-7.4% 😝😝(போன வருஷத்தை விட 0.3% கம்மி). SC -2.6,ST: 1%. கிட்டத்தட்ட 10% பேரு 89% மொத்தமா வழிச்சு தின்னுட்டான். இந்த சத் சூத்திர ஓபிசி 45% எழுதி வெறும் 7.4% தான் சீட்டுஎடுத்துருக்கான். (சரியான ஏழரை ).15% எழுதுன பட்டியல்
இனம் 2.6% தேர்ச்சி, 6.5% எழுதுன பழங்குடி மக்கள் 1% தான் பாஸ். இப்பத்தெரிஞ்சுக்கோங்க #NEET யாருக்கான தேர்வுனு. அப்பறம் top 50 ல பொதுப்பிரிவுல 42பேர்,ஓபிசில 7 பேர்,EWSல ஒருத்தர். அப்ப எஸ்சிஎஸ்டி மாணவர்கள் யாருமே இல்லை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா???
இந்த பாஸ் cut off mark பெரிய காமெடி மினிமம் பாஸ் மார்க் Gen- 117 (போனவருஷம் 138) EWS -117 , OBC -116, SC/ST- 116 . தயவு செய்து மாற்றுத்திறனாளிகள் மார்க்கை தூக்கிட்டு வர வேண்டாம். வந்தா உங்க சின்ட்ரெல்லா செருப்புல சாணி முக்கி உங்களையே அடிப்பேன். இனி எவனாவது பாப்பான் பாவம்
அவனுக்கு தான் நிறைய மார்க் தேவைனு நொட்டிட்டு வந்தீங்க அப்பவும் அதே செருப்படி விழும். உச்ச மதிப்பெண் ஓபிசி -715, EWS- 701 😝. SC 695. இதுலயும் வித்தியாசம் பாருங்க... இதுல பாப்பான் புத்திசாலி னு மதுவந்தி சேகர் வகையறா வாந்தி வேற எடுப்பானுவ. டேய் நீங்க படிப்பு
எந்த லெவல்ல இருக்கீங்கனு பாத்துக்கோங்க. உங்களுக்கு அப்பறம் ஓடி வந்த நாங்க உங்களை முந்திட்டு போய்கிட்டே இருக்கோம். இன்னும் கொஞ்சநாள் உங்களை தீட்டுனு நாங்க எல்லாரும் ஒதுக்கி வைப்போம் அப்ப தெரியும்டீ. நிறைய வகைல பொதுப்பிரிவு EWS மக்களுக்கு மட்டுமே இந்த நீட் தேர்வு சாதகமாக
இருக்கிறது என்பது மீண்டும் ஒரு முறை இந்த நீட் தேர்வு நிருபித்து விட்டது. ஓபிசி மக்களும் பட்டியல் இன மக்களும் இந்த சங்கிகளின் நுட்பமான ஏமாற்று வேலையை புரிஞ்சுக்காம ஆடு மாதிரி ஆடிட்டு இருந்தா உங்க அடுத்த தலைமுறை மறுபடியும் 60% பின்னாடி போய்டும். இன்னும் மாநில தேர்ச்சி % பத்தி
பேசல. முதலிடத்தில் இருப்பது 12% தேர்ச்சி விகிதத்துடன் உத்திரபிரதேசம். அடேய் நான் இப்ப வாயால் சிரிக்கனுமா இல்லை டேஷ்ல சிரிக்கனுமா? 7% தேர்ச்சி விகிதத்துடன் தமிழ் நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்னும் கவுன்சிலிங் ரேங்க் லிஸ்ட் வரட்டும். ஜகஜோதியா எப்படி ஏமாந்திருக்கோம்னு
இன்னும் தெளிவா எழுதலாம். ஆனா நிதர்சனம் என்னனா அவனுங்கள மொத்தமா டாக்டர் ஆக்கி விட்டு நீ எல்லாம் தீண்டத்தகாதவர்கள் னு நம்மளை தொட்டுகூட வைத்தியம் பாக்காத நிலைக்கு தள்ளப்போகுது இந்த #NEET எனும் எமன்.
பிகு: த்ரட் புரிய கொஞ்சம் அறிவும் பகுத்தறிவும் அவசியம். #tnagainstNEET #dmk4tn
அவரு டிகிரி பத்தின சர்ச்சையை விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயத்தை பேசனும். அதை கொஞ்சம் ப்ளோ பன்னுங்க. ரிக்வஸ்ட்தான். திறன் மேம்பாட்டு திட்டம் "நான் முதல்வன்" அப்படின்னு ஆரமிச்சுருக்காங்க.
இத்திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ
மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு, அதனை ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன்,சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்
இணையதளம் மூலமாக ஆன்லைன் சர்டிபிகேட் கோர்ஸூம் கன்டெக்ட் பன்றாங்க. சில பயிற்சிகள் இலவசம், சில பயிற்சிகளுக்கு குறைந்த கட்டணம். இத்தோடு நிற்காமல் ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன் மொழித்திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன், உயர் கல்விக்கான நுழைவுத்தேர்வு பயிற்சிகள் என அனைத்தும் வழங்கப்படுகிறது.
அப்யூசர் இந்த புள்ளில இருந்து இந்த பதிவை தொடங்கலாம்னு நினைக்குறேன். எல்லாத்துக்கும் சட்டு சட்டுனு பதில் சொல்லியே பழக்கப்பட்டு கோவத்துல நிறைய பேர் கிட்ட சண்டை போட்டு எதிர்த்து பேசி நிறைய கெட்ட பேர் வாங்கியாச்சு. சர்ச்சையான சில விஷயங்களை எப்பவுமே என்மேல வலிந்து திணித்தது
ஒரு கும்பல். எவ்வளவோ நிறைய பேசினாலும் எடுத்தவுடனே அவங்க எடுத்த ஆயுதம் அப்யூசர், இவனெல்லாம் வாத்தியாரா? வாத்தியாரா இருந்து என்ன பன்னிட்டான், இவன்கிட்ட படிக்குற பசங்க எப்படி உருப்படியா இருக்கும், இவனை நம்பி எப்படி பொண்ணுங்களை படிக்க அனுப்புறது இப்படி நிறைய பேச்சு கேட்டாச்சு
அப்பறம் இன்னொரு க்ரூப் ஜூஸ்குடிக்க நேரம் வந்துடுச்சு ஜூஸ் வேணுமானு ஒரு குறிப்பிட்ட கட்டத்துல பர்சனல் அப்யூஸ்ல இறங்குனாங்க. அதுல ரொம்ப பேசுன ஒரு பையனோட லவ்வர் சென்னைலதான் இருக்காங்க அவங்களோட ப்ரண்டு எனக்கும் ப்ரண்டு அவன் இப்படி பேசுனான்னு அவங்க வந்து மன்னிப்பு கேட்டாங்க
இங்க மேனேஜ்மென்ட் கோட்டாவுக்கே அதிகபட்சம் 90000 தான் கட்டணம். இப்படி 50% கட்டணத்தை உயர்த்துனா மிடில்கிளாஸ் மக்களின் பொறியியல் கனவு சிதைக்கப்படும். இதைவிட கொடூரம் டிப்ளமோ பீஸ் தான். யோசிச்சு தான் இதை பன்றாங்களா இல்லை வேணும்னே பன்றாங்களானு தெரியல. கேட்டா உள்கட்டமைப்பு
வசதிகளை மேம்படுத்த டியூஷன் பீஸ்ல 15% டெவலப்மென்ட் பீஸ்னு வாங்கலாம்னு சப் க்ளாஸ் வேற. உள்கட்டமைப்பு வசதி இல்லைனா ஏன் அப்ரூவல் தரீங்க @AICTE_INDIA . அப்பறமா ப்ரபசர்ஸ் சம்பள பரிந்துரை டேய் ஏகத்துக்கு சிரிப்பு மூட்டாதீங்கடா. இங்க பாதி இஞ்சினியரிங் காலேஜ்ல 22000 ரூவா தர்ரதுக்கே
அந்த முக்கு முக்குறானுவ. பீஸ் ஜாஸ்தி பன்னா இவனுங்க சம்பளம் ஏத்துவாங்கனு எங்க காதுலயே செய்றீங்களே aicte வெட்கமாவே இல்லையா உனக்கு லாம். அப்பறம் முக்கியமான விஷயம் தொடர்ந்து சொல்லிட்டு வர்ரது தான் ஸ்காலர்ஷிப் ல சேரும் மாணவர்களுக்கு அவங்களுக்கான funds கல்லூரி
#நல்லதை_பகிர்வோம்
இன்னைக்கு இந்திய தகவல் தொழில்நுட்ப கழகத்துல (IIIT) பள்ளி மாணவர்களுக்கான ஒரு வார ரோபோடிக்ஸ், IoT, AI பயிற்சி வழங்கப்படு அதன் நிறைவு விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு வந்தது. நெருங்கிய நபர் அழைப்பு என்பதால் போகவேண்டிய கட்டாயம். பள்ளி மாணவர்கள் என்றதும்
எப்படியும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று யோசித்து சொன்றால் மொத்தம் ஐந்து அரசுப்பள்ளி மாணவர்கள் (25 பேர்) இரண்டு தனியார் பள்ளி மாணவர்கள் (7 பேர்) என எங்கு திரும்பினாலும் அரசுப்பள்ளி மாணவர்கள். மாணவர்கள் அனைவரும் கலந்து A-E வரை ஐந்து குழுக்களாகப்பட்டனர்
இவர்களுக்கு ஒருவாரம் பயிற்சி தரப்பட்டு இன்று அவர்களுக்கு மதிப்பீடும் வைக்கப்பட்டது.இந்த நிகழ்வு குறித்து இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேசியபோது ,பயிற்சி தொடங்கிய போது நான் தமிழில் சொல்லி தர்ரேன் என்று சொன்னப்ப அரசு பள்ளி மாணவர்கள் பதில் no sir we are comfortable in English
தேசிய கல்விக் கொள்கையின் முக்கியமான தவறான Academic bank of credits நடைமுறை படுத்த சுற்றறிக்கை வந்துடுச்சு. நல்லா விவரமா பேசுற பலரும் இது நல்லாத்தானே இருக்குனு சொல்றாங்க. ஐயா புண்ணியவான்களே இனி படிப்பு காசு இருக்கவனுக்கு மட்டும்தான். இப்ப வரை 300+ கல்வி நிறுவனங்கள் இதில்
பதிவு பன்னிடுச்சு.இப்படியே போனா ABC ல பதிவு பன்ன கல்லூரிகளுக்கு மட்டுமே மானியம் னு UGC சொல்லிடுவான். இது நேரடியாக மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசு தரும் நெருக்கடி. கட்டிடமே இல்லாத ஜியோ யுனிவர்சிட்டி வைக்குது தான் இனி ஃபீஸ். ஏன்டா இப்படி எங்க வயத்துலயே அடிக்குறீங்க
இதுல என்ன பிரச்சினை. 1. 50% கிரிடிட் ஒரு காலேஜ்ல முடிச்சுட்டு மீதி இருக்க 50% எங்க வேணா ABC ல இருக்க காலேஜ்ல படிச்சுக்கலாம். பீகார் ல எதாவது குப்பை காலேஜ்ல காசு கட்டி பாதி படிச்சுட்டு இங்க நம்ம ஊர் யுனிவர்சிட்டி ல இருக்க வேக்கன்ட் சீட்ல வந்து சேந்து மீதி படிப்பான்
இந்த #cute தேர்வு தேவையில்லாத ஆணி. தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகமும் முதுகலை படிப்புகளை பெரும்பாலும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் யூஜி சேர்க்கை மொத்தமும் மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். உதாரணமாக ஒரு மாணவர் கணிதம் 80%, இயற்பியல் 76%
வேதியியல் 84% எடுத்து இயற்பியல் படிக்க விரும்பி அதில் இடம் இருக்கும் பட்சத்தில் இயற்பியல் படிக்கலாம், இல்லாவிட்டால் வேதியியல் அல்லது கணிதம் எதில் சீட் இருக்கோ அதில் விருப்பம் கேட்பார்கள். ஆனால் இதே ஒரு மாணவர் மொத்தமாக ஆங்கிலம் படிக்க விரும்பினால் அவரின் ஆங்கில மார்க்
அடிப்படையிலும் மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் சீட் வழங்கப்படும். ஆனால் இந்த cute தேர்வில் இப்போது தரப்பட்ட சிலபஸ் CUCET ல் அறிவியல் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிலபஸ் முழுக்கவே சிபிஎஸ்இ திட்டம் சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வேதியியல் படிக்க , part A, part b