அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.
அந்த சக்திக்கு அடையாளம் தருவதற்காக அதற்கு பெயர்களும் வடிவமும் தரப்பட்டன.
உதாரணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன.
இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார்.
இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது.
மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப் படுகிறது.
ம்ருத்யு என்றால் அஞ்ஞானம். அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்சிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம்.
இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது.
எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார்.
பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள்.
அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும்.
இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.
யஜாமஹே - சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் - சுவாதிஷ்டானம்.
ஸுகந்திம் - விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் - மணிபூரகம்.
புஷ்டிவர்த்தனம் - வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் - அநாஹதம்.
உருவாருகமிவ - உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் - விசுத்தி.
பந்தனாத் - மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் - ஆக்ஞா.
ம்ருத்யோர்முக்ஷீய - பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் - சகஸ்ராரம்.
மாஅம்ருதாத் - ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் - சகஸ்ராரம்.
சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம்.
இந்த மந்திரங்களை கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட உச்சரிக்கலாம். பலன் நிச்சயம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் மனமும் வசப்படுவதால் எளிதில் காரியம் சித்தியாகும்.
2. குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3.குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்.
4. குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5. ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6. குருவுக்கு மிக அருகில் அமர கூடாது.
7. குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8. குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
மகாபலி, பிரகலாதனனின் பேரன். 100 அசுவ மேத யாகங்கள் செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களை செய்யத் தொடங்கினான்.
அவ்வாறு அவன் யாகம் செய்துமுடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகி விடும் என்பதால் தேவர்கள் அனைவரும் மகா விஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
அதற்கு மகாவிஷ்ணு, "மகாபலி முறைப்படி யாகம் செய்கிறான். மேலும், அவனுக்கு குருவின் பரிபூரண அனுக்கிரகம் உள்ளது.
அவன் எப்போது அவன் குருவால் சபிக்கப் படுகிறானோ அப்போதே அவனை என்னால் வெல்ல முடியும்” என்று கூறினார்.
கல்வியில் முன்னேற நம்முடைய முயற்சி இருந்தாலும், மறுபக்கம் இறைவனின் திருவருள் நிச்சயம் வேண்டும்.
அதற்கு திருமாலின் அவதாரங்களில் ஒன்றான ஹயக்ரீவரை வழிபட்டால் நிச்சயம் நல்ல பயன் கிட்டும்.
காரணம், பிரம்மதேவனுக்கு வேதத்தை உபதேசித்து, அவருடைய மனைவியான கல்விக்கடவுள் சரஸ்வதி தேவிக்கே குருவாக இருந்தவர் ஹயக்ரீவர் என வைணவப் பெரியோர்கள் கூறுவர்.
மனித உடல் அமைப்பில், வெள்ளை குதிரை முகத்துடன் திருமால் எடுத்த இந்த அவதாரம் தசாவதாரங்களுக்கு முற்பட்டது.
இதை பூர்ணாவதாரம் எனவும் அழைப்பார்கள். அதாவது திருமால் தானே தன்னுடைய முழு சக்தியுடன் உலகில் அவதரித்து தர்மத்தைக் காக்கும் பணியை திறம்படச் செய்து முடித்தல் என்பதாகும். இந்த அவதாரத்தின் சிறப்பைப் பற்றி திருமொழியில்.