சனீஸ்வரர் சன்னதிக்கு செல்பவர்கள் அவரது முகத்தைப் பார்க்கக் கூடாது. திருவடியையே தரிசிக்க வேண்டும் என்று சொல்வர்.
நவக்கிரங்களை அடக்கி அவற்றை தன் சிம்மாசன படிக்கட்டுகளாக பயன்படுத்தினான் இராவணன்.
அப்போது சனீஸ்வரர், தன் உக்கிரப் பார்வையால் ராவணனைப் பார்க்க அவனுக்கு சனி பிடித்தது. அதன் பின் இராமாயணப் போரில் அவன் இறந்தான் என்பது கதை.
இப்படி சனி என்றாலே ஒருவித பயம் இருக்க திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள இலத்தூர் மதுநாத சுவாமி கோவிலில் சனீஸ்வரர் சன்னதியைச் சுற்றி வந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.
நடராஜப் பெருமானுக்கு ஓர் ஆண்டில் நடைபெறும் ஆறு அபிஷேக தினங்களுள் ஒன்றான ஆவணி சதுர்த்தசி திதி இன்று.
சிறப்பு : வளர்பிறை சுபமுகூர்த்த நாள், கதலி கவுரி விரதம், அனந்த விரதம், நடராஜர் அபிேஷக நாள்.
இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சந்நிதியில் எழுந்தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதிகம்.
சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். கூத்தன், சபேசன், அம்பலத்தான் என்று தன் ஆடல் கோலத்தினால் போற்றப்படுவர் நடராஜப் பெருமான். இந்தப் பிரபஞ்சத்தின் இயங்கியலை விளக்கும் தத்துவரூபமாகத் திகழும் நடராஜரின் திருமேனி ஐந்தொழில்களையும் புரிதலை விளக்குகிறது.
அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.
இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அட்சரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட அட்சரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது.