உலகில் மனிதனுக்குத்தான் கடவுள் கற்பிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய மற்ற ஜீவராசிகளுக்கு புல், பூண்டு தாவரங்களுக்கும் கடவுள் என்கிற உணர்ச்சியே கிடையாது. ஆனால் அவையெல்லாம் மனிதர்களைப் போலவே தோன்றி வாழ்ந்து செயல்பட்டு அழிந்து மாய்ந்து போகின்றன.
(1)
இதில் எவ்வித மாறுதலும் காண முடிவதில்லை.
பிறவியில் இயற்கையாய் உள்ள பேதங்களின் சிறு மாறுதல்களின் அடிப்படையில் பேதங்களின் அடிப்படையிலும் பேதங்களைக் காண்பதற்கில்லை. ஜீவ நூல் - ஜீவ ஆராய்ச்சி வல்லுநர்கள் ஆதியில் அதாவது, உலகம் தோன்றிய காலத்தில் மனிதனும் மற்ற மிருக
(2)
ஜீவப்பிராணிகளும் ஒன்றுபோலவேதான் நடந்து வந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர்.
மனிதனுக்கு மற்ற ஜீவராசிகளைவிட அறிவுத் துறையில் சிறிது மாற்றம் இயற்கையில் இருந்துவருகிற காரணத்தால் மனிதனுக்கு ஆசைப்பெருக்கெடுத்து - வாழ்க்கையின் பெருங்கவலைக்கு ஆளாகி,
(3)
அதனால் துக்க சுகத்திற்கும் ஆளாகி உழலுகிறான். ஆசையும், மடமையும் சேர்ந்தே மனிதனுக்கு கடவுள் கற்பிக்கப்பட்டு - புகுத்தப்பட்டு அறிவின் பயனைக் கெடுத்துக் கொண்டு கவலைக்கும் துக்க சுகத்திற்கும் ஆளாகி அழிகிறான்.
மனித சமுதாயத்தில் கடவுள் கற்பனை
(4)
புகுத்தப்படாமலிருந்தால் மனிதர் நிலைமை இன்று வேறாக இருந்திருக்கும். அதாவது கவலையற்ற, துக்கமற்ற, வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தியிருப்பான். இன்று கவலையும் துக்கமும் இல்லாத மனிதனைக் காண்பதே அரிதாக இருக்கிறது.
எந்த உயர்நிலையில் இருப்பவனுக்கும் கவலையும் துக்கமும்
(5)
குடிகொண்டிருக்கிறது. கடவுள் எண்ணத்தை ஒழித்தவர்களுக்குக் கடவுள் இல்லை. எல்லாம் இயற்கை என எண்ணியிருப்பவர்களுக்கு துக்கம் கவலை இல்லாமலிருக்கலாம். அப்படிப்பட்டவர்களைத்தான் ஞானிகள் முற்றுந்துறந்த மெய்ஞ் ஞானிகள் என்று சொல்லுவார்கள். அந்த நிலையை மனிதன் எய்துவது எளிதல்ல.
(6)
மோட்சம் என்ற சொல்லுக்கும், முக்தி என்ற சொல்லுக்கும் உண்மையான கருத்து (பொருள்) கவலையற்ற தன்மை; துக்கமற்ற தன்மை என்றுதான் பொருள். மோட்சம் (அல்லது முக்தி) - துக்க நாசம்; இந்த நிலை கடவுள் (ஒருவர் அல்லது பலர்) இருக்கிறார் எனும் எண்ணமுடையவனுக்கு என்றுமே தோன்றாது.
(7)
எவ்வளக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் பதிகிறதோ - உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தம் துக்கமும் கவலையுங் கொண்டவனாகத்தான் இருப்பான்; பேராசைக்காரனாய்த் தான் இருப்பான். பொதுவாகவே இன்றும் பார்ப்போமானால், கடவுள் பக்தன்- கடவுளை வணங்குகிறவன் அவன் முட்டாளானாலும்
(8)
அறிவாளி ஆனாலும் எதற்காக வணங்குகிறான்? ஒரு வேண்டுகோளின் மீது -அல்லது எதையாகிலும் எதிர்பார்த்துத்தானே!
ஏதாவது ஒன்றை வேண்டித்தானே! பக்தி, வணக்கம், பூசை, தொழுகை, பிரார்த்தனை எல்லாம் இதன் அடிப்படைதானே! மனிதனிடம் கடவுள் நம்பிக்கை, கடவுள் பக்தி இருப்பதெல்லாம் ஆசை காரணம்தானே ஒழிய,
(9)
மனிதனை ஒழுக்க முடையவர்களாக்கவோ, மற்றவர்களுக்கு பயன்படும்படிச் செய்யவோ அல்ல.
தந்தை பெரியார் - நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-17-18
(10)
தன் வாழ்நாள் முழுவதும் சாதி ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, சுயமரியாதை சிந்தனை என மக்கள் பணிக்கே தன்னை அர்ப்பணித்த பகுத்தறிவு பகலவன் "தந்தை பெரியார்" அவர்களின் பிறந்த நாளில் சமூகநீதியை நோக்கி அவர் வழியில் பயணிக்க உறுதியேற்போம்.
(11)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புராணக்கதைகள் முற்றிலும் கடவுள்கள் சார்ந்து எழுதப்பட்டுள்ளது, அவை புனிதமானது, அதை கொச்சை படுத்தக் கூடாது என பலர் சொல்லலாம். யாரும் மெனக்கெட்டு அவற்றை கொச்சைப் படுத்த வேண்டிய அவசியமில்லை, காரணம் அதில் எழுதப்பட்டுள்ள கதைகள் நாம் சிந்திப்பதை விட மிகவும் கொச்சையாகத் தான் உள்ளது.
(1)
அதற்கு ஒரு சிறு உதாரணம் இந்திரனின் கதை. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள் இருக்கிறது என்ற கதை பலருக்கும் தெரியும். ஆனால், அது கண்கள் அல்ல பெண்குறிகள் என எத்தனை பேருக்கு தெரியும்!?
கவுதம முனிவரால் இந்திரனுக்கு அளிக்கப்பட்ட சாபத்தின் பலன் தான்,
(2)
இந்திரனின் உடல் முழுக்க ஆயிரம் பெண் குறிகள் தோன்ற காரணம் என "சிவமகா புராணத்தில்" சொல்லப்பட்டுள்ளது.
சிவமகா புராணத்தில் சொல்லப்பட்டுள்ள இந்திரனின் சாபக்கதையை முழுமையாக கீழே உள்ள படத்தில் படித்துப்பாருங்கள். 👇🏽
முன்பு ஒரு காலத்தில் அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொண்டான், அந்த மோகத்தால் அவர்களை எப்படி அனுபவிப்பது என்று மோக அக்னியால் மிகவும் வாடினான்.
(1)
இதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி சுவாஹா தேவி, தன் கற்பின் சக்தியால் அந்த முனி பத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாக தானே வடிவம் எடுத்து தன் கணவனை கட்டித்தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள்.
(2)
அவ்வாறு அவள் ஆறு ரிஷி பத்தினிகளின் உருவங்களையும் எடுத்தாள், ஆனால் அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை. அருந்ததியின் உருவம் தன்னால் எடுக்க முடியாததை நினைத்து சுவாஹா தேவி மிகவும் வியப்படைந்தாள்.
ஓணம் எனக் கேட்டவுடன் அனைவர் மனதிலும் அது தொடர்பாக நினைவுக்கு வரும் கதை "கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும்;
(1)
அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு
(2)
அருள் செய்ய வேண்டும் என்று கோரியதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார்" என்ற கதை தான்.
ஓணப் பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை தங்களைக் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்கும் ஒரு திருநாளாக கேரள மக்கள் கொண்டாடுகின்றனர் என நம்பப்படுகிறது. இங்கு, நாம் கவனிக்க வேண்டிய
பெரும் கூட்டம் ஏற்றுக் கொள்ளாத பேசத் தயங்கும் உட்பொருட்களை சமூகக் கூறுகளை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசும் படம்.
சாதி மதம் இனம் மொழி பாலினம் கடந்தது காதல், ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமெனில் "LOVE IS LOVE"என்பதை சொல்வதே @beemji அவர்களின் "நட்சத்திரம் நகர்கிறது" (1)
முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை பேசப்பட்ட அத்தனை வார்த்தைகளிலும் அரசியல், இசையிலும் வரிகளிலும் மெய்சிலிர்க்க வைத்த அதே நேரத்தில் சிந்திக்க மறந்து போன அல்லது பொதுப் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட பலவற்றையும் பேசுகிறது.
(2)
இசைஞானியை வைத்து செய்யப்படும் அரசியல், அவரின் இசை மீது வைக்கப்படும் வெறுப்பு பிரச்சாரத்தை பட்டவர்த்தனமாக பேசி பொதுபுத்தியை கேள்வி கேட்கிற ரெனே மாற்றத்தை விரும்பும் பலரின் பிரதிநிதியாக இருக்கிறாள்.
(3)