அனைவருக்கும் வணக்கம், பல பதிவுகளில் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவமுறையினால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். கடந்த வாரம் 14 வயது சிறுவன் , காய்ச்சல் மற்றும் வலது தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனை வந்திருந்தார்.1/7
இரண்டு வாரம் முன்பு கிரிக்கெட் பந்து மூலம் தொடையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள பாரம்பரிய வைத்தியரிடம் சென்று எண்ணெய் மஸாஜ் மற்றும் மஞ்சள் பத்து போட்டுக்கொண்டுள்ளார் . அதன் பின்பு 12 நாட்கள் ஆகியும் வீக்கம் குறையவில்லை.2/7
2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் சோர்வு ஏற்பட்டதால் , அவரது தந்தை மருத்துவமனை அழைத்து வந்தார், தொடை பகுதியில் வீக்கம் அதிகமாக இருந்தது, தொடை மிகவும் சூடாக இருந்தது (inflammation), இரத்த பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் 20,000 மேல் இருந்தது.3/7
USG ஸ்கேனில் தொடை பகுதியில் 500-600ml வரை சீழ் கோர்த்து இருப்பது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம். தொடை பகுதியின் வெளிப்புறத்தில் திறக்கும் போது - ஆறு போல் சீழ் வடிந்தது - கிட்டத்தட்ட 700ml வரை சீழ் இருந்தது,ஒரு சில தசை பகுதி அழுகி இருந்தது.4/7
அழுகிய திசுக்கள் அகற்றப்பட்டது. அடுத்த நாளே சிறுவனுக்கு வலி மிகவும் குறைந்தது , காய்ச்சல் இல்லை, இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அளவு சரியானது. இரண்டாம் நாள் மீண்டும் காயத்தை ஆய்வு செய்து பார்த்தோம். 40-50 ml வரை நீர் மட்டும் இருந்தது, சீழ் இல்லை. காயம் ஆரோக்கியமாக இருந்தது.5/7
அடிபட்டு ஏற்படும் வீக்கத்திற்கு எண்ணெய் மஸாஜ் செய்வதால் பயன் இல்லை, இதனால் தசைகள் பாதிக்க தான் அதிக வாய்ப்புள்ளது . பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஓய்வு, ஐஸ் கட்டிகள் வைத்து ஒத்தடம் , வீக்கம் அதிகரிக்காமல் இருக்க crepe bandage , உள்ளிட்ட முதற்கட்ட சிகிச்சை செய்ய வேண்டும்.6/7
தேவை இருந்தால் antibiotic மருந்துகள் எடுக்க வேண்டும், இப்படி செய்ய தவறியதால் தான் இப்படி சீழ் கோர்த்துள்ளது. சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு ஏற்றவாறு முறையான மருத்துவரை அணுகுங்கள். 7/7 #MedTwitter#orthotwitter@DrVinoth_ortho
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனைவருக்கும் வணக்கம் , osteomyelitis - எலும்பில் ஏற்படும் சீழ் பிரச்சனை, எலும்பு மருத்துவர்களின் சிம்ம சொப்பனம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் ஒரு முறை சீழ் எலும்புகளுக்கு சென்று விட்டால், வாழ் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் திரும்ப ஏற்படலாம். 1/9
இதை கட்டுப்படுத்த தான் முடியும் .
6 மாதம் முன்பு நான் பார்த்த ஒரு நோயாளி எலும்பு முறிவு ஏற்பட்டு ,35 cm மேல் தொடையில் வெட்டு காயத்துடன் வந்திருந்தார். பிரச்சனை ஏற்பட்டு வேறொரு மருத்துவமனையில் இருந்து 7 நாட்கள் கழித்து இங்கு refer செய்யப்பட்டார்.2/9
நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம், Debridement செய்து , வெளிப்புற ரோட் (External fixator) பொருத்தினோம் . பிரத்யேகமான antibiotic மருந்துகள் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் தொடையில் இருந்து சீழ் வடிந்தது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.3/9