Ullangaiyil Maruthuvam Profile picture
1 லட்சம்+ நண்பர்களை கொண்ட யூடியூப் சேனல். மரு. வினோத்குமார் . எலும்புமுறிவு & மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் , CNS மருத்துவமனை, அவினாசி, 7530055886
Dec 17, 2022 10 tweets 5 min read
அனைவருக்கும் வணக்கம் , கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பின்பு பலருக்கும், பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதை Post COVID syndrome/ Long COVID என்று அழைப்போம்.இதற்கு  எலும்பியல் துறை மட்டும் விதிவிலக்கில்லை. *1/10 @DrVinoth_ortho #MedTwitter #COVID19 32 வயது ஆண், வலது இடுப்பில் 9 மாதமாக லேசாக வலி இருந்தது , ஆனால் கடந்த 3 வாரம் வலி மிகவும் அதிகமாக உள்ளது, கால்களை மடக்கி கீழ உட்கார முடியவில்லை என்றார்.

பரிசோதனை செய்தததில் இடுப்பு எலும்பு மூட்டு சிறிது தூரம் தான் அசைக்க முடிந்தது. *2/10
Nov 5, 2022 8 tweets 3 min read
அனைவருக்கும் வணக்கம், ஒருவயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொடை பகுதியில் தான் தடுப்பூசிகள் போடப்படும், அப்போது ஒரு சில சமயம் அரிதிலும் அரிதாக எதிர்வினைகள் ஏற்படலாம். @DrVinoth_ortho #orthotwitter #MedTwitter *1/8 கடந்த வாரம், பிறந்து 18 நாட்கள் ஆன குழந்தையை ,அவரது பெற்றோர்கள் 15 நாட்கள் தொடர் காய்ச்சல் மற்றும் இடது தொடையில் ஏற்ப்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனை அழைத்து வந்தனர் .*2/8
Sep 17, 2022 7 tweets 3 min read
அனைவருக்கும் வணக்கம், பல பதிவுகளில் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவமுறையினால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். கடந்த வாரம் 14 வயது சிறுவன் , காய்ச்சல் மற்றும் வலது தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனை வந்திருந்தார்.1/7 இரண்டு வாரம் முன்பு கிரிக்கெட் பந்து மூலம் தொடையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள பாரம்பரிய வைத்தியரிடம் சென்று எண்ணெய் மஸாஜ் மற்றும் மஞ்சள் பத்து போட்டுக்கொண்டுள்ளார் . அதன் பின்பு 12 நாட்கள் ஆகியும் வீக்கம் குறையவில்லை.2/7
Jul 13, 2022 9 tweets 5 min read
அனைவருக்கும் வணக்கம் , osteomyelitis - எலும்பில் ஏற்படும் சீழ் பிரச்சனை, எலும்பு மருத்துவர்களின் சிம்ம சொப்பனம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் ஒரு முறை சீழ் எலும்புகளுக்கு சென்று விட்டால், வாழ் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் திரும்ப ஏற்படலாம். 1/9 இதை கட்டுப்படுத்த தான் முடியும் .
6 மாதம் முன்பு நான் பார்த்த ஒரு நோயாளி எலும்பு முறிவு ஏற்பட்டு ,35 cm மேல் தொடையில் வெட்டு காயத்துடன் வந்திருந்தார். பிரச்சனை ஏற்பட்டு வேறொரு மருத்துவமனையில் இருந்து 7 நாட்கள் கழித்து இங்கு refer செய்யப்பட்டார்.2/9