அதாவது தேய்பிறை அஷ்டமியில், அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்களை வழங்கி வருகின்றனர் என்பது ஐதீகம்.
பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.
பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும்.
இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்.
பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இழந்த பொருட்களை மீண்டும் பெற, பைரவரின் சன்னதி முன்னால் 27 மிளகை வெள்ளை துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி 27 நாட்கள் வழிபட்டால் இழந்த பொருட்களும், சொத்துக்களும் திரும்ப கிடைக்கும்.
குழந்தை செல்வம் பெற, திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளி பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து, ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும்.
சனீஸ்வரரின் குரு பைரவர் என்பதால், பைரவரை வணங்கினால், சனிபகவான் மகிழ்ந்து நமக்கு அதிக துன்பங்களை தரமாட்டார்.
எனவே, பைரவரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் இன்னல்கள் மற்றும் தோஷங்கள் யாவும் நீங்கும்.
தடைபட்ட திருமணம் நடக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும் ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பைரவரை வணங்க வேண்டும்.
அதனால் உடனே நன்மை உண்டாகும். பில்லி, சூனியம் மற்றும் ஏவல் போன்றவை அகலும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?
புராட்டாசி மாதம் பீடை மாதமா???
பீடுடை மாதம் மருவி பீடை மாதமாகி விட்டது பீடுடை என்றால் பெருமாளுக்கு உகந்த மாதம் என பொருள்
பெருமாளை சேவித்து புலால் உணவை தவிற்த்து தாம்பத்ய உறவு கொள்ளாமல் இறை சேவை செய்து புராட்டாசி அமாவாசையான மஹளய பட்சத்தில் முன்னோர்களுக்கு
திதி தர்பணம் கொடுத்து பித்ருக்களின் ஆசிகளை பெறவேண்டும் என்பதற்காகவே இம்மாதத்தை சிறப்பு மாதமாக முன்னோர்கள் வழிநடத்தி இருக்கிறார்கள்
இம்மாத சிறப்புகளை பார்ப்போம்
புரட்டாசி மாதத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும். அதே சமயம் மழைக்காலமும் தொடங்கக் கூடிய நேரம் இது. வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த சீதோஷண நிலை, வெயில் காலத்தை விட மிக மிக மோசமானது.
🌹 🌿 திருமாலின் பத்து சயன தலங்கள் பற்றிய பதிவுகள் :
🌹 🌿 1. ஜல சயனம் :
107-வது திவ்ய தேசமான ஸ்ரீவைகுண்டம் எனும் திருப்பாற்கடலில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலங்களில் மக்கள் தம் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத ஜல சயனம்.
🌹 🌿 2. தல சயனம்:
63 வது திவ்ய தேசமான மாமல்லபுரம் என்னும் மல்லையில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான தல சயனம் . இங்கு திருமால் வலதுகரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, தரையில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
🌹 🌿 3. புஜங்க சயனம் (சேஷசயனம்):
முதலாம் திவ்ய தேசமான ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம் விண்ணகரத்தில் அமைந்துள்ளது, திருமால் சயனக்கோலமான புஜங்க சயனம் (சேஷசயனம்). இங்கு திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேடன் மீது சயனித்து காட்சி தருகிறார்.
புரட்டாசி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது - ஆன்மீக ரகசியங்கள்..!
புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கும் தெய்வீக வழிபாட்டிற்கும் உரிய மாதம் என்பதால் இந்து திருமணங்கள் நடைபெறுவதில்லை.
அதே போல இந்த மாதத்தில் வீடு கட்ட வாஸ்து பூஜையோ, கிரகப்பிரவேசமோ செய்ய மாட்டார்கள்.
பெருமாளுக்கு உகந்த மாதம், 15 நாட்கள் மகாளய பட்சம் முன்னோர்களுக்கு உகந்தது என்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் செய்வதை தவிர்த்து விட்டனர்.
எந்த சுபகாரியங்களையும் வைகாசி மற்றும் கார்த்திகை மாதத்தில் செய்யலாம். அது தடையின்றி மங்களகரமாக நடைபெறும். ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது. புண்ணியம் தரும் புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டிற்கு உரியது.