#திருவரங்கம்#தேயும்_பாதணிகள் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள, பெருமாள் அணிந்து கொண்டிருக்கும் காலணிகள் தேய்மானத்திற்கு பின் ஸ்ரீரங்கம் #திருக்கொட்டாரம் எனும் இடத்தில் தூணில் மாட்டி வைக்கப் பட்டிருப்பதை அங்கு சென்றவர்கள் கண்டிருக்கலாம். இந்த காலணிகளைச் செய்யவென்றே காலம் காலமாக
தனித் தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் இரண்டு ஊர்களில் தனித்தனியாக செய்வார்கள். இரண்டுமே ஒன்று போலவே இருக்கும் என்பது அதிசயம். 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த செருப்புகளை அரங்கனின் திருப்பாதத்தில் இருந்து கழற்றுவார்கள். அவை பயன்படுத்தப் பட்டவை போல தேய்மானம் கொண்டு
இருக்கும் என்பதும் அதிசயம். பெருமாள் முற்காலத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களுடன் பேசுவதும் கட்டளை இடுவதும் நாம் கேள்விப் பட்ட விக்ஷயம். தற்பொழுது கலிகாலத்தில் இவைகள் நடக்குமா என்ற ஐயம் இருப்போர்க்கு கலியுகத்தில் அரங்கன் பாமரர்கள் கனவில் தோன்றி அருள்பாலிக்கும் அற்புத சம்பவம்
இன்னும் நடக்கிறது என்பதை உணரலாம். தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தை நிரூபிக்கும் வகையில் ஒரு கைங்கரியத்தை ஏற்கிறார். (திருமாலை – முப்பத்து ஒன்பதாம் பாசுரம்)
அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்
புதிய பாதணிகள் செய்ய, தஞ்சாவூர்
மாவட்டத்தில் பிரத்தியேகமாக இருக்கிறார்கள். வலது பாதணி ஒருவரிடமும், இடது பாதணி
மற்றொருவரிடம், செய்ய கொடுக்கப் படும். இருவரும், ஒரே ஊரில் இல்லாமல், வெவ்வேறு ஊர்களில்
இருப்பர்.
பாதணிகள் இரண்டையும் தனித்தனியாக செய்வார்கள். 48 நாட்கள் உணவு கட்டுப்பாடு இருந்து, விரதம் மேற்கொண்டு பாதணிகளை செய்வார்கள். இவைகளை ஆறு
மாதத்திற்கு ஒரு முறை, செய்ய
வேண்டும். இவர்கள் இந்த
பாதணிகளை கொண்டு வந்து
அரங்கனுக்கு சமர்ப்பிக்கும்
போது, கோயில் மரியாதையை செய்வார்கள். பழைய
பாதணிகளை அரங்கன் திருவடிகளை விட்டு கழட்டி விட்டு, புதிய பாதணிகளை மாற்றி விடுவார்கள். இந்த காலணிகள் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகிய காலணி செய்து வாழும் மக்களின் சமர்ப்பணம். அடுத்த முறை அரங்கநாதன் கோயிலுக்கு செல்லும்போது 4ஆம் திருச்சுற்றில் (ஆரியப்படாள் வாசலுக்கு முன்னர் இடது
பறத்தில்) இருக்கக்கூடிய திருக்கொட்டாரத்திர்கு செல்லவும். இங்கு படத்தில் இருக்கும் திருபாதரக்க்ஷையை காணலாம்.
என்ன பக்தி இருந்தால் இந்த பாகவதருக்கு பெருமாள் கடாக்க்ஷம் அருளியிருப்பர். இந்த காணொளியில் இருக்கக்கூடிய பக்தருக்கு அரங்கன் சொப்பனத்தில் இட்ட கட்டளை:
1. பாதரக்க்ஷை அளவு 2. அதன் வர்ணம் 3. செலுத்தும் நாள் 4. கோவிலுக்கு வரவேண்டிய வாசல்
மேற்கு சித்திரை வீதிக்கும் மேற்கு உத்திரை வீதிக்கும் இடையில் இருக்கும் கோபுரத்தின் பெயர் சக்லியன் கோட்டை வாசல். பெருமாள் திருபாதரக்க்ஷை இந்த வழியாகத்தான் எடுத்து வரும்படி ஆணையிட்டான். ஏப்ரல் 2017
ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் சுமார் 78 ஆண்டுகளுக்கு பிறகு அரங்கன் கனவில் வந்து சொல்லி இதை செய்து கொண்டு வந்தாதாக சொல்கிறார்கள்.
இதில் மற்றொரு அதிசயம் உண்டு. சில சமயங்களில் பெருமாள் தனது இரு பாதங்கள் அளவை இருவேறு பக்தர்களுக்கு அளித்து இருவரும் ஓரே நாளில் வந்து சமர்ப்பிக்கவும்
செய்வார். நாம் ஒவ்வொருவரும் அரங்கனின் அருள் மற்றும் கருணை மழையை அறிந்து உணர தூய பக்தி மட்டுமே போதும் என்றும் அதற்குச் சாதி பேதம் இல்லை என உணர்த்தும் சம்பவம் இது
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#MahaPeriyava This narration is about the experience of my grandfather with Periva. It was my father who revealed it to me.
A brief background: My grandfather Dr. Narayanswamy was a physician who practised with the great medical practitioner Dr. Rangachary (in whose memory is
Ranga Road in Chennai) during 1920s. At that time, my grandfather was living in Mylapore close to the Kapali Temple. My father was then a student of P.S. high school. My father used to recall that Dr. Rangachary used to take my grandpa in his Rolls Royce car to the government's
general hospital. Although my grandfather was an allopathic doctor, he was proficient in homeopathy too and saved many critically sick patients through homeopathy. In the years he lived in Mylapore, my grandfather had very little faith in religious rituals. He never performed
#மகாபெரியவா
'பிற்காலத்தில் த்ரோணருக்கு தரித்ர காலம் ஸம்பவிக்கிறது. அவர் அப்போது அரசாட்சிக்கு வந்துவிட்ட த்ருபதனிடம், 'நம் பழைய க்ளாஸ்-மேட் ஆச்சே!’ என்ற நினைப்பில், உரிமையுடன் உதவி கேட்டுப் போகிறார். அவன் அதிகார போதையில், 'இந்தப் பஞ்சாங்கக்காரப் பிச்சு நம்மோடு friendship
கொண்டாடவா?’ என்று நினைத்து, அவரை அவமரியாதை பண்ணி விடுகிறான். இதிலே, அவனுக்கு எதிரடி தர வேண்டுமென்று த்ரோணருக்குத் தோன்றி, அவர் பிற்காலத்தில் அர்ஜுனனைக் கொண்டு த்ருபதனைச் சிறைப் பிடிக்கிறார். அப்புறம், போனால் போகிறதென்று பாதி ராஜ்ஜியத்தைக் கொடுத்து அனுப்பி விடுகிறார். இந்த மான
பங்கத்தில் அவனுக்கு வர்மம் வளர்ந்து, த்ரோணரை வதம் பண்ணுவதற்கென்றே ஒரு பிள்ளையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று யாகம் பண்ணுகிறான். யாகாக்னியில் இருந்து த்ருஷ்டத்யும்னன் உண்டாகிறான். த்ரௌபதியும் அப்போது உத்பவித்தவள்தான். பிற்காலத்தில் அர்ஜுனன் ஸ்வயம்வரப் போட்டியில் ஜயித்து இவளைக்
இன்று #மகாளய_அமாவாசை பித்ருகளுக்கு திதி கொடுக்க வேண்டிய முக்கிய தினம். #பித்ருகள் யார், அவர்களுக்கு திதி கொடுப்பதால் என்ன நன்மை என்பதை தெரிந்து கொள்வோம். வாழும் காலத்தில் நம் பெற்றோர் நெருங்கிய சொந்தங்கள் நம்மை காப்பாற்றுகிறார்கள், உதவுகிறார்கள். அவர்கள் இல்லை என்றாலோ அவர்களால்
உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்படலாம். இறைவன் மட்டுமே எக்காலத்திலும் எந்த இடத்திலும் நம்மை ரட்சிக்கிறார். இறைவனுக்கு அடுத்து சுமார் 86 லட்சம் யோஜனை (1 யோஜனை = 12 Kms) தூரத்திலிருந்து ஒரு கூட்டம் நம்மை ரக்ஷிக்கிறது. இவர்களே பித்ருக்கள். இவர்கள் வசிப்பிடம் பித்ரு லோகம். (பூமிக்கும்
சொர்கத்துக்கும் இடையே உள்ளது.) இந்தக் கூட்டத்திற்கு இது பெரிய தூரம் இல்லை. அதனால் அமாவாசை, தர்ப்பணம், சிராத்தம் என்றால் நம்மை நோக்கி மகிழ்ச்சியுடன் வருகின்றனர். #ஆத்மா 64 உறுப்புகள் கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று கர்மாவை கடக்கிறது. ஆத்மா சரீரத்தை
#மனுஸ்ம்ரிதி#ஆ_ராசாவின்_இந்துமதவெறுப்பு_பேச்சு
மனு ஸ்ம்ரிதி, நால்வகை வர்ணங்கள் பற்றி சரியாக தெரிந்து கொள்ள இப்பதிவு. முதலில் மனு ஸ்ம்ரிதி பழக்கத்தில் இல்லாத ஒரு கோட்பாடு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் இல்லாத போது எப்படி வாழ்ந்தோமோ அப்படி தான் இன்றும் வாழ்கிறோமா?
அப்போது எண்ணெய் விளக்கொளியில் தான் படித்தோம் என்று இருந்திருக்கிறது. அதனால் மின்சார விளக்கையும் போட்டு எண்ணெய் விளக்கையும் ஏற்றி வைத்துப் படிக்கிறோமா அல்லது டிவியை எண்ணெய் விளக்கொளியில் பார்க்கிறோமா? பகுத்தறிவு என்று சொல்பவர்கள் தான் பகுத்தறியாது முட்டாள்களாக இருக்கிறார்கள்
என்பதே உண்மை. ஒரு மூடன் சொல்வதை மூடர் கூடம் கேட்டு வெறுப்பை உமிழ்கிறது. பிராமணன் தலையில் இருந்தும், க்ஷத்திரியன் கைகளில் இருந்தும், வைசியன் தொடைகளில் இருந்தும், சூத்திரன் பாதத்தில் இருந்தும் பிறந்தவன் என்று மனு ஸ்ம்ரிதியில் இருப்பது உண்மை. கீதையில் கண்ணன் சொன்ன, ‘நால் வகை
#தாரகமந்திரம்_ராம ராம என்கிற வார்த்தை ஒரு பீஜ மந்திரமாகும். அது நம் மணிப்பூரக சக்கரத்துடன் தொடர்பு உடையது. இந்த மணிப்பூரக சக்கரத்தில் தான் நம்முடைய சஞ்சித கர்மங்கள் சேர்ந்திருக்கின்றன. ராம நாமத்தை தொடர்ந்து எழுத எழுத இந்த கர்மங்கள் நிச்சயமாக அழியும். தாரக மந்திரம் என்கிற ஒரு
சொற்றொடரை நாம் கேள்வி பட்டிருப்போம். இதன் அர்த்தம் "கடந்து செல்ல உதவுவது" என்பதாகும். ராம நாம மந்திரம் துயரங்களை கடந்து செல்வதற்கு ஒரு அற்புதமான தாரக மந்திரமாகும். 84 லட்சம் முறை இந்த ராமா நாமத்தை எழுதினால், இந்த ஜென்மத்திலும் இதற்கு முன் ஜென்மத்திலும் செய்த பாவங்கள் விலகி உலக
வாழ்வின் உண்மையான நோக்கத்தை உணர வழிவகுக்கும். கலியுகத்தில் நாம தர்மமே தர்மங்களுக்கு ராஜா.
பகவான் நாமம் சொல்ல குரு கூட தேவை இல்லை, பகவான் நாமமே குரு. ராம என்று நினைக்க, சொல்ல, எழுத புண்ணியம் பல செய்து இருக்க வேண்டும். நாமத்திற்காகவே படைக்கப் பட்டுள்ளோம்-நாமம் சொல்லல், கேட்டல்,
#மகாபெரியவா
“‘ப்ருஹதாரண்யகம்’ – இந்தப் பேருக்கு அர்த்தம் ‘பெரிய காடு’ என்பதாகும். அப்படிக் காடாக விரிந்த ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. உபநிஷத்துக்களில் தத்வங்கள் (ஃபிலாஸஃபி) மட்டும் அப்படியே கொட்டிக்கிடப்பதில்லை; நடுநடுவே ரசமான கதைகள் வரும். இந்தக் கதைகளில் மூலமும்
ஒரு பெரிய தத்வம் பிரகாசிக்கும். அப்படி ‘ப்ருஹதாரண்யக’த்தில் கொடையைப் பற்றி ஒரு கதை வருகிறது. தேவர்கள், அஸுரர்கள், மநுஷ்யர்கள் எல்லாருமே பிரம்மாவுக்கு ஒரே மாதிரி குழந்தைகள்தாம். பரமாத்மாவுக்கு பல தினுசான லீலை வேண்டி இருக்கிறது. நல்லது, கெட்டதுகளை மோதவிட்டு வேடிக்கை பார்க்க
வேண்டியிருக்கிறது. அதற்காக அவர் பிரம்மாவைக் கொண்டு தேவஜாதி, அஸுர ஜாதி, மநுஷ்யஜாதி முதலானவைகளை ஸ்ருஷ்டிக்கிறார். இந்த மூன்று ஜாதிக்கும் நல்லதைச் சொல்ல பிரம்மா கடமைப்பட்டு இருக்கிறார். ஒருமுறை தேவர்கள் எல்லோரும் பிரம்மாவிடம் போய், “எங்களுக்குச் சுருக்கமாக ஒரு உபதேசம் பண்ணுங்கள்”