அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.
இதை உபதேசித்தவர் - ஹயக்ரீவர்.
உபதேசம் பெற்றவர்- அகஸ்திய முனிவர்.
உபதேசம் செய்தவரும் சாதாராணமானவர் அல்ல, உபதேசம் பெற்றவரும் சாதாரணமானவர் அல்ல.
பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்துகொண்டு போனபோது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார்.
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித்துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா சகஸ்ரநாமம் உள்ளது.
அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது.
சாக்த நெறியின் தத்துவங்கள் பெரும் வீச்சோடும், காம்பீர்யத்தோடும் இதில் முன் வைக்கப்படுகின்றன.
லலிதா சகஸ்ரநாமத்திற்கு ஒரு குறிப்பிட்ட வடிவமும், அமைப்பும், நடையும் உள்ளது.
இதில் திருநாமங்கள் கோர்க்கப் பட்டிருக்கும் வரிசையே ஒரு குறிப்பிட்ட சித்தாந்தக் கருத்தை விளக்குவதாக உள்ளது.
லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.
“துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே”என்கிறார் அபிராமி பட்டர்.
சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.
லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும் .
சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்
அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின்
பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.
தேவியின் ஆயிரம் நாமங்கள்
ரகசியங்களுள் ரகசியமானது.
இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை.
இது நோய்களைப் போக்கும்.
செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும்.
(அப மிருத்யு என்றால்
அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும்.
பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.
கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி
பலதடவை நீராடுதல்,
காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல்,
க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல்,
பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல்,
தொடர்ந்து அன்னதானம் செய்தல்,
இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .
பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.
பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.
எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.
அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.
இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.
ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ,
ஸ்ரீ லலிதாம்பிகையைப் போன்று தேவதையோ,
லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.
பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.
கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.
தேவியின் அருளின்றி யாரும் இதனைப்பெறமுடியாது”
என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.
லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.
எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.
பாராயணம் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் லலிதா ஸகஸ்ரநாமத்தை கேட்கவாவது செய்யுங்கள்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து அனுஷ்டிக்கப்படும் நோன்பாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும்.ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
*தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர்.*
*அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்*
*ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர்.*
*சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார்.*
*வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.*
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.
அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.