மகன் இல்லாத வீட்டில், இறந்தவரின் மனைவி அல்லது மகள் தர்ப்பணம் செய்யலாமா?
என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
நமக்கு நன்கு தெரிந்த முன்னோரின் நினைவாகச் செய்யப்படுவதே தருப்பணம். தருப்பணம் ஏதோ இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்கு அல்ல, இறந்தவர்களை நன்றியுடன் நினைவு கூறும் முறை.
இதை தினம்தோறும் செய்யலாம்.
அது ஒரு புண்ணிய காரியம்.
அதாவது சூரியன், வருணன், அக்கினி எல்லா தேவர்களும் நீர்நிலைகளில் நின்று தண்ணீரை இரண்டு உள்ளங்கைகளிலும் எடுத்துக்கொண்டு, ‘ஆதித்யா தர்ப்பயாமி’ என ஒவ்வொரு தேவர்களுக்கும் செய்வதே தர்ப்பணம் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது தேவர்களுக்கு நீரை சமர்ப்பணம் செய்து அதன்மூலம் ஆசீர்வாதத்தை பெறுவது.
அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
இறந்தவர்களுக்காக தர்ப்பணம் செய்ய வேண்டிய தினம் ‘அம்மாவாசை, இறந்தவர்களின் திதி அன்று’ இந்த இரண்டு தினங்கள் மட்டுமே.
அதையும் கட்டாயமாக ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்.
இதைதான் தர்பணம் என்று சொல்லுவார்கள்.
இறந்தவர்களின் மகன் இந்த தர்ப்பணம் செய்யலாம். ஆனால் சில சாஸ்திரங்களில் பெண்களுக்கு தர்ப்பணம் செய்யும் உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மகன் இல்லாத போது, இறந்தவரின் மனைவிக்கு சகோதரனுக்கு முன்பாக தர்ப்பணம் செய்ய உரிமை உண்டு.
தவிர, இந்து மதத்தின் படி, இறந்த நபருடன் தொடர்புடைய எந்த நபரும் தர்ப்பணம் செய்யலாம்.
ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது, ராமர் இல்லாத நேரத்தில் சீதை அவனுடைய பிண்டனை செய்தார். பல சாஸ்திரங்களின்படி, பெண்கள் எள்ளும் தண்ணீரும் இரைந்து தர்ப்பணம் செய்யக்கூடாது என்று எந்த வேதமும் இல்லை.
ஷ்ரத்தாவைப் போலவே, இறந்தவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
மகாபாரதத்திலும் பெண்கள் தர்ப்பணம் செய்வதைக் காணலாம்.
இறந்தவர் திருமணமாகாதவராக இருந்தாலும், அவரது தாயும் சகோதரியும் கூட தர்ப்பணம் செய்யலாம்.
இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தை முறையாக செய்யப்படுவதே உத்தமம்.
இந்த நாளில் கறுப்பு எள், அரிசி உருண்டை செய்து முன்னோர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது.
இந்த வழக்கில் காகம் யமனின் தூதராக கருதப்படுகிறது. காகம் அந்த உணவை சாப்பிட்டால், முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை.
ஒருவேளை, இந்த சாஸ்திரங்களை முறையாக கடைபிடிக்காமல் விட்டால்தான் பித்ரு தோஷமும், பித்ரு சாபம் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து அனுஷ்டிக்கப்படும் நோன்பாகும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் அனுஷ்டிக்கப்படும் சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும்.ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுஷ்டிக்கப்படும் விரதம் சாரதா நவராத்திரி நோன்பாகும்.
*தைமாதம் சூரியனின் தேர் பாதை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாறும் அன்றைய நாளுக்கு "ரதசப்தமி" என்று பெயர்.*
*அன்று சூரியனை வழிபட்டால், சகல சௌபாக்கியங்கள் கிட்டும்*
*ஸ்ரீ மகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கு சங்கும், சக்கரமும் உண்டு. அதனால் வைஷ் ணவர்கள் சூரியனை "சூரியநாராயணன்" என்று போற்றுகின்றனர்.*
*சூரியன், ஒவ்வொரு பருவ காலத்திலும் ஒவ்வொரு நிறத்தில் காட்சி தருகிறார்.*
*வசந்த காலத்தில் தங்க நிறத்திலும், வெயில் காலத்தில் செண்பகப்பூ நிறத்திலும், மழைக்காலத்தில் வெண்மை நிறத்திலும், கார்காலத்தில் கருமை நிறத்திலும், முன்பனிக் காலத்தில், தாமரை நிறத்திலும், பின்பனிக் காலத்தில் சிவப்பு நிறத்திலும் விளங்குவதாக வேதங் கள் கூறுகின்றன.*
திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும்.
காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.
முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள்.
பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார்.
பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள்.
அந்நேரத்தில் ""கௌசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.