குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும்.
இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.
பெண்கள் குங்குமம் இடுவதால் மகா லட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது.
மாங்கல்யம், நெற்றி, தலைவகிடு ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது.
வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம்.
இக்குங்குமத்தை அறிவியல் ரீதியாக பார்த்தால், படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்துதான் குங்குமம் தயாரிக்கிறார்கள். இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச் சத்தாக மாறிவிடும். படிகாரம் கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வரவே வராது.
தொற்றுநோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கு செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.
1. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
2. மூளைக்கு செல்லும் நரம்புகள் அனைத்தும் நெற்றிப் பகுதியின் வழியாக செல்வதால் அவைகளை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி.
அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால்., குங்குமம் இட்டுக் கொண்ட எவரையும் வசியம் செய்வது கடினம். மேலும் குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
3. பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
4. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
5. தெய்வீகத்தன்மை, சுபத்தன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
6. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், உச்சி வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
7. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
8. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
9. குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
10. குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அலங்காரத்திற்காக இட்டுக்கொள்ளும் மற்றவைகளை குங்குமத்திற்கு கீழே இட்டுக்கொள்ள கூடாது.
குங்குமம் இருபுருவங்களுக்கு நடுவே இட்டுக் கொள்ளுவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
தூய்மையான மஞ்சள், எலுமிச்சை, படிகாரம் ஆகியவற்றின் பக்குவக் கலவையால் தயாரிக்கப்படுவதே செந்நிற குங்குமம்.
இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது. குங்குமத்தினால் முகம் களை பெறும்.
பெண்களின் நெற்றியின் முன் வகிடில் லட்சுமி தேவி உறைவதாகக் கூறுவர். நடுவகிட்டிலும் குங்குமம் இட்டுக் கொண்டால் பெண்கள் பிற ஆடவனின் மனதில் ஆசையைத் தூண்டாதவாறு தடுக்க முடியும்.
குங்குமம் அணிந்துள்ள மங்கையரை எத்தனை ஆண்கள் பார்த்து மோகித்தாலும் அவளை பிறர் அடைய முடியாது. அதனால் மங்கையின் கற்பு நிலைபெறும். ஹிப்னாடிசம், மெஸ்மரிசம், பிறர் சக்தி நம் மேல் ஏவுதல் போன்றவற்றை குங்குமம் அணிவதனால் மட்டுமே தடுத்திட முடியும் என்பது ஆராய்ந்தவர்களின் கூற்றாகும்.
இத்தகைய குங்குமத்தை அம்மனுக்கு அபிஷேகப் பொருளாய் பயன்படுத்தி வருகின்றனர். நம் நாட்டு சக்தி திருக்கோயில்களில் மகாலட்சுமியும், சக்தியும் வாசம் புரிகின்றனர் என்பர் சான்றோர். நீறுடன் குங்குமம் அணிவோருக்கு சோம்பல் இல்லை. தோல்வியில்லை.
சுறுசுறுப்பும் வெற்றியும் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை.
மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். அதனாலே தியானத்தில் நெற்றி பகுதி தூண்டப்படுகிறது. இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி.
இங்கு குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும். நெற்றி பகுதியில் குங்குமத்தை இட்டால் அமைதி கிடைக்கும்.
நெற்றியில் குங்குமம் இடுவதால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும்.
உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது. திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவற்றை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம்.
காசிக்கு சமமான ஆறு தலங்களில் ஒன்றானது திருவெண்காடு. இத்தலத்திலுள்ள ருத்ர பாதம் மற்றும் நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானை வழிபட்டால் பூர்வ ஜன்ம பாவங்கள் யாவும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. யுகம் பல கண்ட கோயில் இது. நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் இங்கு வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களும் தீர்க்கும் தலமாக இது கருதப்படுகிறது.
"காசியில் இருப்பது விஷ்ணு கயா. இங்கு வழிபட்டால் 7 தலைமுறைகளின் பூர்வ ஜன்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதிகம்.
கல்யாணம் தள்ளி தள்ளி போகுதா
தடைபடும் திருமணம் விரைவில்
நடக்க உதவும் ஆண்டாள் விரதம்..
ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும்.
ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள். எனவே ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது நடக்கும். திருமணம் ஆகாத பெண்கள் திருப்பாவையில் தினமும் ஒரு பாடலை பாடி வரவேண்டும்.
பூரத்தன்று ஆண்டாளுக்கு மாலை சார்த்தி வழிபட்டால், உடனே திருமணம் கை கூடும்.வாரணம் ஆயிரம் பாடி வந்தால் பெண்கள் விரும்பிய கணவர் கிடைப்பார்.
பூரம் விரதம் போலவே திருவோணம் விரதமும்
மகிமை வாய்ந்தது.
🌹 🌿 நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.
🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
🌹 🌿 நவராத்திரி பற்றிய 75 சிறு குறிப்புகள் வருமாறு:-
🌹 🌿 1. சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.
🌹 🌿 2. தமிழ்நாட்டில் நவராத்திரி விழா, நாயக்கர் காலம் முதல் மக்கள் கொண்டாடும் 9 நாள் திருவிழாவாக மாறியது.
🌹 🌿 3. நவராத்திரி காலத்தில்தான் மக்களிடம் வரி வசூலிக்கும் முறையை
விஜய நகர மன்னர்கள் ஏற்படுத்தினார்கள்.
🌹 🌿 4. நவராத்திரி விழாவை பெரிய அரசர்கள் மட்டுமே கொண்டாட உரிமை இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு முதன் முதலாக நவராத்திரி கொண்டாடும் உரிமையை திருமலை நாயக்கர் வழங்கினார். இதுவே தமிழகத்தில் நவராத்திரி விழா பரவ வழி வகுத்தது.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தில் மிக பிரம்மாண்டமான கொலு
(நாள் : 26.09.2022 – 04.10.2022, நேரம் : மாலை 06.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை)
சிதம்பரம் சைவர்களுக்கு கோயில் என்றாலே பொருள்படுவது.
வேத நெறி வழிபாடுகளுக்கு சிறப்புற்றது.
திருமுறைகளை வெளிக்கொணர்ந்த தலமாகப் போற்றப்படுவது.
அனுதினமும் ஆடல்வல்லப் பெருமானாகிய நடராஜ மூர்த்தி ஆனந்தமாக நடனமாடி, தன்னை அண்டி வரும் அனைத்து பக்தர்களுக்கும் அருளை வாரி வழங்கும் அற்புதத் தலமாக விளங்குவது.
அனைத்துக் கலைகளின் செறிவும், நிறைவும் உள்ளடக்கிய திருத்தலமாக அமைந்தது.
இவ்வாலய, திருவிழாக்கள் மிக பிரம்மாண்டமான முறையில் மிகப் புகழ்மிக்கதாக அமையும்.
அவ்வகையில், நவராத்திரி விழாவும் மிக மிக பிரம்மாண்டமான முறையில்,
ஸ்ரீ ஸபாநாயகர் கோயில் பொது தீக்ஷிதர்களின் வழிகாட்டுதலில்,