'புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...' என்று சொல்லி,
அவர்களை, எமதர்மன் உபசரித்ததைப் பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து,
'இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்!
அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும்,
ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறீர்களே...' என்று கேட்டான்.
அதற்கு எமதர்மன், 'இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர்,
தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.
அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.
"மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.
ஒருநாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது,
இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர்,
அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர்.
அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...' என்றார் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு,
'சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத் தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...'
என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றார்.
இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.
அதனால்தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், 'என் பணமும் அதில் சேரட்டும்...' என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
நம்முடைய குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குகிறோம்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம் கூடவே இருந்து வழிகாட்டும் அருள்சக்தியாகக் கருதப்படுகிறது.
பெரும்பாலான சிலருக்கு தங்கள் குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் இருக்கும்.
இதனால் அவர்களுக்கு பல சோதனைகள் ஏற்படுவதாகச் சொல்வதுண்டு.
இப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் வழிபாடு செய்வதற்கென்றே அகத்தியர் பூஜித்த துர்க்கை கோவில் கும்பகோணம் அருகிலுள்ள குத்தாலத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திலுள்ள கதிராமங்கலத்தில் உள்ளது.
கதிர் வேய்ந்த மங்கலம் என்று கவிச்சக்கரவர்த்தி கம்பர் இவ்வூரைக் குறிப்பிடுகிறார்.
*நவராத்திரியில், கொலுவுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் பெறுவது, பெண்களுக்கு வழங்கும் தாம்பூலம் தான்*
தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப்பெயர்.
வீட்டிற்கு பெண்கள், பெண் குழந்தைகள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தர வேண்டும். குறைந்த பட்சம் மஞ்சள் , குங்குமமாவது தர வேண்டும்.
வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வசிப்பதால் , வெற்றிலை சத்தியத்தின் சொரூபமாக பார்க்க படுகிறது,
எல்லா தெய்வ பூஜைகளிலும், தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்கு வெற்றிலை, பாக்கு மிகவும் அவசியம். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
அஷ்ட லக்ஷ்மியின் திருவருளைப் பெற, தினமும் அல்லது வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அரிசி மாவினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கோலத்தை போட்டு,
அதைச்சுற்றி, மஞ்சள் பொடியால் அதேபோல் வரைந்து, நடுவில் மஞ்சள் குங்குமமிட்டு, இரண்டு பக்கமும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
*வழிபாட்டு முறை:*
லக்ஷ்மி விக்ரகம் இருந்தால், அதை பட்டுத்துணியில் எழுந்தருளப் பண்ணி, பின் அர்ச்சனை செய்ய வேண்டும்.
வெற்றிலை, பாக்கு, பழம், பூ (வாசனை உள்ள பூக்கள் மட்டும்) வெண் சாமந்தி, மஞ்சள் நிற சாமந்தி, தாமரை சாத்தவும். அர்ச்சிக்கவும் உகந்தவை. பால் பாயசம் செய்து நைவேத்தியம் செய்யலாம் அல்லது துளசியிலை போட்டு தீர்த்தம் உசிதம்.
நவகன்னிகா வழிபாடு என்பது நவராத்திரி ஒன்பது நாட்களிலும் இரண்டு முதல் ஒன்பது வயது வரையிலுள்ள சிறுமிகளை அம்பாளாக பாவித்து, வயது வரிசைப்படி, ஒரு நாளைக்கு ஒரு குழந்தை வீதம், குழந்தைகளுக்கு அலங்காரம் செய்து, பூஜித்து வழிபடுவது முறையாகும்.